பாகுபலி-2′ படம் 9 நாளில் ரூ. 1000 கோடி வசூல் செய்து

Advertisements

உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள ‘பாகுபலி-2’, திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் மழை பொழிந்து வருகிறது.

இந்த படம் திரையிடப்பட்ட 9 நாட்களில் ரூ.1000 கோடி வசூல் செய்து உலக அளவில் சரித்திர சாதனை படைத்து இருக்கிறது. இந்திய படம் ஒன்று இந்த சாதனை படைத்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.

‘டைட்டானிக்’, ‘அவதார்’, ‘ஹாரிபாட்டர்’, ‘லார்ட் ஆப் ரிங்ஸ்’ உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே ரூ.1000 கோடி வசூல் செய்தன. அந்த பட்டியலில் ‘பாகுபலி-2’ படமும் சேர்ந்து இருப்பது இந்திய திரைஉலகினரை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ படத்தின் கதையை எழுதியவர் பாகுபலி இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத். ‘பாகுபலி-2’ பட வெற்றி குறித்து அவர் கூறி இருப்பதாவது:-

‘பாகுபலி -2′ -ன் வெற்றி எதிர்பார்த்தது தான் என்றாலும், 9 நாட்களில் ரூ.1000 கோடி வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் இவ்வளவு பெரிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

ஒரு தெலுங்கு சினிமா எல்லை கடந்து உலகம் முழுவதும் வெற்றி பெற்று இருக்கிறது. இதை ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த படம் என்று பார்க்காமல் எல்லோருக்குமான படம் என்று அனைவரும் ரசிக்கிறார்கள்.

இது இந்த படத்துக்கு கிடைத்த பெருமை.

இந்த படத்தை இயக்கிய ராஜமவுலி, நடித்த நடிகர், நடிகைகள், பங்கேற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த பெருமை சொந்தமானது. இந்த சாதனை படைக்க உதவிய ரசிகர்களுக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் கூறி இருப்பதாவது:-

‘பாகுபலி-’ படத்தின் பெருமையை சொல்லிக் கொண்டே இருக்கலாம். கனவு நிறைவேற வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும். என்பதை இந்த படத்தின் வெற்றி நிரூபித்து இருக்கிறது.

படத்தை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். சீட் நுனியில் உட்கார்ந்துதான் இந்த படத்தை பார்த்தேன். எத்தனை முறை கைதட்டி ரசித்தேன் என்பது எனக்கே தெரியாது. 9 நாட்களில் ரூ.1000 கோடி வசூல் என்பது வரலாற்று சாதனை. இந்த பட உலகுக்கு பெருமை சேர்த்த ராஜமவுலியையும், அவரது படக்குழுவினரையும் எப்படி பாராட்டினாலும் போதாது.

You may also like...

Leave a Reply