அமைச்சர் சரோஜா மிரட்டுவதாக, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பெண் அதிகாரி ராஜமீனாட்சி பரபரப்புப் புகார்

Advertisements

30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு அமைச்சர் சரோஜா மிரட்டுவதாக, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பெண் அதிகாரி ராஜமீனாட்சி பரபரப்புப் புகார் அளித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட குழந்தைகள் நல பெண் அதிகாரி ராஜ மீனாட்சி. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்.  பணி நிரந்தரம் செய்ய, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக ராஜமீனாட்சி குற்றம் சாட்டியிருந்தார்.

பணி நிரந்தரம் தொடர்பாக அமைச்சர் சரோஜாவை சென்னையிலுள்ள அவரது வீட்டில் ராஜமீனாட்சி சந்தித்துள்ளார். அப்போது, 30 லட்சம் ரூபாய் தர வேண்டும் என அமைச்சர் கேட்டுள்ளார். தன்னால் பணம் தர முடியாது என ராஜமீனாட்சி மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அமைச்சர், ராஜமீனாட்சியின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கேவலமாக விமர்சித்துள்ளதாகத் தெரிகிறது.

மேலும், வேலையை விட்டு தானாக ஓடிவிடு என்றும்; இல்லாவிட்டால் உன் நடத்தை சரியில்லை எனக் கூறி அசிங்கப்படுத்துவேன் என்றும் அமைச்சர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. சரோஜாவும் அவரது கணவரும் மாறி மாறி  மிரட்டியதாகவும், தகுந்த ஆதாரங்களுடன் அமைச்சர் சரோஜா மீது ஆளுநர் மற்றும் பிரதமரிடம் புகார் அளிக்க இருப்பதாகவும் ராஜமீனாட்சி கூறியிருந்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com