பொருத்தமான உணவு, உடற்பயிற்சியை அறிந்துகொள்ள டிஎன்ஏ சோதனை உதவுமா?

Advertisements

உடல் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சியின் சமீபத்திய போக்கில் டி என் ஏ பரிசோதனை செய்து கொள்வதென்பது மேலை நாடுகளில் வாடிக்கையாகி வருகிறது. அதன்மூலம் வெவ்வெறு விதமான உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகளை நமது உடல் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்கிறது என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்த சாதனங்கள் எவ்வளவு துல்லியயமாக மற்றும் பயனுள்ளதாக இருக்கும் ? தீவிர உடற்பயிற்சி பிரியரான 56 வயதுடைய மேண்டி மேயர், வாரத்திற்கு பலமுறை உடற்பயிற்சிகளை செய்துள்ளார். ஆனால் தனது உடலில் மாற்றமே நிகழாதது போன்று உணருகிறார். பின்னர், மேண்டியின் பயிற்சியாளர் டி என் ஏ ஃபிட் பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளார். முக்கிய உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகளுக்கு உடலின் மரபணு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதை இது சோதிக்கும். ” நான் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்று நினைத்தேன்,” என்கிறார் மேண்டி. ” அந்த வகையான அறிவைப் பெறுவதற்கு நான் மிகவும் விரும்பினேன்.” பரிசோதனைக்காக தனது எச்சிலை அனுப்பிய மேண்டி, ஜனவரி மாதத்தில் தன்னுடைய உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு குறித்த அறிக்கையை பெற்றார். அறிக்கையை பார்த்து ஆச்சரியப்பட்டர் மேண்டி. ”எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. காஃபின் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் எனக்கு பொருந்தாது மற்றும் ஏரோபிக் எனப்படும் காற்று உள்ளடங்கிய உடற்பயிற்சி முறைக்கு எனது உடல் நல்ல எதிர்வினையாற்றும் என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.” மூன்று மாதங்களுக்கு பின்னர், 12- லிருந்து 10 ஆக மேண்டியின் சைஸ் குறைந்தது. மேலும், பல கிலோ எடைகளையும் குறைத்தார். ”எடைக் குறைப்பு பரிசோதனை காரணமாகத்தான் எடை குறைந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை,” என்கிறார் லெய்செஸ்டரில் வசிக்கும் மேண்டி. இதுபோன்ற சாதனங்களை மையமாக கொண்டு இயங்கும் உலகளாவிய சந்தை மதிப்பு 2022 ஆம் ஆண்டிற்குள் 10 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக இருக்கும் என சில ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் இவை எவ்வாறு வேலை செய்கின்றன மற்றும் அதன் நம்பகத்தன்மை எப்படி இருக்கும் ?

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com