9 நகரங்களில் 100 டிகிரி வெயில்

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் குடிநீர் தொட்டி உள்ளது. ஆனால் தண்ணீர் வரவில்லை. கோடை வெயில் தொடங்கிய நிலையில் தண்ணீர் குடிக்க வரும் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். படம்:ஜெ.மனோகரன்

தமிழகத்தில் 9 நகரங்களில் நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை விட அதிகமாக வெயில் பதிவாகி இருந்தது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வெப்பநிலை 106 டிகிரி வரை உயர்ந்திருந்தது. நேற்று வெப்பநிலை சற்று குறைந்து காணப்பட்டது. நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி அதிகபட்சமாக சேலத்தில் 103 டிகிரி, திருத்தணி, தருமபுரி, கரூர் பரமத்தி ஆகிய இடங்களில் தலா 102 டிகிரி, மதுரையில் 101 டிகிரி, வேலூர், திருச்சி, நாமக்கல், கோவை ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி இருந்தது.

அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தின் உள் பகுதியில் சுமார் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *