டெல்லியில் பொது முடக்கத்தில் தளர்வு

Advertisements

kejriwal

kejriwal
கொரோனா பாதிப்பும் பலி எண்ணிக்கையும் இந்தியளவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் ஜூலை 31க்கு பிறகு பொது முடக்கம் மேலும் நீட்டிக்கப்படுமா, அல்லது தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்ற விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளன. கடந்த மாதத்தில் டெல்லியில் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வந்த நிலையில் டெல்லியே தேசிய அளவில் இரண்டாம் இடம் வகித்தது. ஆனால் அங்கு இந்த மாதம் பாதிப்பு, பலி எண்ணிக்கை வேகம் குறிப்பிடத்தக்க வகையில் குறைக்கப்பட்டுள்ளது.

விரிவான மருத்துவ பரிசோதனைகள், ஆக்ஸிமீட்டர், விரைவான ஆம்புலன்ஸ் திட்டம், மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் தயார்படுத்துதல், அவசர சிகிச்சை மையங்களில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்துதல் ஆகியவற்றை சரியாக நடைமுறைப்படுத்தி கொரோனா பரவலைக் குறைப்பதில் டெல்லி மாடல் என்று இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் உலக நாடுகளுக்கும் தமது மாநிலம் முன் மாதிரியாக செயல்படுவதாக முதலமைச்சர்அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

“அடுத்த கட்ட பொது முடக்கத்துக்கு அவசியமில்லை. திருப்தியளிக்கக்கூடிய வகையில் இருக்கிறது” என்றும் கூறியுள்ளார்.

You may also like...