காய்கறிகள் விலை சென்னையில் தாறுமாறாக உயர்ந்துள்ளது

Advertisements

சென்னை: காய்கறிகள் விலை சென்னையில் தாறுமாறாக உயர்ந்துள்ளது.ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.80க்கு விற்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு போதிய விளைச்சல் இல்லாததால் காய்கறி வரத்து வெகுவாக குறைந்து விட்டது. பெரிய வெங்காயம், தக்காளி தவிர மற்ற அனைத்து காய்கறி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது

ஒரு நாளைக்கு 300 முதல் 350 லாரி லோடுகள் காய்கறிகள் வரும்.ஆனால் இப்போது விளைச்சல் குறைந்துவிட்டதால் 300க்கும் குறைவான லாரி லோடுகள் மட்டுமே வருவதாக கோயம்பேடு மார்க்கெட் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கர்நாடகம்,ஆந்திராவிலும் வறட்சி தலை விரித்தாடுகிறது. இதனால் அங்கும் காய்கறிகள் விளைவது குறைந்துள்ளது.

சென்னை மார்க்கெட்டுகளில், கத்திரிக்காய்-ரூ. 80, அவரைக்காய்- ரூ.80, முருங்கைக்காய்- ரூ.80, பச்சைமிளகாய்- ரூ.80, பீட்ரூட்- ரூ.70, சவ்சவ்- ரூ.70, புடலங்காய்- ரூ.70, பாகற்காய்- ரூ.70, சுரைக்காய் -ரூ.40, பீன்ஸ் – ரூ.140, பச்ச பட்டாணி -ரூ.140, கேரட் -ரூ.90, வெண்டைக்காய்- ரூ.50, உருளைக்கிழங்கு-ரூ.25, சேனை – ரூ.50, சேப்பங்கிழங்கு-ரூ.50, கொத்தவரங்காய்-ரூ.60, வெள்ளரிக்காய்-ரூ.40, குடை மிளகாய்- ரூ.45, சின்ன வெங்காயம்- ரூ.100, பெரிய வெங்காயம்-ரூ.15, நாட்டு தக்காளி – ரூ.12, நவீன் தக்காளி- ரூ.20 என்று விற்கப்படுகிறது.

You may also like...

Leave a Reply