ஊரடங்கு தொடரலாமா? மத்திய அரசு ஆலோசனை

Advertisements

கோப்புப்படம்

கொரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு முறை படிப்படியாகத் தளர்த்தப்படும் என அன்லாக் செயல்முறையை மத்திய அரசு அறிவித்தது. அன்லாக் செயல்முறை 30ஆம் தேதி நிறைவடைய உள்ள சூழலில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.

இப்போது வரை நாட்டில் 14 லட்சத்து 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இதில் 9 லட்சத்து 18 ஆயிரத்து 735 பேர் குணமடைந்துள்ளனர். நாள்தோறும் சராசரியாக 50 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த சூழலில் ஊரடங்கு தளர்த்துவது என்பது ஆபத்தான விஷயம்தான் என மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதற்கிடையே தமிழ்நாடு முதல்வர் கடந்த 10 நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், “ஊரடங்கை நீட்டிக்க எந்த திட்டமும் இல்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். கொரோனா ஊரடங்கு தொடங்கியதிருந்து இதுவரை அனைத்து மாநில முதல்வர்களுடன் 6 முறை பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

இப்போதைய நேரத்தில் நாட்டில் கொரோனா பாதிப்பிற்கு ஆளாபவர்களில் 63. 45 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கை என்பது 2. 38 சதவீதமாக உள்ளது.

You may also like...