நடப்பு ஆண்டில் சராசரிக்கும் அதிகமாக மழை கொட்டித்தீர்க்கும்

Advertisements

எல் நினோ எனப்படும் வெப்பநிலை மாற்றம் காரணமாக நடப்பு ஆண்டில் சராசரிக்கும் அதிகமாக மழை கொட்டித்தீர்க்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலின் பரப்பில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் எல் நினோ (El-Nino) என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது, குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை கடலின் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியைக் காட்டிலும் அதிகமாகரிப்பதே எல் நினோ. இந்த வெப்பநிலை மாற்றம் தென்மேற்கு பருவமழையின் போக்கை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • இந்திய வானிலை ஆய்வு மையம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 50 ஆண்டுகளில் நாட்டின் சராசரி பருவமழை அளவு 89 செ.மீ. ஆக உள்ளது. இந்த ஆண்டு சராசரியை விட கூடுதலாக, 96 செ.மீ. அளவிற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் விவசாய உற்பத்தி 15 சதவீதம் வரை அதிகரிக்கக்க்கூடும்.” என்று தெரிவித்துள்ளது.

You may also like...

Leave a Reply