மனிதனின் முதல் உணவு எது???

Advertisements

 

நாம் வாழும் இந்த அழகிய உலகம் தோன்றி 4.5 பில்லியன் வருடங்கள் ஆகிவிட்டது என்று கணக்கிடபட்டுள்ளது. கீரின்லேண்ட் நாட்டில் கிடைத்த படிமங்களை வைத்து முதல் உயிரினம் 3.7 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் தோன்றிருக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளார்கள். இருப்பினூம் உயிரினங்கள் எவ்வாறு தோன்றியது என்று இதுவரைக்கும் விஞ்ஞானிகளால் உறுதியாக கூறமுடியவில்லை.

பூஞ்சை காளான்கள் 1300 மில்லியன்கள் வருடங்களுக்கு முன்னாலும் தாவரங்கள் 700 மில்லியன்கள் வருடங்களுக்கு முன்னால் தோன்றியது. கிமு 10 வது நூற்றாண்டில் வாழ்ந்த தொல்காப்பியர் உயிரினத் தோற்றத்தை இவ்வாறு பிரிக்கிறார்.

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே!
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே!
மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே!
நான்கு அறிவதுவே அவற்றோடு கண்ணே!
ஜந்து அறிவதுவே அவற்றோடு செவியே!
ஆறு அறிவதுவே அவற்றோடு மனமே…

ஓர் அறிவு => தாவரம் => தோடு உணர்வு
இரண்டு அறிவு => புழு => சுவை உணர்வு
மூன்று அறிவு => எறும்பு => நுகர் உணர்வு
நான்கு அறிவு => பாம்பு => பார்வை உணர்வு
ஜந்து அறிவு => மான் => ஒலி உணர்வு
ஆறு அறிவு => மனிதன் => மனம்

இப்படி ஓர் அறிவு தாவத்திலிருந்து படிப்படியாக ஆறு அறிவு மனிதன் வரை பரிணாமம் வளர்ச்சி பெற்றது. 6 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் முதல் மனிதன் உருவாயிருக்கலாம் எனவும், இபொழுது இருக்கும் மனித தோற்றம் இரண்டு லட்சம்
வருடங்களுக்கு முன்னால்தான் தோன்றியது எனவும் கணக்கிடபட்டுள்ளது.

மனிதனுடைய அறிவு ஒரே நாளில் வளர்ந்திடவில்லை அவனுடைய அறிவு படிப்படியாக பல நுற்றாண்டுகளாக கிடைத்த அனுபவத்தை கொண்டுதான் வளர்ச்சி அடைந்துள்ளது. சுமார் 3.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் நெருப்பை கண்டுபிடித்த மனிதன் கடந்த 12000 வருடங்களாகதான் விவசாயம் செய்து வருகிறான்.

மனிதன் வருவதற்க்கு முன்னே விலங்குகள் வந்துவிட்டன அவற்றை கண்டு பல மில்லியன் வருடங்களாக பயந்துதான் வாழ்ந்து வந்துள்ளான். அவைகளை வேட்டையாடி மாமிசத்தை சாப்பிடும் அளவற்க்கு அறிவு வந்துவிடவில்லை.

மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்த மனிதன், மரங்கள் மற்றும் செடிகளிலிருந்து கிடைத்த பழங்களைதான் உணவாக சாப்பிட்டு வந்துள்ளான். பழங்கள் கிடைக்காத சமையத்தில் செடிகளை பிடுங்கி கிழங்குகளை சாப்பிட்டு வந்துள்ளான்.

நமது உடல் பழங்களூக்கு பழகிபோனதால்தான் அவைகளை எளிதாக சீரணம் செய்துவிடுக்கிறது மற்றும் எந்த கழிவுகளூம் உடம்பில் தங்குவதில்லை. எவர் ஒருவர் உடம்பில் எளிதாக சீரணம் அடைந்து கழிவுகள் தங்கவில்லை என்றால் அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம்.

மனிதனின் முதல் உணவு பழங்கள்தான் அவைகளை ஒரு வேலையாவது சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

You may also like...

Leave a Reply