குருவே சரணம்

Advertisements

 

1. குரு எல்லாம் குருவா ?
எல்லா குருவும் குரு அல்ல
குருமுன் உன் மனம் நின்றாலே அவர் குருவாவர்
குருவிடம் உன் மனம் பேச வேண்டும்
குருவிடம் பணம் பேசக் கூடாது

2. குருவை தேடுபவர் யார்?
குருவைத் தேடுபவர் இறைவனைத் தேடுகிறான்.
குருவைத் தேடுபவன் தன்னைத் தானே அறிகிறான்.

3. குருவின் தகுதியை சோதிப்பவன் யார்?
குருவின் தகுதியை சோதிப்பவன் துடுப்பு இல்லா படகோட்டி.

4. குரு கடாட்சம் பெற என்ன வேண்டும்?
குரு கடாட்சம் பெற நற்பண்பு தெய்வபக்தியும் வேண்டும்.

5. குருவை எவ்வாறு அறிவாய்?
மெய்யை மெய் அறியும்

6. குருவைக் கண்டால் என்னவாக உருவாகிறான்?
குருவைக் கண்டவன் உருப்பெறத் தொடங்குகிறான்.
குருவை ஏற்பவன் குருவின் சீடனாகிறான்.

7. குரு முழுமையானவராக சாட்சி என்ன?
குருவை முழுமையானவராக அறிய, அவர் மெய் ஞானமே சாட்சி

8. குரு என்பவர் யாருக்காக?
குரு என்பவர் மக்களுக்காக வந்த இறைதூதர்

9. குருவிடம் என்ன கிடைக்கும்?
குருவால் திருவருள் கிட்டும்.

10. குரு என்பவர் யார்?
குரு என்பவர் மெய் ஞானத் திறவுகோல்

11. குருத்துவம் என்றால் என்ன?
குருத்துவம் தனித்துவம் ஆனது.

12. குருகடாட்சம் யாரிடம் சேர்க்கும்?
இறைவனிடம் சேர்க்கும்.

13. நல்ல குருவை அறிவது எப்படி?
சுயநலம், ஆடம்பரம், பாரபட்சம் அற்ற எளிமை, ,இனிமை, தெய்வீகம்
அமைதி, சாந்தம் நற்பண்பின் வடிவுமானவர்.

14. குருவாக ஆவதற்கு வயது உண்டா?
தெய்வீக தெளிவு இருந்தால் போதும்.

15. குருவில் ஆண் பெண் உண்டா?
தெய்வீக வழியில் நாடவும்.- அறியாமை இருளை மறையச் செய்ய – யார்
வேண்டுமானாலும் இருக்கலாம்.

16. குரு தன்மை என்ன?
இறைத்தன்மை நிறைந்தவர்.

17. குருவால் தெய்வீகத்தை காட்ட முடியுமா?
முடியும் நீ தகுதி உடையவனாய் இருந்தால்.

18. குருவுக்கு தகுதி வேண்டுமா? – கடவுளை காட்ட
வேண்டும் உணர முடியாததை உணர்த்தும் போது உணர்ந்து கொள்ள
வேண்டும் நீ உணரவும் தகுதி உள்ளவனாக வேண்டும்.

19. குரு ஞானம் எப்படிப்பட்டது?
காலத்தில் உன்னை மீட்பது
காலம் கடந்தும் வாழ்வதும்
மறைந்த பின்னும் வாழவைக்க வாழ்வது

20. குரு ஞானத்தை வெல்ல முடியுமா?
குரு ஞானத்தில் நீ வெற்றியடைந்தால் உன் வெற்றி
குருவின் வெற்றியை பன்மடங்காக்கும்

21. உண்மை குருவை பரிசோதித்துக் கொண்டே இருக்கலாமா?
பரிசோதித்துக் கொண்டே இருக்கலாம்
நீ முன்னேறாமல் இருப்பாய்

22. குருவை நம்ப என் மனம் மறுக்கிறது ஏன்?
முதலில் உன்னை நம்பு பிறகு குருவை நம்பு

23. குரு சேவை எதற்கு?
குரு சேவை குருவுக்கு அல்ல அவருக்குள் இருக்கும் அருளுக்கும்
மெய்ஞானத்திற்கும் உன் சேவை சமர்ப்பணம் ஆகிறது. குரு சேவையே இறைசேவை.

24. குரு ஆடையை வைத்து எடை போடலாமா?
குரு என்பவர் ஆடை அணிகலன்களில் இல்லை. பணிவும், பண்பும்,சொல்லும்
செயலும் ஒன்றாக இருக்கும் தெய்வீகம். தெய் வீகத்திற்கு ஆடை அலங்காரம்தேவையில்லை.

25. குருவுக்கு மற்றோர் பெயர் கூறுங்கள்?
குரு என்பவர் பாவ விமோட்சகர்.

26. குரு உருவம் எப்படிப்பட்டது?
குரு என்பவர் மனித உருவில் உயர் நிலையை உடையவர். ஒரு இறைவனின்
போதகர் சாந்தமான தெய்வீகமே குருவின் உருவம்.

27. குருவை நாம் தேடிச் செல்ல வேண்டுமா?
இறைதேடல், இறைதாகம், இறைப்பசி, இருந்தால் நீ தேடுவாய்

28. குரு என்பவர் கடவுளா?
உன்னுள் கடவுள் ஒழிந்து இருக்கிறார்
குருவினுள் கடவுள் நிறைந்து இருக்கிறார்

29. ஒழிந்து இருப்பதின் அர்த்தம் என்ன?
எல்லாம் கடந்தவர் கடவுள்.கடவுளை அறிந்தால் குருவைத் தேடமாட்டாய்.
உன்னுள் ஒழிந்தவனை தேடுவாய் நீ ஒளிர.

30. குரு என்பவர் எதற்கு?
குரு என்பவர் கடவுளுக்கும் நமக்கும் உள்ள தெய்வீகத் தொடர்பை
ஏற்படுத்துவதற்கு.மாயை நிலையை விலக்கி மன இருளை அகற்றுவார் .

31. குரு கடவுளை அறியச் செய்வாரா?
குரு கடவுளை உன்னுள் தெரியச் செய்வார்.

32. குருவின் மகத்துவம் என்ன?
தான் அறிந்ததை பிறர் அறியச் செய்வது

33. குருவை சோதிக்கலாமா?
அது நெருப்பாக இருந்தால் உன்னைச் சுடும்.

34. குரு பக்தி எப்படிப்பட்டது?
குரு பக்தி குழந்தை தாய்மீது வைக்கும் அன்பு போன்றது.

தாய்மை தெய்வத்தின்(பிறப்பிடம்)

35. குருவிடம் போக மனப்போராட்டம் இருக்கலாமா?
முதலில் குருவிடம் சரணடைய மனப்போராட்டம் மாண்டுபோகும்.

36. தெய்வீக குருவை எவ்வாறு அறிவாய்?
அவரைக் காண மனம் துடிக்கும்
அவரை ஒவ்வொரு கனமும் காண மனம் ஏங்கும்
ஒரு நாள் ஒரு பொழுதேனும் அவரை நினைக்கும்
அவர் முன் அமர மனம் ஏங்கும்
அவரைப் பிரியாது இருக்க மனம் மறுக்கும்
அவர் முன் மனம் அடங்கும்
அவர் சொல்வதை கேட்டு ரசித்து நல்வழியில் நடக்கும்.

 

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com