ராமர் கோவிலுக்கு அடியில் ‘டைம் கேப்சூல்’ புதைக்கப்படுமா?

Advertisements
அயோத்தியில் அமைக்கப்படும் ராமர் கோவிலுக்கு அடியில் ‘டைம் கேப்சூல்’ புதைக்கப்படுமா? - ராமஜென்மபூமி அறக்கட்டளை மறுப்பு
அயோத்தியில் வருகிற 5-ந்தேதி ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கிறது. மிகவும் பிரமாண்ட முறையில் அமைய உள்ள இந்த கோவிலின் கட்டுமான பணிகளை ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொள்ள உள்ளது.
நீண்ட கால சட்ட போராட்டத்துக்குப்பின் அமைய உள்ள இந்த கோவில் தொடர்பாக, எதிர்காலத்தில் பிரச்சினை எதுவும் வராமல் இருப்பதற்காக கோவிலுக்கு அடியில் ‘டைம் கேப்சூல்’ ஒன்று புதைக்கப்படும் என செய்திகள் வெளியாகின. குறிப்பாக அயோத்தி வரலாறு மற்றும் கோவிலுக்காக நடந்த சட்ட போராட்டங்கள் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் அந்த கேப்சூலில் வைத்து கோவிலுக்கு அடியில் 2 ஆயிரம் அடிக்கு கீழே புதைக்கப்படும் என ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவலாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இந்த தகவலை ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மறுத்து உள்ளது. இது குறித்து அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், டைம் கேப்சூல் தொடர்பாக வெளியான தகவல்கள் அனைத்தும் பொய் என தெரிவித்தார். கோவில் தொடர்பாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை வெளியிடும் தகவல்கள் மட்டுமே உண்மையானவை என கூறிய அவர், இது தொடர்பாக உண்மையான செய்திகளை மட்டுமே மக்கள் பகிர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

You may also like...