சீன விமானப் படையால் உருவாகும் அச்சுறுத்தலையும் ரஃபேல் தவிடுபொடியாக்கிவிடும்- இந்தியா

Advertisements

சீனாவுக்கு எதிராக ரஃபேல்… இந்தியா மாஸ்டர் பிளான்!

ரஃபேல்

ந்தியா, சீனா இடையே எல்லை பிரச்சினை மூன்று மாதங்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டால் அதன் முடிவை ரஃபேல் போர் விமானங்களே தீர்மானிக்கும் என்று இந்திய விமானப் படையின் முன்னாள் தலைமை மார்ஷல் பி.எஸ்.தனோவா தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து ஐந்து ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வந்துள்ளன. இதுகுறித்து பி.எஸ் தனோவா இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திடம் பேசியபோது, “ரஃபேல் விமானத்தில் மின்னணு போர்த்திறன் வசதி, கண்ணுக்கெட்டிய தொலைவை தாண்டி ஏவுகணைத் தாக்குதல் நடத்தக்கூடிய திறன், SCALP வானில் இருந்து தரைக்கு தாக்குதல் நடத்தக்கூடிய திறன் உள்ளிட்ட பல அம்சங்கள் இருக்கின்றன.

சீன விமானப் படையால் உருவாகும் எந்தவொரு அச்சுறுத்தலையும் ரஃபேல் தவிடுபொடியாக்கிவிடும். இந்திய விமானப் படையால் எதிரியின் வான்வழி பாதுகாப்பை அடக்கி அழிக்க முடிந்தால், ஹொடான் விமானப் படைத் தளத்திலும், லாசா விமான நிலையத்திலும் இருக்கும் சீன போர் விமானங்களே நமது டார்கெட்டாக இருக்கும்.

ஹோடானில் சுமார் 70 சீன விமானங்கள் பாதுகாப்பில்லாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. லாசா விமானத் தளத்தில் 26 விமானங்கள் பெரிய குழாய்களுக்குள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சீனாவின் தரையிலிருந்து வான்வழித் தாக்குதல் நடத்தக்க்கூடிய ஏவுகணைகளே பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.

சீனாவின் ஜே-20 போர் விமானங்களுக்கு புதிய ரஃபேல் விமானங்களுக்கும், Su-30 MKI ரக விமானங்களும் தக்க பதிலடி கொடுக்கும். சீன போர் விமானங்கள் ரஃபேலுக்கு நிகரில்லை. நான் சொல்வது போல ரஃபேல் விமானம் ஆட்டத்தையே மாற்றிவிடும்” என்று தெரிவித்துள்ளார்.

You may also like...