பிளாஸ்மாவை தானமாக அளித்தால் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் -ஆந்திர அரசு

Advertisements
கோப்புப்படம்

கோப்புப்படம்
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. அதற்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையே, பிளாஸ்மா தெரபி எனப்படும் குருதி நீர் சிகிச்சையும் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர்களிடம் இருந்து பிளாஸ்மா எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் உடலில் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதையடுத்து, கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பிளாஸ்மா சிகிச்சை முறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்தது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்கள் பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்த தொடங்கியுள்ளன. பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட பல்வேறு நபர்கள் குணமடைந்தும் வருகின்றனர்.

எனினும், கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்தலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது தொடர்பான ஆராச்சியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்டு வருகிறது. எனவே, ஐ.சி.எம்.ஆர். தனது ஆய்வை முடிக்கும் வரை பிளாஸ்மா சிகிச்சையை ஆராய்ச்சி அல்லது சோதனை நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5,000 ஊக்கத்தொகை  வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் 

முன்னதாக, கொரோனா வைரஸ் பாதித்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மாவை தானமாக அளித்தால் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக பிளாஸ்மா தானத்தை ஊக்கப்படும் வகையில் தற்போது ஆந்திர அரசும் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...