மலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி

Advertisements

இலங்கை விழாவில் பேசிய நரேந்தர மோடி, தற்போது மலையக மக்களுக்காக 4 ஆயிரம் வீடுகளை கொண்ட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மக்களுக்கு வீடு கட்டித் தருவதற்கான நிலத்தை இலங்கை அரசு உறுதி செய்துள்ள செய்தியை அறிந்து மகிழ்வதாகவும், மலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும் என்று உறுதியளித்தார்.

 

 ஆம்புலன்ஸ் சேவை

ஆம்புலன்ஸ் சேவை

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள 1990 அம்யூலன்ஸ்கள் தற்போது மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் செயல்பட்டு வரும் நிலையில் இந்த ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் நாடுமுழுவதும் விஸ்தரிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

 தமிழில் பேச்சு

தமிழில் பேச்சு

மக்கள் மத்தியில் உரையாற்றிய மோடி டுவிட்டரில் தமிழில் கருத்து தெரிவித்தது போலவே மேடைப்பேச்சின் போது ‘யாதும் ஊரே யாவரும் கேளிரே” என்ற வரிகளை குறிப்பிட்டு பேசியதற்கு தமிழர்கள் மத்தியில் கைதட்டல்கள் எழுந்தது. இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, முன்னேற்றத்திற்காக இந்தியா எப்போதும் உதவத் தயாராக இருப்பதாக மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

 பயிற்சிக் கூடங்கள்

பயிற்சிக் கூடங்கள்

1947ம் ஆண்டு இலங்கை தோட்டத் தொழிலாளர் நிதியம் துவக்கப்பட்டது முதல் மக்களின் மேம்பாட்டிற்காக இந்தியா உதவி வருவதாக குறிப்பிட்ட பிரதமர், ஒவ்வொரு ஆண்டும் 700 புலமைப்பரிசில்களை வழங்கப்பட்டு வருவதாகவும், தோட்டப்பாடசாலைகளில் விஞ்ஞான கூடங்கள் ஆசிரியர் பயிற்சி கூடங்களும் அமைக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் கூறினார்.

You may also like...

Leave a Reply