ஊரடங்கால் சிறுமிகள் கர்ப்பம்-அரசு அதிகாரிகள்

Advertisements

கோப்புப்படம்
கொரோனா வைரஸ் பலரது வாழ்க்கையையும் பலவகையில் புரட்டி போட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு , குடும்ப வன்முறைக்கு அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளது. அதேசமயம், இளம் பெண்களின் வாழ்க்கையை மோசமாக பாதிப்படைந்துள்ளது. இந்த காலகட்டத்தில், பாலின அடிப்படையிலான வன்முறை, சுரண்டல், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் உலகளவில் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 1,52,000 சிறுமிகள்  கர்ப்பமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது அந்நாட்டில் ஒரு மாதத்தில் நிகழும் சராசரி கர்ப்ப தரிப்பை விட 40 சதவீதம் அதிகமாகும்.

அத்துடன், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சுமார் 1,50,000 க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கென்யாவில் மட்டும் 1000 சிறுமிகளில் 82 பேர் கர்ப்பம் தரிக்கின்றனர். இது உலகிலேயே அதிகமாகும்.

இதேபோல், மற்றொரு கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதன் மூலம், அந்நாட்டில் சுமார் 7000க்கும் அதிகமான

இந்த தகவலை அரசு அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர். மேலும், பள்ளிகள் மூடப்பட்டதற்கு பின்னரே சிறுமிகள் கர்ப்பம் தரிப்பது அதிகமாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

You may also like...