வியர்வை நாற்றமா விடு கவலை!

Advertisements

 

தற்போதய வெயில்காலம் வியர்வைநாற்றம்,
உடல் துர்நாற்றம் சங்கடமாக உள்ளதா?
கவலையைவிடுங்கள் !
நருமணத்திற்கு செயற்கை முறையில் தயாரிக்கும் பாடி ஸ்ப்ரே, சென்ட் போன்றவைகளை பயன்படுத்தி அலர்ஜி ,தோல்நோய்
ஏற்படுத்திக்கொள்ளாமல் எளிய இயற்கை முறையில் நருமண குளியல் பொடி நீங்களே தயாரித்து
பயன்படுத்தி பயன்பெறலாம் ..
தேவையானவை..

* கடலைமாவு
* பயித்தமாவு
* சீயக்காய்தூள்
* மாதுளை பழத் தோல்,ஆரஞ்சுபழத்தோல் இவைகளை உலர்த்தி பொடியாக்கவும் .
இந்த பொடிகள் அனைத்தையும் நன்றாக சலித்து வைத்துக்கொண்டு 250 கிராம் பவுடர் கலவைக்கு ஒருகிராம் மட்டும் பச்ச கற்பூரம் பொடியாக்கிஅதில் கலந்து வைத்துக்கொள்ளவும்.
இதை
குளிக்கும்போது ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் கலந்து
பேஸ்ட்டாகதேவைக்கேற்ப நீர்கலந்து தலை ,உடல் முழுக்க தேய்த்து குளித்துவரவும் .
மேலும்,
நாட்டு மருந்து கடையில்
* ரோஜா சூரணம்
*வெண்தாமரை சூரணம் இவற்றில் ஏதேனும் ஒன்றை தினசரி காலை,இரவு ஒரு டீஸ்பூன் எடுத்து காய்ச்சியபாலுடன் கலந்து தொடர்ந்துஅருந்திவரவும் .
இவ்வாறு தொடர்ந்து செய்துவர
உடல் துர்நாற்றம், வியர்வைநாற்றம் நீங்கும் .

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com