கடவுளின் திருவடிகளை நினைப்பவருக்குதுன்பம் இல்லை…

Advertisements

” வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. ”
தெளிவுரை:- விருப்பு, வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை நினைப்பவருக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை…
மனித வாழ்வில் விருப்பு, வெறுப்பாகிய இரண்டும் மனநிலையைப் பொருத்தே ஏற்படுகிறது….
விருப்பு, வெறுப்பு இல்லாத மனநிலை சாத்தியமா? என்று சிந்தித்தால் எதிர்பார்ப்பில்லா அன்பு இருதயத்தில் குடிகொண்டால் அது சாத்தியமே என்று பகுத்தறிவு கூறுகிறது..
வணங்குதல் என்றால் அன்பு காட்டுதல்..
ஒருவர் கடவுளை வணங்கும் போது, தான் விருப்பம் கொண்ட ஒன்றை தனக்காக கடவுள் நிகழ்த்தித் தர வேண்டும் என்று வேண்டுகிறார்…
வேண்டியவர் அச்செயலை நிகழ்த்துவதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளாததால் அச்செயல் நிகழவில்லை…
ஆதலால், தனது வேண்டுதலை நிறைவேற்றாத கடவுள் மீது வெறுப்பு கொண்டு இகழ்கிறார்…
இதுவே மிகப் பெரிய அறியாமை…
இப்படிதான் நம்மில் பலர் செயல்பட்டு துன்பப்படுகிறோம்…
விருப்பு, வெறுப்பு இல்லாத எதிர்பார்ப்பில்லா அன்பின் திருவடிகளை எண்ணி அந்த எதிர்பார்ப்பில்லா அன்பை தனது இருதயத்தில் குடியேற்றி வாழ்பவருக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை என்பதே இக்குறள் உணர்த்தும் ஞானமாகிறது…

You may also like...

Leave a Reply