நீதிபதி கர்ணனை தேடும் கொல்கத்தா போலீஸ்

Advertisements

உச்ச நீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பிற்காக ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனைக் கைதுசெய்வதற்காக கொல்கத்தாவைச் சேர்ந்த காவலர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நீதிபதி கர்ணனும் சர்ச்சைகளும்படத்தின் காப்புரிமைPTI

கர்ணனுக்கு ஆறு மாத சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம், அவரை உடனடியாகக் கைது செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று சென்னை வந்த கர்ணன், அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். செய்தியாளர்களையும் சந்தித்து பேட்டி அளித்தார். ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவின் காரணமாக, அவர் கொடுத்த பேட்டிகள், அறிக்கைகள் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், புதன்கிழமையன்று காலை கர்ணனைக் கைது செய்து அழைத்துச் செல்வதற்காக கொல்கத்தாவைச் சேர்ந்த டிஜிபி சுரஜித் கர் புர்கயஸ்தா தலைமையில் காவல் துறையினர் சென்னைக்கு வந்தனர். பிறகு மாநகரக் காவல்துறை ஆணையரைச் சந்தித்து அவர்கள் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையில் மாநில அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த கர்ணன், காலையில் புறப்பட்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள காளகஸ்தி கோயிலுக்கு சென்றதாகச் சொல்லப்பட்டது.

இதையடுத்து, பிற்பகலில் கொல்கத்தாவைச் சேர்ந்த காவல்துறையினர், தமிழக காவல்துறையினர் சாலை மூலமாக காளகஸ்திக்குப் புறப்பட்டனர். ஆந்திர மாநில எல்லையில் ஆந்திர காவல்துறையினரும் அவர்களுடன் இணைந்து கொண்டனர்.

இருந்தபோதும் கர்ணன் இருக்கும் இடம் தெரியாததால், கொல்கத்தா காவல்துறையினர் சென்னை திரும்பியுள்ளனர்.

You may also like...

Leave a Reply