ஓஷோவின் உன்னத தியான யுக்தி

Advertisements

ஓஷோவின் உன்னத தியான யுக்தி – 1

பார்வையாகவே மாறி விடு

ஒரு காரிலோ அல்லது ரயிலிலோ பயணம் செய்கிறாய் –

நீ அப்போது என்ன செய்யப் போகிறாய் கவனத்தை

வளர்த்துக் கொள்ள முயற்சி செய்.

காலத்தை வீண் செய்யாதே.

அரைமணி நேரம் ரயிலில் அமர்ந்திருக்கப் போகிறாய் –

கவனத்தை கூர்மைப்படுத்த முயற்சி செய்.

வெறுமனே அங்கிரு,

எதையும் சிந்தனை செய்யாதே.

யாரையாவது பார், ரயிலைப் பார், வெளியே பார்.

ஆனால் வெறுமனே அங்கிரு,

எதையும் சிந்திக்காதே.

சிந்தனையை நிறுத்தி விடு.

அங்கிரு, பார். உனது பார்வை நேரடியாகவும்,

ஊடுருவுதாகவும் அமையட்டும்.

நீ எங்கே பார்த்தாலும் அந்த பார்வை

திரும்ப பிரதிபலித்து வரும்போது

நீ பார்ப்பவனைப்பற்றிய விழிப்புணர்வு அடைவாய்.

You may also like...

Leave a Reply