நல்வினை, தீவினை இவர்களை பாதிக்காது

Advertisements

” இருள்சேர் இருள்வினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. ”
தெளிவுரை:- கடவுளின் உண்மையான புகழை விரும்பி நினைப்பவரை அறியாமையால் வரும் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளும் வந்து சேரமாட்டா.
அகிலத்தில் இயற்கையாக அமைந்த எந்த உயிரினத்தை ஆராய்ந்தாலும் அங்கு உண்மையாக பிரபலமாகக் காணப்படுவது அன்பு ஒன்றே…
இயற்கையின் அன்பு இதற்குச் சிறந்த சான்றாகிறது…
இருதயங்களில் எதிர்பார்ப்பில்லா அன்பு குடிகொண்டு இருந்தால் அதுவே அறிவுடைமையாய் அறியாமையை அறவே அகற்றிவிடுகிறது…
எதிர்பார்ப்பில்லா அன்பு கொண்டவர் பிறருக்கு நல்வினை செய்யும் போது அதன் பிரதிபலனை எதிர்பார்த்து துன்பப்படமாட்டார்… அதே சமயம் பிறருக்கு
தீவினைகளை ஒருபோதும் செய்யமாட்டார்….
எதிர்பார்ப்பில்லா அன்பின் உண்மையான புகழை உணர்ந்து, அந்த அன்பை தனது இருதயத்தில் குடிகொள்ளச் செய்தவரை, அறியாமையால் வரும் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளும் வந்து சேரமாட்டா என்பது திருக்குறள் போதித்த ஞானமாகி அறியாமையை விலகச் செய்கிறது…

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com