இன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் இருக்கும்

Advertisements

தமிழகத்தில் வேலூர், சேலம் உள்ளிட்ட 7 உள் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது. சனிக்கிழமையும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. 14 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி இருந்தது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘தமிழகத்தின் உள் மாவட்டங்களான வேலூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், மதுரை, திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இயல்பை விட வெப்பநிலை அதிகரித்து 104 முதல் 111 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் இருக்கும்

சனிக்கிழமை மாலை 5.30 மணி நிலவரப்படி, திருத்தணியில் 110.3, வேலூரில் 108.14, திருப்பத்தூரில் 105.8, திருச்சியில் 105.26, பாளையங்கோட்டையில் 104.9, மதுரையில் 104.36, கரூர் பரமத்தியில் 103.64, நாகப்பட்டினம் மற்றும் பரங்கிப்பேட்டையில் 102.2, சேலத்தில் 101.84, சென்னையில் 101.48, புதுச்சேரியில் 101.12, கடலூர், காரைக்காலில் 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி இருந்தது’ என்றார்

You may also like...

Leave a Reply