BBC News தமிழ் - முகப்பு BBC News தமிழ் - முகப்பு
- இலங்கை நெருக்கடி: 65,000 மெட்ரிக் டன் யூரியா வழங்க இந்தியா இணக்கம்on May 16, 2022 at 4:13 am
இலங்கையில் பெரும்போக விவசாயத்துக்கான யூரியாவை விநியோகம் செய்வது தொடர்பாக நடத்திய ஆலோசனையை அடுத்து இதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது
- முள்ளிவாய்க்கால் ஆண்டு தினத்தில் தாக்குதலா? இந்திய நாளிதழ் செய்தியால் இலங்கையில் உஷார்நிலை!on May 16, 2022 at 1:54 am
இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்த செய்திக் குறிப்பு பற்றி இந்திய உள்துறை அமைச்சக உயரதிகாரியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "இலங்கையில் தற்போது நீடித்து வரும் நெருக்கடி மற்றும் மக்கள் போராட்ட எழுச்சி தொடர்பாக ஏற்கெனவே தமிழ்நாடு காவல்துறையின் உளவுப்பிரிவுக்கும் சென்னையில் உள்ள உளவுத்துறை அலுவலகத்துக்கும் எச்சரிக்கை குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது," என்று கூறினார்.
- 'விக்ரம்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேச்சு: "தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை!"on May 16, 2022 at 1:52 am
"எந்த மொழியையும் ஒழிக என்று சொல்ல மாட்டேன். ஆனால், தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை" என, கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
- பெண் குழந்தைகளுக்கு 5 வயதில் முதல் திருமணம்: மாலிஸ் பழங்குடிகளின் விநோத பழக்கம்on May 16, 2022 at 1:04 am
பெண் குழந்தை உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இந்த 3 திருமணச் சடங்குகள் கட்டாயம். செலவுகளைத் தாங்க முடியாத குடும்பங்களுக்கு, திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் உதவுகிறார்கள்.
- நிலவின் மண்ணில் இரண்டே நாட்களில் வளர்ந்த செடிகள் - அறிவியல் சொல்லும் செய்தி என்ன?on May 15, 2022 at 4:54 pm
“இந்த ஆராய்ச்சி நாசாவின் மனிதர்களை நிலவுக்குக் கொண்டு செல்வது குறித்த நீண்டகால ஆய்வு இலக்குகளில் முக்கியமானது. ஏனெனில், எதிர்கால விண்வெளி வீரர்களுக்கு, நிலவிலும் செவ்வாய் கிரகத்திலும் உணவுக்கான வாய்ப்பை இதன்மூலம் உருவாக்க முடியும்."
- அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 4 வயது குழந்தை - அரசு மருத்துவர்களின் முயற்சியால் மீண்ட தருணம்on May 15, 2022 at 4:06 pm
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் நான்கு வயது ஆண் குழந்தைக்கு தொடர்ந்து உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கவலைப்பட்ட பெற்றோர், சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
- நெல்லை கல்குவாரியில் பாறை சரிவு: ஒருவர் உயிரிழப்பு, மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்on May 15, 2022 at 3:44 pm
வெங்கடேஸ்வரா கல்குவாரியில் வழக்கம்போல் நேற்றிரவு கல்களை ஏற்றும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இரவு சுமார் 12 மணி அளவில் திடீரென மிகப்பெரிய பாறை உருண்டு பள்ளத்துக்குள் கல் அள்ளும் பணி நடந்த பகுதியில் விழுந்தது.
- சந்திர கிரகணம்: மே 15-16 தேதிகளில் இந்திய நேரப்படி எங்கு, எப்போது, எப்படி பார்க்கலாம்?on May 15, 2022 at 2:34 pm
ஐரோப்பின் பெரும்பகுதிகளில் திங்களன்று பொழுது விடிவதற்கு முன்னதாக இதை பார்க்க முடியும். ஞாயின்று அமெரிக்காவில் இது முழுவதுமாக காட்சியளிக்கும்.
- இலங்கை நெருக்கடி: தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகள் நிலை என்ன?on May 15, 2022 at 2:02 pm
2010 முதல் மார்ச் 2022 வரை 15,952 நபர்கள் தமிழக முகாம்களில் இருந்து இலங்கைக்கு சென்றுள்ளனர் என இலங்கை ஏதிலியர் மறுவாழ்வு கழகம் கூறுகிறது.
- ஞானவாபி மசூதியில் ஆய்வு: இது ஏன் சர்ச்சையாகிறது? இதில் என்னதான் பிரச்னை?on May 15, 2022 at 12:23 pm
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் களஆய்வு நடத்துமாறு கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கவும் அங்கு தற்போதைய நிலையே தொடரவும் மனுதாரர்கள் விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. அதே சமயம், இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
- இஞ்ஜினியரிங் படிக்காமலேயே சாஃப்ட்வேர் இஞ்ஜினியர் ஆவது எப்படி?on May 15, 2022 at 11:07 am
இந்தியாவில் உள்ள மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் மொத்தமுள்ள இடங்களில் பாதி இடங்களுக்கு சேர்க்கையில்லை என்று தெரிவிக்கிறது பத்திரிக்கை செய்திகள். ஆனால் அதே சமயம் தங்களது வேலைக்கு சரியான ஆட்கள் இல்லை என்று நிறுவனங்களும் கூறிவருகின்றன. நிலவரம் என்ன?
- தமிழர் தேவசகாயத்துக்கு புனிதர் நிலை - நீண்ட இழுபறிக்கு பிறகு அங்கீகாரம், யார் இவர்?on May 15, 2022 at 9:18 am
இதுவரை புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்ட புனித அல்போன்சாள், புனித அன்னை தெரசா அனைவரும் ஏதாவது ஒரு துறவற சபையை சார்ந்தவர்கள். இந்தியாவில் சாதாரண மனிதர் ஒருவர் புனிதராக உயர்த்தப்படுவது இதவே முதல் முறையாகும்.
- இலங்கை எம்.பி அமரகீர்த்தி அத்துகோரல மரணத்தில் திடீர் திருப்பம்on May 15, 2022 at 8:28 am
கொழும்பு புறநகர் பகுதியில் அண்மையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி அமரகீர்த்தி அத்துகோரலவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது.
- தேவசகாயம்: வத்திக்கான் தேவாலய விழாவில் ஒலித்த 'தமிழ்த்தாய் வாழ்த்து'on May 15, 2022 at 6:25 am
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மனோ தங்கராஜ் , செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். அருட்சகோதரிகளின் தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
- இலங்கை உள்நாட்டுப் போர் ஏற்பட காரணமான 'கருப்பு ஜூலை' - வரலாறுon May 15, 2022 at 5:26 am
இலங்கை உள்நாட்டுப் போர் தொடங்க பல்வேறு காரணங்கள் இருந்தாலும், முக்கியமானதாக இருந்தது கருப்பு ஜூலை சம்பவம். விடுதலைப்புலிகள் அமைப்பு, 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி, முதல்முறையாக ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. சிங்கள இனவாதக் குழுவினர் அதற்குப் பழி வாங்கினர்.
- அமெரிக்க சூப்பர் மார்க்கெட் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி - என்ன நடந்தது?on May 15, 2022 at 4:21 am
இந்த சம்பவத்திற்கு காரணமாக சந்தேகிக்கப்படும் நபர், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னர் சனிக்கிழமை பிற்பகல் சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்தார். இந்த தாக்குதலை, அவர் இணையத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்ய ஒரு கேமராவை பயன்படுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.
- லக்பா ஷெர்பா - வீட்டு வேலை பார்த்துக் கொண்டே 10-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்on May 15, 2022 at 1:25 am
நேபாளைச் சேர்ந்த ஒற்றைத் தாயான லக்பா ஷெர்பா, ஒரு குகையில் தான் பிறந்தார். அவருக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை. தொடக்கத்தில், அவர் வாயிற்காவலராகப் பணியாற்றினார்.
- டெல்லி தீ விபத்து: காணாமல் போன உறவுகளை தேடும் குடும்பங்கள்on May 15, 2022 at 12:58 am
தீ விபத்து ஏற்பட்டபோது கட்டடத்தின் உள்ளே இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். அவர்களின் நிலையை அறிய பல குடும்பங்கள் கண்ணீருடன் சம்பவ பகுதியிலும் மருத்துவமனைகளிலும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
- ப. சிதம்பரம்: "இந்திய பொருளாதார கொள்கைகளை ரீசெட் செய்யுங்கள்" - 10 தகவல்கள்on May 14, 2022 at 3:10 pm
பொருளாதாரக் கொள்கைகளின் மறுசீரமைப்பு, அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகள், மக்கள்தொகையில் அடிமட்ட 10 சதவீதத்தினரிடையே உள்ள தீவிர வறுமை, உலகளாவிய பசி குறியீடு 2021 இல் இந்தியாவின் தரவரிசை (116 நாடுகளில் 101) மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் இடையே பரவலாக ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதற்கான சான்றுகள் போன்ற கேள்விகளுக்கு தீர்வு காண வேண்டும் என்கிறார் ப. சிதம்பரம்
- அறிவியல் அதிசயம்: பால்வெளி மண்டலத்தின் நடுவில் பிரமாண்ட கருந்துளை – வியப்பூட்டும் உண்மைகள்on May 14, 2022 at 2:21 pm
இந்த ராட்சத கருந்துளை, நம் சூரிய மண்டலத்தில் இருந்து சுமார் 26,000 ஒளியாண்டுகள் (ஓராண்டில் ஒளி பயணிக்கக்கூடிய தொலைவு= 9.4607 × 1012கி.மீ) தொலைவில் உள்ளது. இது நம் சூரியன் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? இதனால் பூமிக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா?
- கல்வராயன் மலை: கொடுமையின் உச்சத்தில் கிராமங்கள் - கள நிலவரம்on May 14, 2022 at 12:55 pm
"இது வானம் பார்த்த பூமி. பம்ப்செட்டோ, கிணறுகளோ கிடையாது. பெரும்பாலும் மரவெள்ளிக் கிழங்கும் பருத்தியும்தான் பயிரிடுவார்கள். பல இடங்கள் காப்புக்காடுகளாக வரையறுக்கப்பட்டதால், அவர்களால் முழுமையாக விவசாயம் செய்யவும் முடியாது."
- டெல்லி முண்ட்கா தீ விபத்து - குறைந்தது 27 பேர் பலிon May 14, 2022 at 9:00 am
டெல்லியில் உள்ள முண்ட்கா பகுதியில் இருக்கும் ஒரு கட்டடத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 27 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
- 'நெஞ்சுக்கு நீதி' சமூக நீதிக்கான படம் - அருண்ராஜா காமராஜ் பேட்டிon May 14, 2022 at 8:48 am
வரும் மே 20ஆம் தேதி வெளியாகும் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் குறித்தும், திரைத்துறையில் தனது அனுபவம் குறித்தும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பிபிசி தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி.
- காதல் உலக அதிசயம்: தாஜ் மஹாலின் பூட்டிய அறைகளில் உள்ள ரகசியங்கள் என்ன?on May 14, 2022 at 8:39 am
தாஜ்மஹாலின் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாறு ராஜ்னீஷ் சிங்குக்கு உவப்பானதாக இல்லை. "இந்த அறைகளின் பின்னால் என்ன இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிய வேண்டும்," என்கிறார் அவர்.
- பெண்களுக்கு மூன்று முறை திருமணம் செய்யும் ஆந்திர கிராமம்on May 13, 2022 at 3:25 am
மாப்பிள்ளை இல்லாமல் நடக்கும் திருமணம் என்றாலும் கிராமம் முழுவதும் ஒரே கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.
- கீதா குப்புசாமி: உயரம் குறைவுதான்; ஆனால் சாதிக்க அது ஒரு தடையல்ல - நம்பிக்கை கதைon May 13, 2022 at 1:02 am
உயரம் குறைவாக இருப்பதால் சமூகத்தில் பல்வேறு கேலி கிண்டல்களை சந்தித்த கீதா, இன்று 5 மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை கொடுக்கும் தொழில் முனைவோராக உயர்ந்திருக்கிறார்.
- இலங்கை: மஹிந்த ராஜபக்ஷ வசிக்க திருகோணமலை கடற்படை தளத்தை தேர்வு செய்தது ஏன்?on May 12, 2022 at 2:48 pm
இலங்கையில் தீவிரமாகி வரும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக அந்நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து சமீபத்தில் விலகியிருந்த மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள ரகசிய இடத்தில் முப்படை வீரர்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை.
- தமிழ்நாட்டில் தீண்டாமை கொடுமை கடைபிடிக்கும் 445 ஊர்கள்: ஆர்.டி.ஐ மூலம் வெளியான தகவல் என்ன?on May 12, 2022 at 7:51 am
தமிழ்நாடு முழுவதும் 445 கிராமங்களில் தீண்டாமை வன்கொடுமை கடைபிடிக்கப்படுவதாக தமிழ்நாடு காவல்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக மதுரையில் 43 கிராமங்களில் தீண்டாமை வன்கொடுமை கடைபிடிக்கப்படுகின்றன.
- ஜவுளித்துறையில் தொடரும் நெருக்கடிகளுக்கு காரணம் என்ன?on May 11, 2022 at 3:12 pm
18 மாதங்களுக்கு முன்னர் 200 ரூபாய் இருந்த ஒரு கிலோ நூலின் விலை தற்போது 490 ரூபாயாக உள்ளது. கிட்டத்தட்ட 150% விலை உயர்ந்துள்ளது. இதனால் ஆயத்த ஆடைகளின் விலையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது.
- பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய்க்குப் பிறகு கோதுமை மாவு விலையேற்றம் - காரணம் என்ன?on May 11, 2022 at 12:30 pm
ஒரு வருடத்திற்கு முன்பு, இந்தியாவின் சில்லறை சந்தையில் கோதுமை மாவின் சராசரி விலை குவிண்டல் ஒன்றுக்கு 2880 ரூபாயாக இருந்தது. இன்று அது அதிகரித்து குவிண்டலுக்கு 3291 ரூபாய உள்ளது.
- தமிழ்நாட்டு ஹாக்கி வீரர்கள் இந்திய அணியில்: 20 ஆண்டுகளுக்கு பின் சாத்தியமானது எப்படி?on May 11, 2022 at 6:09 am
இந்திய சீனியர் ஆண்கள் ஹாக்கி அணியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டு வீரர்கள் இருவர் தேர்வாகியுள்ளனர். இருவரும் எளிய பின்னணியில், தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதியில் பயிற்சி பெற்றவர்கள்.
- பாகிஸ்தானில் ஆணவக்கொலை: மாடலிங் செய்வது பிடிக்காமல் அக்காவை சுட்டுக் கொன்ற தம்பிon May 11, 2022 at 5:29 am
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஓக்ராவில், இளம் ஃபேஷன் மாடலான சித்ரா காலித், இளைய சகோதரர் ஹம்சா காலித் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தியாவின் தெற்கு நகரமான ஹைதராபாத்தில் நடந்த ஆணவக்கொலையைப் போலவே இந்த சம்பவம் உள்ளது.
- மே 2009, 2022: மஹிந்த ராஜபக்ஷ இலங்கை அரசியலில் பெற்ற உச்சமும் வீழ்ச்சியும்on May 10, 2022 at 12:57 pm
அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு வரும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்த மே மாதம் போல எதிர்ப்பும் சறுக்கலும் நிறைந்த மாதம் இதுவரை எதுவும் இல்லை. ஆனால், அவர் இலங்கையின் தற்கால அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்க உதவியதும் ஒரு மே மாதம்தான். அது 2009 மே.
- தருமபுர ஆதீன விவகாரம்: ஆதீனங்கள் என்றால் என்ன? அவை தோன்றிய வரலாறு என்ன?on May 6, 2022 at 12:07 pm
சைவ சித்தாந்தத்தை வளர்க்கவும் அதை மக்களிடையே பரப்பவும் மடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அப்படி தோற்றுவிக்கப்பட்ட மடங்களே ஆதீனம் என்று அழைக்கப்படுகின்றன.
- விண்வெளியில் இறைச்சி உற்பத்தி: வெற்றி பெறுமா புதிய பரிசோதனைon May 2, 2022 at 7:28 am
விண்வெளி வீரர்களைச் சார்ந்திருக்கும் அளவுக்கு இந்த இறைச்சி உற்பத்தி பரிசோதனை முறை மிகவும் நிலையானதாக இல்லையென்று இதுகுறித்து சந்தேகமுடையவர்கள் கூறுகின்றனர்.
- கொளுத்தும் வெயில்: என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்? எப்படி தற்காத்துக் கொள்வது?on May 2, 2022 at 1:18 am
அதீத வெப்பநிலை, இந்த கோடைக்காலத்தில் பொதுமக்களிடையே என்ன மாதிரியான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும், அவற்றிலிருந்து எப்படி மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்?
- யுக்ரேன் அதிபர் மனைவி ஒலேனா ஸெலென்ஸ்கா: திரைக்குப் பின்னிருந்து முக்கியப் பங்காற்றும் பெண்மணிon March 9, 2022 at 10:26 am
இருவரும் கல்லூரி நாட்களில் இருந்து ஒருவரையொருவர் அறிந்திருக்கிறார்கள், அங்கு அவர் தனது கணவர் சட்டம் படிக்கும் போது இவர் கட்டடக்கலை படித்து வந்தார்.பின்னர் இருவரும் தங்கள் துறையை மாற்றிக்கொண்டு நகைச்சுவையாளர்களாக வலம் வரத் தொடங்கினர்.
- ரிசர்வ் வங்கி கையேடு: எத்தனை விதமான நிதி மோசடிகள்? தற்காத்துக்கொள்வது எப்படி?on March 8, 2022 at 1:23 pm
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வாடிக்கையாளர் கல்வி மற்றும் பாதுகாப்புத் துறையின் பொது விழிப்புணர்வு முன்முயற்சியின் ஒரு பகுதியாக, நிதி மோசடிகளின் செயல்பாடுகள் குறித்த கையேட்டை வெளியிட்டுள்ளது, 'BE(A)WARE' என்ற தலைப்பில் கையேடு வெளியிட்டுள்ளது.
- 2021இல் உலகின் கவனத்தை ஈர்த்த மிகச் சிறந்த புகைப்படங்கள்on December 28, 2021 at 3:32 pm
இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியின் 100 கோடி டோஸ் செலுத்தப்பட்டதை குறிக்கும் வகையில், பெங்களூரில் உள்ள ராமையா மருத்துவமனையின் செவிலியர்கள் நான்கு பேர், இந்துக்கள் பரவலாக போற்றும் துர்கா தேவியின் (வலிமை மற்றும் வலிமையுடன் தொடர்புடைய) உருவத்தை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தது பரவலாக ரசிக்கப்பட்டது.