மாதா அமிர்தானந்தமயிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு முடிவு

Advertisements

மாதா அமிர்தானந்தமயிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு முடிவு
மாதா அமிர்தானந்தமயிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
புதுடெல்லி,
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில், 64 வயது மாதா அமிர்தானந்தமயிக்கு ஆசிரமம் உள்ளது.
அண்மையில் மத்திய உளவுத்துறை மத்திய அரசிடம் தாக்கல் செய்த அறிக்கையில் அவருடைய உயிருக்கு அதிகபட்ச ஆபத்து இருப்பதை சுட்டிக் காட்டியது. இதைத் தொடர்ந்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
ஆன்மிக தலைவர்களில் பாபா ராம்தேவுக்கு பிறகு இசட் பிரிவு பாதுகாப்பு மாதா அமிர்தானந்தமயிக்கு வழங்கப்பட உள்ளது.
அமிர்தானந்தமயிக்கு 24 மணி நேரமும் துணை ராணுவ வீரர்கள் 24 பேர் பாதுகாப்பு அளிப்பார்கள். இது தவிர அவருடைய ஆசிரமம் அமைந்திருக்கும் பகுதியை சுற்றி எந்த நேரமும் துணை ராணுவ வீரர்கள் 16 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவர்கள் அனைவரும் நக்சலைட்டுகளை ஒடுக்கும் படைப்பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர். மொத்தம் 40 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மாதா அமிர்தானந்தமயி செல்லும் இடங்களுக்கும் அவர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள். மாதா அமிர்தானந்தமயிக்கு உலகம் முழுவதும் சீடர்கள் உள்ளனர். இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் ஏழைகளுக்கு மனிதாபிமான உதவிகளை அமிர்தானந்தமயி செய்து வருகிறார்.

You may also like...

Leave a Reply