மனமாற்றம் தேவை (ஜப்பான் மக்களைப்போல்)

Advertisements

1945 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் மீது அமெரிக்கா நியூக்கிளியர் அணு குண்டு வீசியது…

71 ஆண்டுகள் கழித்தும் அமெரிக்காவால் ஒரு குண்டூசி கூட
ஜப்பானில் விற்பனை செய்ய இயலவில்லை…..!

ஜப்பான் அரசு அமெரிக்க நாட்டு பொருட்களுக்கு எந்த தடையையும் விதிக்கவில்லை.

நம் நாட்டின் மீது இப்படி ஈவு,இரக்கம் இன்றி நச்சு அணுகுண்டு வீசி விட்டதே என

“மக்களே எடுத்த தீர்க்க முடிவு”.

ஆனால் நாம் சீன போரில் நம் கைலாயத்தையும் இழந்து நமக்கு தொடர்ந்து எல்லைப் பிரச்சனைகளை தரும் சீன பொருட்களை வாங்குகிறோம்.

ஜப்பானியர் தேசப்பற்று எங்கே?.

நம் இந்தியர்களின் தேசப்பற்று எங்கே?.

தேசம் காத்த நம் முன்னோர்களின் உடல் பலிகளை மறந்து நாம் சீன பொருட்களை வெட்கம் இன்றி வாங்குகிறோம்.

COKE PEPSI தடை பண்ண சொல்லி போராடுவது வீண்….. முடிந்தவரை நாம் குடிக்காமல் இருந்தாலே போதும்.

TASMAC ஐ தடை செய்ய போராடுவது வீண், முடிந்தவரை நாம் குடிப்பதை நிறுத்திவிட்டாலே போதும்.

விவசாயிகள் பிரச்சினை பற்றி போராடுவது வீண். Super market ல் காய்கறி வாங்குவதை விட்டு சந்தையில் காய்கறி வாங்கினாலே போதுமானது.

அன்னியநாட்டு பொருட்களை இறக்குமதி செய்யாதே என கூறுவதை விட, நம் சொந்த நாட்டு தயாரிப்புகளை உபயோகித்தாலே போதுமானது.

அரசியல் வாதி சரியில்லை என்று கொடிபிடிப்பது வீண்.நாம் எத்தனை பேர் நல்ல குடிமகனாக இருக்கிறோம் என்று சிந்தித்தாலே போதும்.

ஆக எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் ஒவ்வொரு

தனிமனிதனின்

அலட்சியம்,
சோம்பேறித்தனம்,
சுயநலம்
மட்டுமே காரணம்…

இவை அனைத்தும் மாறினால் மட்டுமே நம் நாடும் வீடும் செழிக்கும்…

தனிமனிதனின் மாற்றமே சமூகத்தின் மாற்றம்

You may also like...

Leave a Reply