அணு ஆயுத சோதனையை நிறுத்த முடியாது

Advertisements

அணு ஆயுத சோதனையை நிறுத்த முடியாது..முடிஞ்சத பாத்துக்குங்க..அமெரிக்காவுக்கு வடகொரியா அசால்ட் ரிப்ளை!
அணு ஆயுத சோதனையை நிறுத்த முடியாது என அமெரிக்காவுக்கு வடகொரியா பதிலளித்துள்ளது.
By: Kalai Mathi Updated: Friday, April 28, 2017, 10:42 [IST] Subscribe to Oneindia Tamil
பியாங்ஜியாங்: அணு ஆயுத சோதனையை நிறுத்த முடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மனோபாவம் நீடிக்கும் வரை அணு ஆயுத சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் வடகொரியார் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. இதற்காக அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை ஐநா சபையும், அமெரிக்காவும் விதித்துள்ளன.
புதிதாக மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. வடகொரியாவுக்கு எதிராக கடினமான நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்து வருகிறார்.
எப்போது வேண்டுமானாலும் போர்
எப்போது வேண்டுமானாலும் போர்
வடகொரியாவின் மீது எப்போது வேண்டுமானலும் போர்த்தொடுக்கப்படும் என ட்ரம்ப்பின் ஆலோசகர் கூறியுள்ளார். இதனால் அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே எப்போது வேண்டுமானலும் போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சோதனையை நிறுத்த முடியாது
சோதனையை நிறுத்த முடியாது
இந்நிலையில் வடகொரிய அரசின் மூத்த அதிகாரி சோல் வோன், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் ஒருபோதும் நிறுத்தப்படாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு தொடர்கிற வரை எங்களது அணு யுத சோதனையும் தொடரும் என்றும் சோல் வோன் கூறினார். எங்களின் அணு ஆயுத பலத்தை வலுப்படுத்துவதற்கு, அணு ஆயுத சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதாகவும் அவர் கூறினார்.
பெரும் பதற்றம்
பெரும் பதற்றம்
ஏற்கனவே வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. இந்நிலையில் வடகொரிய அதிகாரியின் இந்த பேச்சு இரு நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com