நிலமிசை நீடுவாழ் வார் யார்?

Advertisements

” மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். ”
தெளிவுரை:- அன்பர்களின் நெஞ்சமாகிய தாமரை மலரில் வீற்றிருக்கும் கடவுளின் பெருமை பொருந்திய திருவடிகளை இடைவிடாமல் நினைப்பவர், எல்லா உலகங்களுக்கும் மேலானதாகிய முத்தி உலகில் எப்பொழுதும் வாழ்வார்…
அன்பர்களின் நெஞ்சத்தில் கடவுளாக அன்பே வீற்றிருப்பதால்,
அந்நெஞ்சம் விரிந்த அழகிய இதழாகிய தாமரை போன்று காட்சியளிக்கிறது…
உலகில் பெருமைக்குரியது அன்பு ஒன்றே…
ஆதலால், அன்பின் திருவடிகளே பெருமை கொண்டவையாகின்றன…
அன்பு இருதயங்களில் குடிகொள்ளும் போது இவ்வுலகில் இருதயங்களுக்கு இடையேயான போராட்டங்களெல்லாம் மறைந்து ஆனந்த வாழ்வை வாழ்வது சாத்தியமாகிறது…
ஒரு நல்ல விடயத்தை நினைவுகூர்வதன் பலனாக அந்த நல்ல விடயத்தை இருதயமானது ஏற்று செயலாக்கத் தொடங்குகிறது…
அன்பர்களின் நெஞ்சமாகிய தாமரை மலரில் வீற்றிருக்கும் அன்பின் பெருமை பொருந்திய திருவடிகளை இடைவிடாமல் நினைத்து அந்த அன்பைத் தனது இருதயத்தில் குடிகொள்ளச் செய்பவர், எல்லா உலகங்களுக்கும் மேலானதாகிய பேரின்ப (முத்தி) உலகில் எப்பொழுதும் வாழ்வார் என்பது இக்குறள் போதித்த ஞானமாகிறது…

You may also like...

Leave a Reply