வாசகி கடிதம்

Advertisements

கொஞ்சம் தற்பெருமைதான்.

இருந்தாலும் என் உள் டப்பிக்கு வந்த ஒரு அன்புக்குரிய வாசகியின் இந்த கடிதத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் தோன்றியது.
பட்டுக்கோட்டைபிரபாகர்

………………………………………………………………………….
வணக்கம் ஐயா.

நீண்ட நாட்களாக உங்களுக்கு மடல் வரைய வேண்டும் என்ற எனது பேராசை இன்று நிறைவேறுகிறது.

நான் சத்யா… இலங்கைத் தீவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவள். அங்கே ஒரு சிறு கிராமத்தில் என் வீடு.

சிறு வயது அம்புலிமாமா, கோகுலத்தில் ஆரம்பித்த என் வாசிப்பு பிரியம் பின்பு சில காலங்கள் மாயாவி பைத்தியமாக ராணி காமிக்ஸ்ஸோடு அலைய வைத்தது.

அப்புறம் ஒருநாள் நான் அப்போது எட்டாம் வகுப்போ, ஒன்பதாம் வகுப்போ படித்து கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். தற்செயலாக உங்கள் துப்பறியும் நாவல் ஒன்று கைக்குக் கிடைத்தது. பொய் சொல்ல விரும்பவில்லை. இப்போது அது எந்த புத்தகம் என்ற பெயர் ஞாபகம் இல்லை.

அன்றிலிருந்து உங்கள் அனைத்து நாவல்களிற்கும் அப்படி ஒரு ரசிகை. முடிந்த வரைக்கும் கிடைக்கும் நாவல்கள் எல்லாம் எங்கள் ஊர் அனைத்து வாசிகசாலைகளிலும் தேடி வாசித்து விடுவேன்.

நீங்கள் அறிந்தேயிருப்பது போல் நாட்டுப் பிரச்சினைகள் எங்களை நிம்மதியாக தூங்க விடாமல் செய்த நேரம். மின்சார வசதிகள் இல்லை. திரைப்படங்கள் எல்லாம் வருடத்தில் இரண்டோ, மூன்று தரம் தான் பார்ப்போம். அப்போதெல்லாம் எங்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக விளங்கியது இந்த கதைப் புத்தகங்கள் மட்டுமே.. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்து செய்ய முடிந்தது எல்லாம் அதொன்று தானே.

எங்கள் ஊரிலிருந்து யாழ் நகரிற்கு செல்ல பேருந்தில் ஒன்றரை மணித்தியாலங்கள் பிடிக்கும். அந்த காலத்தில் யாழ்ப்பாணம் நகருக்கு செல்வது என்றால் ஏதாவது நோய் வந்து வைத்தியசாலைக்கு அல்லது வருஷம் தீபாவளிக்கு புத்தாடைகள் எடுப்பதற்கு மட்டுமே.

யாழ் நகர் போகப் போகிறோம் என்றாலே எனக்கு முதல் நாளிலிருந்தே கையும் ஓடாது… காலும் ஓடாது. இரண்டு விடயங்கள்.. ஒன்று ஐஸ்கிரீம் குடிக்கலாம்.. பெரிய கப் ஐஸ்கிரீம். மற்றையது உங்கள் பாக்கெட் நாவல் வாங்கலாம்… வீட்டிலிருந்து வெளிக்கிடும் போதே அம்மாவோடு பேரம் பேசத் தொடங்கி விடுவேன்…

ஒரு பாக்கெட்நாவல் வாங்கித் தர வேண்டும் என்பதில் ஆரம்பித்து அந்த ஒன்றறை மணி நேர பிரயாணத்தில் ஐந்து புத்தகங்கள் வாங்குவதற்காக எப்படியாவது சம்மதம் பெற்று விடுவேன்.

என்ன தான் வாசிகசாலையில் வாங்கி வாசித்தாலும் புதுப் புத்தக மை வாசத்தோடு வாசிக்கும் சுகமே அலாதி தானே… யாழ் நகரத்தில் பூபாலசிங்கம் புத்தகசாலை என்றொரு கடையில் தான் கதைப் புத்தகங்கள் வாங்க கிடைக்கும். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த எங்களுக்கெல்லாம் பாக்கெட் நாவல் ஒரு வரப்பிரசாதம்.

நான் வாசிக்காத அதிக புத்தகங்கள் புதிதாக வந்திருந்து எங்களுடைய பட்ஜெட் விலை தாண்டிப் போகிறது என்றால் புத்தாடை விடுத்து உங்கள் புத்தகங்கள் வாங்கிய நாட்கள் ஏராளம்…

புத்தகம் வாங்கியதும் ஓடிச் சென்று அடித்து பிடித்து ஜன்னல் ஓர இருக்கை தேடியமர்ந்து பேருந்தில் நிற்பவர்களுக்கு வயிறெரிய வைத்துக் கொண்டு வீடு செல்ல முன்னரே வாசிக்க ஆரம்பித்து விடும் அந்த சுகம் தனியே தனி தான்.

நல்லூர் கந்தனைப் பற்றி அறிந்திருப்பீர்கள். நாட்டு நிலை சுமூகமாக உள்ள காலங்களில் அங்கே திருவிழா காலங்களில் புத்தகக் கண்காட்சி நடக்கும். திருவிழா கூட்டத்தில் சாமி எங்கே தெரியப் போகிறது. கோயில் போவதெல்லாம் ஐஸ்கிரீமை தாண்டி இந்த புத்தக கண்காட்சிக்காகத் தான். பாக்கெட் மணி எல்லாம் பாக்கெட் நாவல்களுக்காகவே செலவிட்ட அற்புத தருணங்கள் அவை.

நாவலை வாங்கி விட்டால் போதுமா…? யார் முதலில் வாசிப்பது என்று வீட்டிலே பெரிய பிரளயமே நடக்கும். எனது அத்தான் ஒரு டாக்டர். இன்று எங்களோடு அவர் இல்லை. உங்களின் மிகப் பெரிய வாசகன், ரசிகன். அவர் தான் எப்போதும் முதலில் வாசிப்பது. அவர் வாசித்து விட்டு எங்கள் எல்லோரையும் பாதிக் கதை வாசித்தவுடனேயே முடிவு கேட்பார். சரியாக சொல்பவர்களுக்கு சின்ன சின்ன பரிசுகள் வேறு.

என்னால் எல்லாம் ஊகித்து விடக் கூடிய முடிவுகளை எழுதியிருந்தால் ராஜேஷ்குமார் எப்படி எழுத்துலக ஜாம்பவான் ஆகியிருக்க முடியும்? அதனால் எப்போதும் தோற்பதே என் வாடிக்கை. ஒரே தோற்பதால் தன்மானப் பிரச்சினையால் சில நேரங்களில் கடைசிப் பக்கங்களை யாருக்குமே தெரியாமல் புரட்டிப் பார்த்து சொல்லி விடுவதும் உண்டு.

படிக்கிறேன் பேர்வழி என்று அம்மாவுக்கு போக்குக் காட்டிக்கொண்டு பாடப்புத்தகத்தில் ஒளித்து வைத்து எத்தனையோ நாள் வாசித்த அனுபவம் உண்டு. சிலசமயம் அம்மாவிடம் பிடிபட்டு அவர் உங்களை காரசாரமாக திட்டியிருக்கிறார் எழுதியது நீங்கள் என்றால் அதை வாங்கித் தந்தது தான் என்பதை மறந்து.

அந்த காலங்களில் எல்லாம் மாலை ஐந்து மணிக்கே கதவடைத்து விட்டு வீட்டிற்குள் அடைந்து கிடந்த எங்

You may also like...

Leave a Reply