பாஜகவின் தலித்திய ஆதரவும், புதிய கணக்களும் – நா.இராதாகிருஷ்ணன்

Advertisements

 

தமிழகத்தில் இரண்டு பெரிய திராவிட கட்சிகளையும் ஒழிப்போம் என்ற அறைகூவலுடன் புறப்பட்டுள்ளது பி.ஜே.பி. தமிழத்தில் பிஜேபியை காலுன்ற விட மாட்டோம் என்று பதிலுக்கு அறைகூவும் திரவிட கட்சிகள், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதம் சார்ந்த, ஜாதி சார்ந்த அமைப்புகள்.

மத்தியில் ஆட்சியில் பங்கும், தொங்கும் வேண்டும் என்றால் பா.ஜ,க,வுடன் பங்கெடுக்கும் கட்சிகள், தமிழகம் என்றால் இடம் தரமாட்டோம். ஒத்துழைக்க மாட்டோம் என்று கூறுகிறார்கள்.

மக்கள் நல கூட்டணியில் இடம் பெற்ற கம்யூனிஸ்டுகள், அதில் இடம் பெற்ற விஜயகாந்த் பாஜகவுடன் ஒட்டும் உறவுமாக இருந்தவர் என்பதை அறியாதவர்கள் அல்ல. அவரை கூட்டணியில் அனுமதித்துக் கொண்டார்கள். நேரத்திற்கு ஏற்றார் போல், தங்கள் அரசியல் லாபத்தை அனுசரித்து வேடம் போடும் அரசியல் கட்சிகள், ஒட்டு மொத்தமாக தேவைப்படும் போது பாஜகவுடன் ஒட்டிக் கொள்வதும், தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் தீண்டதாகததாகவும் கூறுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இது அரசியல் சதுரங்கம் விளையாட்டின் ஒரு அங்கம் என்று பார்க்கப்பட்டாலும். அரசியல் நாகரீகம், ஒழுங்கு, நேர்மை என்ற பார்வையில் கேள்விகளைத்தான் எழுப்புகிறது.

எது எப்படியோ, வரும் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ள இந்தியாவை அசுர பலத்துடன் ஆளும் பாஜக. அரசியல் சதுரங்கத்தில் தனது காய்களை மிக சாதுரியமாகவும், அதிரடியாகவும் அரங்கேற்ற துவங்கியுள்ளது.

அதில் சமீபத்திய நிகழ்வாக பஜக தலைவர் அமிட்ஷா புதிய தமிழகம் கட்சி நடத்தப் போகும் விழாவில் பங்கேற்க போவதாகவும், பள்ளர் சமூகத்தை பட்டியல் ஜாதியில் இருந்து விடுவிக்க கோரும் புதிய தமிழகம் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிப்பதாகவும் வரும் தகவல்கள். தென்பகுதியில் குறிப்பிட்ட பகுதிகளில் வாக்கு பலம் கொண்ட புதிய தமிழகம் கட்சியை தனது வளையத்துக்குள் கொண்டு வருகிறது.

ஏற்கனவே கூட்டணி கண்ட பா.மா.க., தே.தி.மு.க.வுடன் மீண்டும் தனது கூட்டணி வாய்ப்புகளை பேச நிறை வாய்பு உண்டு. இரு பெரிய திராவிட கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க இருவரும் எப்பொழுது வேண்டுமானாலும் இவர்களிடத்தில் சரண்டர் ஆகலாம். ஆளும் அ.தி.மு.க. ஏற்கனவே சரண்டரான நிலையிலேயே உள்ளது.

புதிய அரசியல் தலைமையாக பஜக கூட்டணி மற்றும் திமுக கூட்டணி இவை இரண்டு மட்டுமே இனி தமிழத்தின் சட்ட மன்ற தேர்தலை சந்திக்க வாய்ப்பு அதிகம் உள்ளது அல்லது இரண்டிலும் இடம் பெறதா மூன்றாவது கூட்டணி ஒன்றும் வரலாம்.

கடந்த சட்ட மன்ற தேர்தலில் தனித்து விடப்பட்ட பாஜக வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில் புதிய தலைமையுடன் களம் காண அதிகம் வாய்பு உளளது. அதற்கு இடம் தரும் பலஹீனமான நிலையிலேயே இரு பெரிய திராவிட கட்சிகள்.

இப்பொழுது பஜகவின் தலையாய பணியாக இருப்பது, இரு பெரிய திராவிட கட்சிகளையும் பலஹீனப்படுத்தும் முயற்சியே என்பது தெரிகிறது. இதில் குறிப்பிட்ட வெற்றியை பெற்றவுடன் பாஜககூட்டணி பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கக் கூடும். களத்தை வலுவாக சந்திக்க பாஜக ஆயத்தமாகக் கூடும்.

சமீபத்தில் அ.தி.மு.க. தலியத்திய எம்எல்ஏகள் ஒன்று கூடி பேசியிருப்பதும், தொடர் அமலாக்க மற்றும் வருமானவரி சோதனைகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை கோரி தலைமைச் செயலருக்கு பரிந்துறை என்று மத்திய அரசின் செயல்பாடு தீவிரமாகிறது.

மொத்த வாக்களர்களில் 20 சதவீத தலித்திய வாக்களார்களை தனது பக்கத்தில் கொண்டு வந்து விட்டால் மிகப் பெரிய சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்ற கணக்கில் பஜக செயல்படுகிறது. இந்திய அளவில் தலித்திய ஆதரவு நிலையில் பல சச்சரவுகளை சந்தித்த¢போதும் தொடர்ந்து அம்பேத்கரை து£க்கிப் பிடிப்பதும், தமிழக தலித் தலைவர்களுடன் ஒட்டி உறவாடுவதும், பொன் இராதாகிருஷ்ணன் திருமாவளவன் சந்திப்புகள் நமக்கு எடுத்து¢க் காட்டுகின்றன, இம் முயற்சிகளில் பாஜக எந்த அளவு வெற்றி பெறப் போகிறது என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

 

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com