[:en]தள்ளாட்டத்தில் அ,தி.மு.க —–  ஆர்.கே.[:]

Advertisements

[:en]

தமிழகத்தில் டாஸ்மாக் தள்ளாட்டம் குறைந்து. அ.தி.மு.க உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை அடைந்து கட்சி தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஓபிஎஸ்.,இபிஎஸ், டிடிவி என கட்சி முன்று அணியாகவும், பட்டியல் சமூகத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள்  தனிக் கூட்டம் போட்டதன் அடிப்படடையில் நான்காகவும்,  தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வில்லை என்று முதல்வரை சந்தித்த எம்எல்ஏக்கள் ஐந்தாகவும் இன்னும் எத்தனை துண்டாக போகப் போகிறது என்று இன்னும் சில நாட்களில் தெரியப் போகிறது.

இது அதிமுக தொண்டர்களிடையே அச்சதையும், கவலையும் ஏற்படுத்தியுள்ளது. கட்சி இருக்குமா? இல்லை காணாமல் போகுமா? என்ற கேள்வி அவர்களை  துளைத்துக் கொண்டு இருக்கிறது. எந்த முடிவுகளையும் எடுக்க முடியாமல் இருக்கின்றனர். தொண்டர் ஆதரவு எங்களுக்குத்தான் என்று ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் மாறி  மாறி  கூறி வரும் வேளையில் உண்மை நிலவரம் தேர்தல் சமயத்திலேயே தெரிய வரும்,

தினகரன் ஜாமீனில் வெளி வந்தவுடனேயே அதிமுகவில் சலசலப்பு ஏற்படப் போகிறது என்று அனைவரும் கணித்ததே.  அது அச்சுபிசிறாமல் நடந்தேறி வருகிறது. தினகரன் கேட்கும் கேள்விக்கு பதில் பிரிந்து நிற்கும் இரு அணிகளிடமும் இல்லை. விலகி இருங்கள் நாங்கள் ஒன்று சேர நீங்கள் தான் தடை என்றார்கள். அவரும் சரி இணைந்து கொள்ளுங்கள் என்றார். ஆனால்  இணைவதற்கு வழியைக் காணோம். அப்படி என்றால் இணையத் தடை தினகரன் அல்ல, வேறு ஏதோ ஒன்று என்று வெட்ட வெளிச்சமாகியது.

இப்போது தினகரன் டெர்ன். எங்கே இணைப்பு? பூரம் போக்கஸா, நான் கட்சி பணியை பார்க்கப் போகிறேன் இறுதி கெடு 60  நாள்கள் என்று இரு அணிகளுக்கும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது,  தினகரனின் இந்த அதிரடி அறிவிப்பு இரு அணிகளுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தினகரன் வகையறாக்களுடன் எங்களுக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்ற அறிவிப்பு தொடர்கிறது. அவருடன் யாரும் தொடர்பு வைக்கக்கூடாது என்ற ஜெயக்குமார் அறிவிப்புக்கு பிறகு 27 எம்எல்ஏக்கள் தினகரன் வீட்டிற்கு அணிவகுப்பு. 5 எம்எல்ஏக்களின் கூடுதல் எண்ணிக்கையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடிக்கு இது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆட்சி அந்தரத்தில் எந்த நேரம் எதுவும் நடக்கலாம். ஆட்சியை யாரும் அவ்வளவு எளிதில் கவிழ்க்க மாட்டார்கள் என்று அரசியல் நிபுணர்கள் கூறி வந்தாலும். எனக்கு இல்லாதது உனக்கும் இல்லை என்று முடிவு எடுப்பார்களேயானால் ஆட்சியின் காட்சி முடிவுக்கு வரும் நாள் தொலைவில்லை இல்லை. வரும் நாட்களில் அதிமுக தள்ளாட்டம் தகுதியாட்டமாகுமா? இல்லை தாங்காது கவிழுமா என்பதே இப்போது உள்ள கேள்வி.[:]

You may also like...

Leave a Reply