பிரதமர் மோடிஆகஸ்ட்-1 மாலை மீண்டும் உரை

Advertisements

ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் பிரதமர் நரேந்திர மோடி, மனதின் வார்த்தைகள் (மான் கி பாத்) நிகழ்ச்சியின் மூலம் வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.அத்துடன், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட கடந்த நான்கு மாதங்களில் அவர் பலமுறை நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இந்த நிலையில், நாளை மாலை 4.30 மணியளவில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு மீண்டும் உரையாற்ற உள்ளார். இந்த முறை அவர், புதிய கல்விக் கொள்கைகுறித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கைகக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இக்கல்விக் கொள்கை குறித்த பிரதமர் மோடியின் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.முன்னதாக, அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சிலின் 45 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, இரு நாடுகளின் வர்த்தக பிரமுகர்கள் பங்கேற்ற உச்சி மாநாட்டு கடந்த 22 ஆம் தேதி (ஜூலை 22) ஏற்பாடு நடைபெற்றது.

You may also like...