தமிழில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘கீசகவதம்’.

Advertisements

தமிழில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘கீசகவதம்’.
வெளியான ஆண்டு 1918.
ஒளிப்பதிவு,தொகுப்பு, தயாரிப்பு,இயக்கம் அனைத்தையும் திரு.நடராஜன் முதலியார் அவர்கள் ஒருவரே முன்னின்று செய்திருக்கிறார்.
படத்தை தயாரிக்க ஐந்து மாதங்களும்,35,000 ரூபாயும் செலவழிந்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

6000 அடி நீளமுள்ள ‘கீசகவதம்’ சென்னை எல்பின்ஸ்டன் திரையரங்கில் இரண்டு வாரம் ஓடி லாபம் ஈட்டியிருக்கிறது.
மகாத்மா காந்திஜியின் மகன் ‘தேவதாஸ் காந்தி’ எழுதிய இந்தி மொழி கதை குறிப்புடன் கராச்சி, ரங்கூன் உள்ளிட்ட பகுதிகளில் ஓடி ரூ15,000/- லாபம் சம்பாதித்து கொடுத்துள்ளது.

கதாநாயகனாக கீசகன் வேடத்தில் ராஜூ முதலியாரும், நாயகி திரெளபதி வேடத்தில் ஜீவரத்தினமும் ஏற்று சிறப்பித்து இருக்கிறார்கள்.
இருவருமே நாடகத்துறையிலிருந்து வந்தவர்கள்.

ஓவியர் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களை பின்புலமாக கொண்டு காட்சிகளை அமைத்து இருக்கிறார் நடராஜ முதலியார்.
எனவே நிச்சயம் அவரது சட்டகங்கள் காவியத்தன்மையுடன் இருந்திருக்கும்.

தமிழில் முதல் படமான ‘கீசகவதத்தின்’ படச்சுருள்,புகைப்படம் எதுவுமே ஆவணப்படுத்தப்படவில்லை.
திரு.நடராஜ முதலியார் ஆறு மவுனப்படக்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.
1. கீசகவதம் [ 1918 ]

2. திரெளபதி வஸ்திராபஹரணம் [ 1918 ]

3. லவகுசா [ 1919 ]

4. ருக்மணி – சத்யபாமா [ 1920 ]

5. மார்க்கண்டேயா [ 1922 ]

6. மயில்ராவணன் [ 1923 ]

தனது கடைசிப்படங்களால் தோல்வியை தழுவி, தனது சொந்த ஸ்டூடியோவும் தீக்கிரையானவுடன் படத்தொழிலை விட்டே விலகி விட்டார் நடராஜ முதலியார்.

கீசகவதம் 1916, 1917,1918 ஆகிய வருடங்களில் வெளியாகியது என பல தகவல்கள் இருக்கின்றன.
ஆனால் 1918ல் வெளியாகி உள்ளது என தக்க ஆதாரங்களுடன் தகவல்களை திரட்டி அந்த தகவல்கல் அடிப்படையில் ‘தமிழ் திரைப்பட நூற்றாண்டு-2018’ என்ற நூலை எழுதியுள்ளார் திரு.பெ.வேல்முருகன்.
சென்னை எம்ஜியார் அரசு திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவு துறையில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார் இவர்.

You may also like...

Leave a Reply