Category: செய்திகள்

[:en]செய்திகள்[:]

அமெரிக்காவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி

அமெரிக்காவில் தொற்று குறைந்து வந்த நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்தி தளர்வுகளை பல மாகாணங்களும் அறிவித்த நிலையில் தொற்று மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியது. இதையொட்டி, அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணரும், வாஷிங்டன் வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிக்குழுவின் உறுப்பினருமான டாக்டர் அந்தோணி… மேலும்

4 மாவட்டங்களில் 24 மணிநேரத்தில் பலத்த மழை

வேலூர், திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:- வேலூர், திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்… மேலும்

கந்த சஷ்டி கவசத்துடன் மோதும் கருப்பர் கூட்டம்

கந்த சஷ்டி கவசமும் பேஸ்புக்கில் நடக்கும் மோதலும்… பேஸ்புக்கில் நெட்டிசன்கள் என்ற தனியே ஒரு சமூகம் இருந்தாலும், கருத்தியல் ரீதியாக பிளவுபட்டு பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சமயங்களில் ஆரோக்கியமான விவாதங்களையும் பல நேரங்களில் குழாயடி சண்டையைப் போல் வாய் சண்டை இடுவதையும் பலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதன்… மேலும்

அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் காலியான பெங்களூரு

பெங்களூருவில் இன்று முதல் ஒருவார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் இத்தகைய நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இதனால் ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்துச் செல்வதை காண முடிந்தது. கிட்டதட்ட ஊரே வெறிச்சோடி போகும் அளவிற்கு பொதுமக்கள்… மேலும்

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை நிர்வகிக்க திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு உரிமை

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவில், நாடு முழுவதும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஆறு பாதாள அறைகள் இருப்பதாக கூறி, அவற்றினுள் என்ன இருக்கிறது என்பதை திறந்து பார்க்க உத்தரவிட வேண்டும் என்று கோரி கடந்த 2011-ம் ஆண்டில் கோவிலுக்கு அருகே வசிக்கும் வக்கீல் சுந்தரராஜன் என்பவர்… மேலும்

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் கூகுள் நிறுவனம் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு

தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் குடியேறி இன்று புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் சுந்தர் பிச்சை. இவர் பிரதமர் மோடியை பல முறை நேரில் சந்தித்து பேசி உள்ளார். தற்போது கொரோனா தொற்றால் இந்தியா மட்டுமின்றி உலகமே முடங்கி இருக்கும் நிலையில் நேற்று இருவரும்… மேலும்

கொரோனாவால் குணமடைந்த உடலில் நோய் எதிர்ப்பு சக்தி 3 மாதங்களில் போய்விடும் – இங்கிலாந்து

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி சார்பில் கொரோனாவால் குணமடைந்த 90-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், குணமடைந்த 3 வாரங்கள்வரை மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி அதிகபட்ச திறனுடன் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு வேகமாக குறைந்தது. 60 சதவீத நோயாளிகளுக்கு வலிமையான நோய் எதிர்ப்பு… மேலும்

97 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப மாட்டார்கள்-கொரோனா பிறகு

கொரோனா காரணமாக ஊரடங்கு நிலவுவதால், உலகம் முழுவதும் 160 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளனர். கொரோனா பிரச்சினையால் உலகம் முழுவதும் வறுமை அதிகரிக்கும். கல்விக்கு அரசுகள் பட்ஜெட்டில் ஒதுக்கும் தொகை குறையும். இதனால், ஊரடங்கு முடிந்த பிறகு குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப செல்லாமல் இருக்கும் ஆபத்து,… மேலும்

கொரோனா உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும்

சுகாதாரம் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க தவறினால் கொரோனா பெருந்தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பிய, ஆசிய நாடுகள் பல கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டுள்ளன.இருப்பினும் இன்னமும் பல நாடுகள்… மேலும்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 78,573 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு 48,196 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 77,411 லிருந்து 78,573 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 87,111 ஆண்கள், 55,664 பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் 23 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி… மேலும்

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா

அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, அமிதாப்பச்சனின் மனைவி நடிகை ஜெயாபச்சன், அபிஷேக் பச்சனின் மனைவியும், முன்னாள் உலக அழகியுமான 46 வயது ஐஸ்வர்யா ராய், அவரது 8 வயது மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையின் முடிவில் ஐஸ்வர்யா ராய்க்கும்,… மேலும்

கொரோனா பற்றிய ரகசியத்தை கசியவிட்ட சீன விஞ்ஞானி

ஹாங்காங்கில் இருக்கும் வைராலஜி மற்றும் நோய் எதிர்ப்புத்துறையில் நிபுணத்துவம் பெற்ற லி மெங் யான்  என்ற பெண் விஞ்ஞானி நேற்று பாக்ஸ் நியூஸூக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள லி மெங் தான் இருக்கும் இடத்தைப் பற்றி குறிப்பிடாமல் பேசியுள்ளார். அதில், கடந்த ஆண்டு… மேலும்

ஒரே நாளில் 66,258 பேருக்கு கொரோனா-அமெரிக்கா

சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.  கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடே தடுமாறி வருகிறது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில்… மேலும்

ஹாங்காங் மக்கள்ளுக்கு ஆஸ்திரேலியா குடியுரிமை

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, சீனா ஹாங்காங்குக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் கீழ், பிரிவினைக்கு குரல் கொடுப்போர், சீனாவுக்கு எதிராக பிரசாரம் செய்வோர் உள்ளிட்டோரை, தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யலாம். சீனாவின் இந்த புதிய சட்டத்தால் பாதிக்கப்படும் ஹாங்காங் மக்களுக்கு… மேலும்

(ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தனது கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. கொரோனாவின் தாக்கம் நமது நாட்டிலும் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் காணப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு… மேலும்

மும்பை தாராவிக்கு உலக சுகாதார மையத் தலைவர் பாராட்டு

உலகின் மிகப்பெரிய சேரிகளில் மும்பை தாராவியும் ஒன்று. தாராவியில் ஏப்ரல் 1ஆம் தேதியன்று முதல் கொரோனா தொற்று ஏற்பட்டது. தாராவி மிக நெருக்கமான சேரி என்பதால் சேரிகளிலும், பாழடைந்த சிறு கட்டடங்களிலும் மக்கள் வசித்து வருகின்றனர். மிக குறுகிய சாலைகள், திறந்தவெளி சாக்கடைகள் என தாராவியில் நெருக்கடிகள்… மேலும்

இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என எந்த உத்தரவாதமும் இல்லை-அமெரிக்கா

ஜூன் 15ஆம் தேதியன்று கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது. பிரச்சினையை தீர்க்க இருதரப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தியாவும் சீனாவும் மோதிக்கொள்வதை விட நண்பர்களாக இருப்பதே சிறந்தது என… மேலும்

முக்கியச் செய்தி-தமிழ்நாடு

தமிழகத்தின் முக்கியச் செய்திகள்: * ஆன்லைன் கல்வி பிரபலமடைந்து வரும் வேளையில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 10 சேனல்கள் தயாராக உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஆன்லைன் மூலம் பாடம் நடத்தினால் மாணவர்களுக்கு கண் பார்வை… மேலும்

ரூ.45 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்-கோவை

சிக்கிய ஹவாலா பணம் தமிழக கேரள எல்லையான வாளையாரில் ஆட்டோ மூலம் கடத்த முயன்ற 45 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்விவகாரத்தில் கோவையை சேர்ந்த இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தமிழக கேரள எல்லையான வாளையார் சோதனை சாவடியில்… மேலும்

இந்தியாவும், சீனாவும் நண்பர்கள்-சீன தூதர்

இந்தியாவுக்கும், சீனாவுக்கு இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருவதால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றநிலை தொடர்ந்து நிலவுகிறது. தற்போது பிரச்சினையை தணிப்பதற்காக இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சினையை தீர்க்க பேச்சுவார்த்தை தொடரும் என சீன அரசும் நேற்று தெரிவித்தது. இந்நிலையில் இந்தியாவுக்கான சீன தூதர் சன் வீடோங்… மேலும்