ஜூலையில் தமிழகம் வருகிறது மகாராஜா சொகுசு ரயில்

Advertisements

 

திருவனந்தபுரம்: உலக புகழ்பெற்ற மகாராஜா விரைவு ரயில் என்கிற சுற்றுலா ரயிலை ஐஆர்சிடிசி இயக்கி வருகிறது. இந்த சொகுசு சுற்றுலா ரயில் உள்நாட்டு பயணிகளுக்காக தென் இந்தியாவில் ஜூலை மாதம் முதல் இயக்கப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது. மகாராஜா எக்ஸ்பிரஸ் என்ற சொகுசு சுற்றுலா ரயில் உள்நாட்டு பயணிகளுக்காக இயக்கப்பட்டு வருகிறது. மிக அதிநவீன வசதிகள் கொண்ட இந்த ரயிலில் தங்கத் தட்டில் உணவு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதுவரை மும்பையில் இருந்து ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஆக்ரா உள்ளிட்ட வடமாநில நகரங்களுக்கு இயக்கப்பட்ட இந்த ரயில் முதன்முறையாகத் தென் மாநிலங்களுக்கு வருகிறது.

அதன்படி திருவனந்தபுரத்தில் இருந்து ஜூலை ஒன்றாம் தேதி புறப்படும் இந்த ரயில் காரைக்குடி, செட்டிநாடு, சென்னை, மைசூர், கோவா வழியாக மும்பை வரை செல்கிறது. இதற்கான கட்டணம் லட்சக் கணக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஐ.ஆர்.சி.டி.சி கூடுதல் பொது மேலாளர் ரவிக்குமார், மகாராஜா சொகுசு ரயிலில் பயணம் செய்ய விரும்புவோர் ஐ.ஆர்.சி.டி.சியின் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்றும் முழுப்பயணத்திற்கான கட்டணம், ஐந்து லட்சத்து 680 ரூபாய் என்றும் தெரிவித்தார். மேலும், பகுதியாக பயணம் செய்ய விரும்புவோருக்கு 50 சதவிகித சலுகையாக ஒரு பயணச்சீட்டில் இருவர் பயணம் செய்யலாம் என்றும் பகுதிப் பயணத்திற்கு 33 ஆயிரத்து ‌50 ரூபாயை சேவைக் கட்டணத்துடன் செலுத்தி பயணம் மேற்கொள்ளலாம் என்ற‌ம் தெரிவிக்கப்‌பட்டுள்ளது.

மேலும் ஒருவருக்கு இந்தக் கட்டணம் செலுத்தினால் உடன் வரும் ஒருவர் கட்டணமில்லாமல் இலவசமாகப் பயணிக்கலாம். இதில் ரயில் கட்டணம், எட்டு நாட்களுக்கான உணவுக் கட்டணம், வழியில் நட்சத்திர விடுதிகளில் தங்கும் கட்டணம், சுற்றுலாத் தலங்களுக்குச் சுற்றுலாப் பேருந்தில் செல்லும் கட்டணம், நுழைவுக் கட்டணம் ஆகிய அனைத்தும் அடங்கும். மொத்தப் பயணத்துக்கான நாளின் கட்டணமும் அதிகமாக இருப்பதால் மூன்று நாட்களுக்கு இருவருக்கு ரூ. 66,500 ஒருவருக்கு 53,200 ரூபாய் என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com