சம்பா தேவி கோயில்
தமிழக கேரள எல்லையில் இருக்கும் கண்ணகி (மங்கலதேவி) கோயில் யாருக்குச் சொந்தம் என்று அடித்துக்கொண்டிருக்கிறோம்…
ஆனால் பூம்புகாரில் இருக்கும் சிலப்பதிகாரக் கோயிலை அழியவிட்டுக் கொண்டிருக்கிறோம்….
சிலப்பதிகாரத்தில் வரும் ஒரே கோயில் பூம்புகாரில் உள்ள இந்த சம்பா தேவி கோயில்தான். பூம்புகார் நகர எல்லையில் சிதிலமடைந்து கிடக்கிறது இந்தக் கோயில்.
என்ன செய்யப்போகிறோம்?