[:en]வேறு எதையோ தேடிக்கொண்டிருக்கிறோம்[:]

Advertisements

[:en]பல நூறு ஆண்டுக்கு முன் காட்டுவாசி இனம் ஒன்று வாழ்ந்து வந்தது.

அவர்கள் விலங்கை வேட்டையாடி அதனை உண்டு வாழ்ந்து வந்தனர்

பயங்கர மிருகங்கள் மனிதர்களின் எண்ணிக்கையை விட பலமடங்கு

அதிகமாக இருந்தபடியால் அடிக்கடி சிங்கம் புலி சிறுதைக்கு மனிதர்கள்

பலி ஆகிக்கொண்டு இருந்தனர்.

காட்டுவாசிகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைய துவங்கியது.

அந்த சூழ்நிலையில், எங்கிருந்தோ ஒருமனிதன் அவர்களின்

இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தான்.

காட்டுவாசிகள் முதலில் அச்சப்பட்டாலும் பின்பு அவனையும்

அவர்களின் கூட்டத்தில் சேர்த்துக்கொண்டனர்.

அவர்களுடனே தங்கியிருந்த அன்னியன் அவர்களின் பிரச்சினைக்கு

ஒரு தீர்வு சொன்னான்.

இரும்பு என்ற உலோகம் இருப்பதாகவும் அதனைக்கொண்டு

நம் தேவைக்கு ஏற்ப கூர்மையான ஆயுதங்கள் செய்து மிருகங்களை

தூரத்தில் இருந்து தாக்கி அழிக்கலாம் என்று சொல்ல

காட்டுவாசிகள் அது எங்கே இருக்கிறது என்று ஆவலுடன் கேட்க

அன்னியன்.’ வடக்கு திசையில் இரும்புப்பாறையாலான மலை

ஒன்று இருப்பதாகவும் அதைத்தேடித்தான் நான் இங்கு வந்தேன்”

என்று கூறினான்.

உடனே காட்டுவாசி தலைவன் இதனை நாங்கள் எப்படி நம்புவது

என்று சந்தேகிக்க,

அவன் மறைத்து வைத்திருந்த சிறிய இரும்பு துண்டை காட்டினான்.

அந்த இரும்பு துண்டையே ஆயுதமாக வைத்துக்கொண்டு அவர்கள்

அனைவரும் இரும்புப்பாறையை தேடி புறப்பட்டனர்

 

காலங்கல் உருண்டோடியது………

 

இப்போது அங்கே அன்னியனும் இல்லை அந்த காட்டுவாசி தலைவனும் இல்லை

ஆனால் அவர்களின் பயனம் மட்டும் தொடர்ந்தது.

எதிரே மிகப்பெரிய மலை ஒன்று தென்பட்டது.

அப்போதய தலைவன் மிகவும் கவனமாக அதன் அருகே சென்றான்.

அதனை தட்டிபார்த்தான், சத்தம் கேட்டது, ஆழமாக யோசித்தான்.

பின் கூட்டத்தை பார்த்து கவலை வேண்டாம் இது மண்பாறையில்லை

நம்மை சருக்கிவிடாது,ஆனால் பகலில் இதை கடக்கமுடியாது

வெப்பம் அதிகறிக்கும். ஆதலால் இரவுக்குள் இந்தமலையை

கடந்தாகவேண்டும் என்று கட்டளையிட்டான்.

அந்த நாடோடிகூட்டம் இப்போது இரும்புப்பாறை மீது அவசர,அவசரமாக

ஏறிக்கொண்டு இருந்தது.

 

இப்படித்தான் நம்முடைய மூலத்தை விட்டு வேறெதையோ

தேடிக்கொண்டிருக்கிறோம்[:]

You may also like...

Leave a Reply