நஷ்டத்தில் இயங்கும் வங்கி கிளைகளை மூட வேண்டும்

Advertisements

‘புதிய வங்கி கிளைகளை திறக்கக் கூடாது; நஷ்டத்தில் இயங்கும் கிளைகளை மூட வேண்டும்’ என, மத்திய நிதி அமைச்சகம், வங்கிகளுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க பொதுச் செயலர் தாமஸ் பிராங்கோ கூறியதாவது:வங்கிகளின் சிறப்பான செயல்பாட்டுக்காக, ஊழியர் சங்கங்கள் சார்பில், பல பரிந்துரைகள், நிதி அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டன. அங்கிருந்து, அதற்கு மாறாக ஒரு சுற்றறிக்கை, வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

அதில், அடுத்த மூன்று ஆண்டுகளில், ஊதிய செலவினத்தை, 25 சதவீதம் குறைக்க வேண்டும்; புதிய ஊழியர்கள் நியமனம் கூடாது. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, நஷ்டத்தில் இயங்கும் கிளைகளை மூட வேண்டும் அல்லது வேறு கிளைகளுடன் இணைக்க வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது.அதிகரிக்கும் வாராக்கடன் சுமையை, ஊழியர்கள், அதிகாரிகள் மீது திணிப்பதை ஏற்க முடியாது. முக்கிய பணிகளை, தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவையும் திரும்பப் பெற வேண்டும்.

மேலும், வங்கி வாரியங்களுக்கு, உடனடியாக இயக்குனர்கள் நியமிக்க வேண்டும்; வாராக்கடன் முழு விபரங்களை வெளியிட வேண்டும்; விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இவற்றை ஏற்காவிட்டால், பரிந்துரை உத்தரவில் கையெழுத்திட மாட்டோம்; மாவட்ட தலைநகரங்களில், போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply