வடகொரியா அணுஆயுதம் குறித்து தீவிரமான கவலைகள்- சீனா

Advertisements

 

வட கொரியாபடத்தின் காப்புரிமைREUTERS

வடகொரியாவின் வெளியுறவு துணையமைச்சர் பிபிசிக்கு அளித்த பேட்டியில், வட கொரியா தனது ஏவுகணை சோதனைகளை தொடரும் என்றும், அமெரிக்கா தாக்குதலை நடத்த திட்டமிடுவதாக அது கருதினால், முன்கூட்டியே அணுஆயுத தாக்குதலை நடத்தும் என்றும் கூறியிருந்தார்.

நிலைமையை மேலும் சிக்கலாக்கும் வார்த்தைகளையும், நடவடிக்கைகளையும் சீனா எதிர்ப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் லூ காங் கூறியுள்ளார்.

வடகொரியா – அமெரிக்கா இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

அண்மை நாட்களில் இரு நாடுகளும் சூடான வாத-பிரதிவாதங்களில் ஈடுபட்டுள்ளன. கொரிய தீபகற்ப பிராந்தியத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், வடகொரியாவுடான “உத்திரீதியிலான பொறுமை காக்கும் சகாப்தம்” முடிந்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

தனது பாரம்பரிய நட்பு நாடான வடகொரியாவின் நடவடிக்கைகளால் சீன அரசின் கவலைகள் அதிகரித்திருப்பது போல் தோன்றுவதாக பெய்ஜிங் பி.பி.சி செய்தியாளர் ஸ்டீபென் மெக்டனல் கூறுகிறார்.

You may also like...

Leave a Reply