[:en] சிறுநீர் மருத்துவம் – ஒரு அறிமுகம்[:]

Advertisements

[:en] 

சிறுநீர் சிகிச்சையை முதன்மைப்படுத்தும் ஒரு அறிவியல் வலைப்பூ. சித்தர்கள் முதல் நிறைய சான்றோர்கள் ஆதரித்த முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம் அல்லது சிறுநீர் மருத்துவத்தின் மேன்மைகளைப் பரப்ப இவ்வலைப்பூ முயலும்.

கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் மாநாட்டிற்காக உருவாக்கப்பட்ட கட்டுரை:


RMR.இராஜசேகரன்
காரைக்குடி

சித்தர்கள் அருளிய ஆரோக்கிய வாழ்வியல்

ஆரோக்கியத்திற்கான அடிப்படை:

இன்றைய உலகில் மனித சமுதாயம் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் பயனாக வசதியான வாழ்க்கை பெறமுடிகிறது. ஆனால் மனத்தளவில் நிறைவோ, அமைதியோ அல்லது உடலளவில் ஆரோக்கியமோ இருக்கிறதா என்பது கேள்விக்குரியது. நவீன மருத்துவம் வளர்ந்துள்ள இந்நாளில் ஏன் நோய்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது; மருத்டுவனமனைகளின் எண்ணிக்கையும், மருந்துக்கடைகளின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டே போகிறது. மேலும் இன்று நாட்பட்ட நோய்களை நிரந்தரமாகக் குணப்படுத்த முடியாதோ என்ற நிலை உள்ளது. இதை நவீன மருத்துவமும் மறுப்பதாக இல்லை. நவீன மருந்துகளின் பக்கவிளைவுகளையும், பின்விளைவுகளையும் யாரும் மறுப்பதற்கில்லை. இதில் கொடுமை என்னவென்றால் நோய்களைக் குணப்படுத்த வேண்டிய மருந்துகள், புதிய தீராத நோய்களுக்கு வழிகோலுவதுதான். அடுத்து நோய்களின் எண்ணிக்கை பெருகுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் நம் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்துகொண்டே போவதுதான். மனதைச் செம்மையாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வழிகாட்ட பலவேறு யோகா மற்றும் ஆன்மிகப் பயிற்சிகள் தோன்றிக்கொண்டே இருந்தபோதும், பெரிதாக பலன் கிட்டியிருப்பதுபோல் தோன்றவில்லை.

எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தபோதும், மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் இல்லையெனில் மகிழ்ச்சியான வாழ்க்கை எப்படி அமையும்? அப்படியெனில் இதற்கு வேறு வழியே இல்லையா?

இதுபோன்ற கேள்விகளுக்கு விடைகாண இக்கட்டுரை முயல்கிறது.

நமது ஆய்வை பரிணாமத்திலிருந்து துவக்குவோம். பரிணாமத்தைப் பொறுத்தவரை அறிவியலாருக்கும், ஆன்மிகத்தாருக்கும் ஒரு சில விஷயங்களில் ஒற்றுமை இருப்பதைப் பார்க்கலாம். உயிர் என்பது சிற்றுயிர்களிலிருந்து பேருயிர்களாகப் பரிணமிக்கின்றது. விலங்கினங்கள் எளிய, சிக்கலற்ற, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கின்றன. ஆனால் மனித இனம் மட்டும் துன்பங்கள், துயரங்கள், கவலைகள் என்று அதிருப்தியான வாழ்க்கை வாழ்கின்றது. இது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மனித இனம் ஆறாம் அறிவைப் பெற்ற ஒரே உயிரினம் என்று பெருமை பேசுகிறோம்; பரிணாமத்தில் உச்சத்தில் இருக்கிறது என்று சொல்லிக்கொள்கிறோம். அப்படியிருக்க ஏன் இந்த துன்பமான, துயரமான வாழ்க்கை?

விலங்கினங்கள் நம்மை விட ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்கின்றன. அவை இயற்கையான வாழ்க்கை வாழ்கின்றன. இயற்கையில் எப்படிக் கிடைக்கிறதோ அப்படியே உணவை உட்கொள்கின்றன. உணவை அவை மாற்றவோ, சீர்திருத்தவோ, ருசிகூட்டவோ முயல்வதில்லை. ஆனால் மனிதனோ தனது பரிணாம வளர்ச்சி பெற்ற புலன்களால் இயற்கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் தனது தேவைக்காகவோ, ருசிக்காகவோ மாற்ற விரும்புகின்றான். சுருங்கச்சொன்னால் இயற்கையை வெல்ல மனிதன் விரும்புகின்றான். மனிதன் மாறுதல்களை விரும்புகின்றான். இவ்வாறாக, மனிதனது வாழ்க்கை முற்றிலும் செயற்கையாக மாறிக்கொண்டிருக்கிறது. உணவை எடுத்துக்கொண்டால், உணவை வேறு பொருட்களுடன் சேர்த்து, சமைத்து, நிலைமாற்றி தனது ருசிக்கேற்ப அல்லது தேவைக்கேற்ப உண்ண விரும்புகின்றான். இதனால் உணவுப் பொருட்களின் குணாதிசியங்கள் சமயத்தில் முற்றிலுமாக மாறிவிடுகின்றன. மூலப்பொருட்களில் இருந்த குணங்கள் அழிக்கப்பட்டு விடுகின்றன. இதுதான் மனிதனின் துன்பத்திற்கு மூல காரணமா?

பரிணாமத்தில் எல்லா உயிர்களுக்குமே புலன்கள், உள்ளுணர்வுகள், தேவைக்கேற்பவும், சுற்றுச்சூழலுக்கேற்பவும், காலத்திற்கேற்பவும் தகவமைத்துக்கொள்ளும் ஆற்றல் ஆகியவற்றைஇயல்பாகவே பெற்றுள்ளன.

விலங்கினங்கள் இயல்பான, இயற்கையான வாழ்க்கை வாழ்கின்றன. வாழ்வை உள்ளபடி அவை எதிர்கொள்கின்றன. உணவைப் பொறுத்தவரை கிடைத்தவற்றை, எதையும் மாற்ற முயலாமல் அப்படியே உண்கின்றன. அவைகளுக்கு வியாதி என்பது சாதாரணமாக உண்டாவதில்லை. அப்படியே நோய்நொடி உண்டானாலும் தன்னை எப்படி குணப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அவைகளுக்குத் தெரிந்திருக்கின்றது. அவை மருத்துவர்களையோ அல்லது வெளி உதவியையோ,பிறரது ஆலோசனையையோ நாடிச் செல்வதில்லை.

உலகின் பல்வேறு இடங்களிலும், பல்வேறு காலங்களிலும் வாழ்ந்த சான்றோரும், தத்துவ ஞானிகளும், மதத் தலைவர்களும் மனித வாழ்க்கைக்கு நிச்சயமான குறிக்கோள் இருக்கின்றது என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளனர். “உன்னையே நீ அறிவாய்” என்று அறிவுறுத்தியுள்ளனர். இந்த இலக்கை அடைய, மனிதனுக்கு ஆறாம் அறிவு தேவைப்பட்டது; அதனாலேயே பரிணாமம் நமக்கு ஆறாம் அறிவை வழங்கியுள்ளது. இந்த ஆறாம் அறிவால் உந்தப்பட்டு, மனிதன் எல்லாவற்றிலும் காரண காரியத்தைத் தேடுகிறான். இப்பேரண்டத்தில் ஒவ்வொரு விளைவிற்கும் ஒரு காரணம் கண்டிப்பாக உண்டு என்று உணர்கிறான். மனிதனுக்கு பரிணாமம் செயலாற்றும் வல்லமைகொண்ட இரு கரங்களைத் தந்துள்ளது. தனது அறிவையும், கரங்களையும் கொண்டு மனிதன் நுட்பமான கருவிகள், உபகரணங்கள், எந்திரங்கள் ஆகியவற்றை உருவாக்கியுள்ளான். இவற்றைக்கொண்டு தனது தேவைக்கான பல புதிய புதிய பொருட்களை உருவாக்கவும் செய்கிறான். இது அவனது ஆறாம் அறிவால் கிடைத்த பேறு அல்லது சிறப்பு. எனவே அவன் எல்லாவற்றையும் வெவ்வேறுவகையாக மாற்றிப்பார்த்தால் என்ன என்ற எண்ணத்துடன் செயல்படுகிறான்.

இந்நிலையில் நோய்நொடிகள் தவிர்க்க இயலாதவை. விலங்கினத்தைப் பொறுத்தவரையில் துன்பம் விளைவிப்பவை, தீங்கு விளைவிப்பவை ஆகியவற்றை தவிர்க்க அவைகளின் உள்ளுணர்வு வழிகாட்டுகின்றது. ஆனால் மனிதனுக்கு அவனது உள்ளுணர்வு வழிகாட்ட, எச்சரிக்க தவறிவிட்டதோ என்று தோன்றுகிறது. இதை இன்னும் விரிவாகப் பார்க்கலாம்:

1. ஆடுகள் ஊமத்தை, எருக்கு போன்றவற்றை தின்றாலும் அவைகளுக்கு ஊறு நேர்வதில்லை.

2. சில பூச்சிகளின் வாழ்க்கையில் லார்வா என்றொரு பருவம் வருகிறது. இப்பருவத்தில் அவைகளுக்கு பார்க்கும் சக்தி இருப்பதில்லை. எனினும் அவை தவிர்க்கவேண்டியவற்றை தவிர்த்து, வேண்டிய இலைதழைகளை மட்டும் உண்டு உயிர்வாழ்கின்றன.

3. சாதாரணமாக சமையலுப்பு, வெங்காயம், புளி, இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு, மிளகாய் போன்றவற்றை மனிதன் அப்படியே உண்பதில்லை. ஆனால் அவற்றை வேறுவேறு அளவில், வேண்டிய இடங்களில் தேவைக்கேற்ப உணவுடன் சேர்த்து உண்கின்றன. அவ்வாறு செய்யும்போது சுவைகூடி, ஏற்புடையதாக உணவு மாறுகின்றது.

4. இன்றைய நவீன யுகத்தில், நம் வாழ்வில் நாம் பல இரசாயனப் பொருட்களையும், தாதுக்களையும், உலோகங்களையும் கையாள நேர்கிறது. இவற்றில் பல நம் உடலினுள் சென்று, அவற்றின் தன்மைக்கேற்ப விளைவுகளை உண்டாக்குகின்றன.

கிட்டத்தட்ட நாம் உட்கொள்ளும் அனைத்துப் பொருட்களுமே நம் உடலிலும், மனிதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவை என்பதை அனுபவரீதியாகப் பார்க்கிறோம். இத்தாக்கங்கள் அனைவருக்கும் ஒன்றுபோல இருப்பதில்லை; மாறுபடுகின்றன. மரபுக்கூறுகள், உடலமைப்பு, உணவின் தன்மை, குணங்கள், எண்ணங்கள், சுற்றுச்சூழல், காலம், செயல், எந்தக் கட்டத்தில் மனிதன் வாழ்கிறான், அவனது பழக்க வழக்கங்கள், தனித்தன்மைகள் போன்றவற்றால் மாறுபடுகின்றன.

ஹோமியோபதி மருத்துவத்தின் பதார்த்த குணா சிந்தாமணியைப் படித்தால் பொருட்களின் தாக்கங்கள் மனிதனுக்கு மனிதன் மாறுபடலாம் என்ற உண்மை எளிதில் விளங்கும். இத்தாக்கங்களின் தன்மையும், அளவும் மாறுபடுகின்றது. எனவே காரண காரிய விளக்கம் என்பது சிக்கலாகிறது. மேலும் பல சமயங்களில் இத்தாக்கங்கள் எளிதில் காணக்கூடியவையாகவோ அல்லது உணரக்கூடியவையாகவோ இருப்பதில்லை.

இப்போது நமக்கு இரண்டு வினாக்கள் எழுகின்றன: மனித இனத்திற்கு துன்பம் என்பது தவிர்க்க முடியாததா? நம் பரிணாமத்தில் ஏதாவது கோளாறு இருக்கிறதா?

வல்லுனர்கள் இப்பேரண்டத்தில் நுட்பம், வரைமுறை, ஒன்றுக்கொன்று தொடர்பு (Pattern, Precision, Regularity) போன்றவற்றை எல்லாவற்றிலும் காண்கின்றனர். இது பரிணாமம் எவ்வளவு சரியாக, நேர்த்தியாகச் செல்கிறது; அதில் விபத்து என்றோ எதிர்பாராதது என்று எதையும் கூறுவதற்கில்லை என்ற பேருண்மையை உணர்த்துகிறது. இதை சிற்றுயிர்களிலும் விலங்கினத்திலும் கண்ணுறலாம். எனவே இது மனித இனத்திற்கும் பொருந்தாமலிருக்க காரணம் இல்லை. மேற்கண்ட இரண்டு வினாக்களுக்கும் பதில் “இல்லை” என்பதே.

மனிதனின் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும்பரிணாமத்தைக் குறைகூறுவது என்பது சரியில்லை,முறையில்லை என்பது தெளிவாகிறது.

நோய்நொடிகளை எதிர்கொள்ளும் ஆற்றலை, அவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் ஆற்றலை பரிணாமம் வழங்காதிருக்க முடியாது. இந்த நோய் எதிர்ப்பாற்றலை மீறி நோய்வாய்ப்படும்போது எளிய முறையில் சீர் செய்துகொள்ள வழிமுறைகளையும், மருந்துகளையும் இயற்கை வழங்காதிருக்க முடியாது.

விலங்குகள் தங்கள் நோயநோடிகளுக்கு மருந்துதேடி யாரிடமும் செல்வதில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம். மனிதனுக்கும் இது பொருந்த வேண்டும். அப்படியானால், அப்படி மருந்தைத் தேர, ஏதாவது வழி தெரிகிறதா? எங்கே மருந்தைத் தேடுவது?

மனம், புத்தி, புலன்கள், உடற்கட்டு, திறமைகள் எப்படி எல்லாவற்றிலுமே மனிதன் விலங்குகளிடமிருந்து மாருபடுகிறான். மனிதனின் துன்பத்திற்கான காரணங்களும், நிவர்த்திகளும் அவனது புலன்களிலேயே இருக்க வேண்டும். முரண்பட்டுத் தத்துவத்தின்படி நோயின் காரணங்களும், அவற்றை குணப்படுத்தும் வழிகளும் – இரண்டுமே – ஐம்புலன்கள் அறிந்ததாக இருக்கவேண்டும். தன்னையறிதலிலும் ஐம்புலன்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

ஒவ்வொரு உடல் உறுப்பும் இயற்கையின் பல சோதனைகளுக்குப் பின்னரே தேவை, நோக்கம், சுற்றுச்சூழல் போன்ற பலவற்றையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. எந்த உறுப்பும் அனாவசியம் என்றோ, தேவையில்லை என்றோ கூறமுடியாது. இங்கே சில உதாரன்களைப் பார்ப்போம்: மரங்கொத்திப் பறவைக்கு அதன் இரை தேடும் தேவைக்கேற்ப நீண்ட அலகு அமைந்துள்ளது. மீன்கொத்திப் பறவை தன இரையைத் தேடிக்கொள்ள ஆற்றல் மிக்க கண்களையும், செங்குத்தாகக் கீழே இறங்கி, இரையைப் பற்றி, செங்குத்தாக மேழெழும்பும் ஆற்றலையும் (Vertical Landing and Vertical Take-off) பெற்றுள்ளது. மீன்களுக்கு நீந்த ஏதுவான உடலமைப்பு உள்ளது. தவளைகள் நிலத்திலும், நீரிலும் வாழ்வன; அதற்கேற்ற உடலமைப்பை அவை பெற்றுள்ளன.

பெண் கங்காரு தன் குட்டியைச் சுமந்து செல்ல ஏற்றவாறு வயிற்றில் ஒரு பை போன்ற வடிவமைப்பைப் பெற்றுள்ளது. இதை இன்னும் சற்று ஆழமாகப் பாப்போம். கங்காரு ஒரு மம்மல் – அதாவது குட்டி போட்டு பால் கொடுக்கும் இனத்தைச் சேர்ந்தது. அது மூன்றடி உயரம் வரை வளரும். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தாவித் தாவி வேகமாக குதித்துச் செல்லும். எனவே, குட்டிக்கு பாதுகாப்பு சிறப்பாக இருக்கவேண்டும். இல்லையெனில், வயிற்றில் சுமக்கும் கரு சிதைந்துவிடும்; அல்லது தூக்கிச் செல்லும் குட்டிக்கு ஆபத்து நேரிடலாம். கண்காருக்குட்டி தனது முதல் ஆறு மாதங்களை தன் தாயின் வயிற்றிலுள்ள பையிலேயே கழிக்கிறது. பால் சுரக்கும் உறுப்பும் அந்தப் பையிலேயே அமைந்துள்ளது. எனவே வெளியே வராமலேயே தாயின் வெளிப்பக்கத்திலுள்ள அந்தப் பையிலிருந்தே குட்டி பால் குடிக்க முடியும். இயற்கை எவ்வளவு நேர்த்தியாக, பிரமிக்கும்படியாக செயல்பட்டுள்ளது என்பதை இது உணர்த்துகிறது.

அடுத்து யானையை எடுத்துக் கொள்வோம். அதுவும் ஒரு மம்மல்தான். அதன் வடிவமைப்பும் வித்தியாசமாக, சிறப்பாக இருப்பதைப் பார்க்கலாம். உயரமான, மிகக் கனத்த, மிகப் பெரிய உடலமைப்பு. நினைத்துப் பாருங்களேன்: எளிதில், நீட்ட, சுருக்க, மடிக்க, உறிஞ்சி வைத்துக்கொள்ள, ஏதுவான துதிக்கை மட்டும் இல்லையெனில் அது நீர் பருக எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கும்! இயற்கை யானையின் வடிவையும், தேவைகளுக்கும் ஏற்ப வேண்டிய உறுப்புகளை படைத்துள்ளது.

இப்போது மனிதனை எடுத்துக் கொள்வோம். நான்கு கால் பிராணிகளிடமிருந்து பரிணமித்தவன் மனிதன். படுக்கை வாட்டிலிருந்து, செங்குத்தாக நிமிர நிமிர , முன்னங்கால்கள் இரண்டும் முன்னங்கைகளாகின. இந்த மாற்றத்தில் மனிதனின் கரங்கள் இரண்டும் எளிதாக அவனது பிறப்புறுப்பை அடையமுடியும். தன் உள்ளங்கையை ஒரு கோப்பையைப்போல் ஆக்கிக்கொண்டு திரவப்பொருட்களை கையிலேந்தமுடியும். இதன் நோக்கம் என்ன?

தற்போது நாம் வேறு சில உயிரினங்களைப் பார்க்கலாம். சிங்கம், புலி, வரிக்குதிரை, குரங்கு, ஆடு, மாடு, ஓணான் போன்றவை தன் சிறுநீரைத் தானே பருகுகின்றன. மனிதனுக்கு உள்ளதுபோல் கோப்பை போன்ற உள்ளங்கை அமைப்பு இல்லாததால் அவை சிறுநீரை நேரடியாகவே சுவைக்கின்றன. குட்டி போட்டபின் குட்டியைச் சுற்றியுள்ள ஜவ்வை நாவினால் நக்கிச் சுவைக்கின்றன. குட்டி வெளிப்படுத்தும் சிறுநீரை அவை அருந்துகின்றன. தனது சிறுநீரை தானே நேரடியாக சுவைக்க இயலாத சில பிராணிகள் தனது இனத்தைச் சேர்ந்த மற்றவற்றின் சிறுநீரைச் சுவைக்கின்றன. நமக்கு இது விநோதமாகவோ, வித்தியாசமாகவோ படலாம். ஆனால் அவை இதை இயல்பாகச் செய்கின்றன. அவை தனது பிறப்பு உறுப்பையோ அல்லது தன் இனத்தின் மற்றையவற்றின் பிறப்புறுப்பையோ நுகர்கின்றன, சுவைக்கின்றன. நாய், ஆடு மாடு போன்றவற்றைக் கவனித்தால் இவ்வுண்மை புரியும். இது ஏன்?

எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானவை மூன்று: உயிர் வாழவும், வளரவும் தேவையான உணவு; வசிக்க உறைவிடம்; மற்றும் இனப்பெருக்கம். ஆனால் விலங்குகளைப்போல் மனிதன் சிறுநீரைப் பருகுவதில்லை. மனிதனின் உடலமைப்பு தன் சிறுநீரைத் தானே நேரே பருக ஏற்றதாக இல்லை. அவனது உள்ளுணர்வும் சிருநீரைப்பருக உந்துவதில்லை. மேலும், சிறுநீரை ஒரு கழிவாக மனிதன் கருதுவதாலும், அதன் மேல் ஒரு அருவருப்பு உண்டாகிவிட்டது.

தன் சிறுநீரைத் தானே பருகும் விலங்குகள் மனிதன் போல் நிறைய நோய் நொடிக்கு ஆளாவதில்லை. அப்படியெனில், சிறுநீரைப் பருகுவதற்கும், ஆரோக்கியத்திற்கும் தொடர்புள்ளதா? உடல்நிலை சரியில்லாதபோதோ, காயடிப்பட்டபோதோ எருது தன் சிறுநீரை அடிக்கடி பருகுகிறது. சில தினங்களில் அவை உடல் மெலிய ஆரம்பித்து விடும். இதைத் தவிர்க்க, அதன் கழுத்தில் ஒரு உலோக அல்லது மரக்கட்டை வளையத்தை பொருத்துகின்றனர். இது அது தன் சிறுநீரை பருக முடியாமல் தடுக்கும். இன்றைக்கும் கிராமங்களில் இதைக் காணலாம். ஏன் அது தன் சிறுநீரை பருகுகிறது என்ற கேள்வி எழுகிறது. வலி, காயடிக்கப்பட்டதாலான அதிர்ச்சி அல்லது மற்ற உபாதைகளிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளவுமே இதைச் செய்கிறது. எனவே சிறுநீர் நோயநோடிகளைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டிருக்கவேண்டும்.

மற்ற விலங்குகளோடு சண்டையிடும்போது ஏற்பட்ட காயங்களையும், மற்ற உபாதைகளையும் தன் சிறுநீர் மூலம் சிற்றுயிர்கள் போக்கிக்கொள்வது அவற்றின் உள்ளுணர்வால். தன் குட்டிக்குத் தான் எப்படி உள்ளுணர்வால் பாலூட்டுகிறதோ அதைப்போல். எனவே மனிதனுக்கும் காயங்களையோ, உடல் உபாதைகளையோ, மற்ற நோயநோடிகலையோ போக்கிக் கொள்ள ஒரு வழி இருக்கவேண்டும்.

இக்கருத்தை மறுப்பவர்கள் கூறுவது, சிற்றுயிர்கள் உள்ளுணர்வை மட்டுமே நம்பியுள்ளன; எனவே அவற்றிற்கு இது பொருந்தலாம். ஆனால் ஆறறிவு படைத்த, முன்னேற்றமடைந்த மனிதனுக்கு இது பொருந்தாது.

எவ்வுயிராயினும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆரோக்கியம் அடிப்படையான தேவை. மனிதனைத் தவிர அனைத்துயிர்களும் ஆரோக்கியத்தைப் பேணிக்கொள்ளவும், நோய் வாய்ப்படும்போது குணப்படுத்திக் கொள்ளவும் தாமே வழி தேடிக் கொள்கின்றன. மனிதர்கள் நோயுறும்போது மற்றவரின் உதவியை நாடுகின்றனர். ஆனால் ஒவ்வொரு மனிதனும் தன் நோயை தானே போக்கிக் கொள்ள முடியும்.

உள்ளுணர்வால் உந்தப்பட்டு, கன்றுக்குட்டி தாயின் மாடு தேடி பால் குடிக்கிறது. ஆனால், மனித இனத்தில் தாய்தான் சேயின் குறிப்பறிந்து பாலூட்ட வேண்டும். குழந்தைக்கு அழ மட்டுமே தெரியும். தன் உணவைத் தானே தேடிக் கொள்ளும் உள்ளுணர்வு குழந்தையிடம் இல்லை. தாயுமே உள்ளுணர்வால் குழந்தைக்கு அமுதூட்டுவதில்லை. பட்டறிவினாலும், கற்றறிவினாலும் மட்டுமே அவள் செயல்படுகிறாள். அதேபோல், நோயநோடிக்கு மருந்து காண உள்ளுணர்வு உதவுவதில்லை.

விலங்குகள் (யானையைத் தவிர) நீரை நேரடியாகவே பருகுகின்றன. மனிதர்கள் நீர் பருக ஏதாவது ஒரு பாத்திரத்தை – டம்ளரை – பயன்படுத்துகின்றனர். ஆனால், தேவை வைக்கும்போது அவர்கள் தங்கள் கையினால் நீரையள்ளிப் பருக முடியும். சாதாரண நிலையில், கைகள் பிறப்புறுப்பின் அருகே நிலை பெறுகின்றன. எனவே சிறுநீரை கையில் எடுத்துப் பருகுவது என்பது எளிமையானது. அடிக்கடி நோயநோடிக்கு ஆளாகும் நைதனுக்கு அடிக்கடி சிறுநீர் பருகும் தேவை இருப்பதால் இவ்வாறு அமைந்திருக்கலாம்.

சிறுநீர் கழிவல்ல!

சற்று சிந்திப்போம். சிறுநீரை கழிவு என்பது சரிதானா? எந்த உயிரினமும் தன் கழிவைத் தானே உண்பதில்லை. விலங்குகள் தங்கள் சிறுநீரை பருகுகின்றன. எனவே அவை கழிவாக இருக்க முடியாது.

அறிவியலார் சிறுநீரை பகுத்து ஆராய்ந்து அதிலுள்ள நுண் பொருட்கள் பற்றிய விளக்கங்களைத் தந்துள்ளனர். அதன்படி சிறுநீரில் மனிதனுக்குத் தேவையான பத்தொன்பது தாதுஉப்புக்கள் உள்ளன. மனித ரத்தத்தின் ஒரு பகுதி தாய்ப்பாலாக மாறுகின்றதோ, அதுபோல் ரத்தத்தின் ஒரு பகுதியே சிறுநீர். பால் எவ்வாறு நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட உணவோ, அதுபோல் சிறுநீரும்.

பிறக்குமுன்னரே சிறுநீர் சிகிச்சை!

தாயின் கருவறையில் – பனிக்குடத்தில் – தாயின் வயிற்றில் வளரும் சிசு தன் சிறுநீரைக் கழிக்கிறது. அதில் ஒரு பகுதியைப் பருகுகிறது. இச்சுலர்ச்சி சிசு வளர உதவுகிறது. இதை நவீன மருத்துவம் ஏற்றுக்கொள்கிறது. எனவே பிறக்குமுன்னரே நாம் சிறுநீர் சிகிச்சையை மேற்கொள்கிறோம் என்பது தெளிவு.

சிறுநீரில் நோய் உண்டாக்கும் கிருமிகள்

சிறுநீரில் நோய் உண்டாக்கும் கிருமிகள் உள்ளதால், அது நோய்நொடிகளைத் தோற்றுவிக்கும் என்று நிறையப்பேர் கருதுகின்றனர். இது தவறான கருத்து என்பதை சுய சிறு நீர் சிகிச்சை எனும் ஆங்கில நூலில் கூறப்பட்டுள்ள விளக்கம் தெளிவாக்குகிறது. (குறிப்பு 4).

“தொண்ணூறு சதவிகிதத்தினரின் சிறுநீரில் எந்த விதக் கிருமியும் இருப்பதில்லை என்பது ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு.

மருத்துவர்களும் இதை ஏற்றுக் கொள்கின்றனர்.

மீதியுள்ள பத்து சதவிகிதத்தினரின் சிறுநீரில் நுண்ணுயிர்கள் இருக்கிறது. அத்தகைய சிறுநீரைப் பருகினாலும் கெடுதல் நேராது. சொல்லப்போனால், நமது சுற்றுச்சூழலில், நாம் சுவாசிக்கும் காற்றில், நாம் உண்ணும் உணவில், நாம் பருகும் நீரில் நிறைய நுண்ணுயிர்கள் உள்ளன. நமது உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலால் இவற்றால் எந்தக் கெடுதலும் நேர்வதில்லை.

மேலும் நுண்ணுயிர்களால் நோய்கள் ஏற்படுகின்றன என்பதே சர்ச்சைக்குரிய ஒன்று. நோய் உண்டாக்குவதாகக் கூறப்படும் நுண்ணுயிர்கள் நம்மைச் சுற்றியும், நமது எச்சளிலும், நமது உடலின் பல பகுதிகளிலும் எப்போதுமே இருக்கின்றன. ஆனால் அவற்றால் நாம் அனைவரும் நோய் வாய்ப்படுவதில்லை. எதிருயிர்களைப் பயன்படுத்தாத ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் உனானி மருந்துகள் நோய்களைக் குணப்படுத்துகின்றன. அதேபோல் இயற்கை மருத்துவம், அக்குப்ரஷர், அக்குப்பஞ்சர், காந்த சிகிச்சை போன்றவற்றில் மொத்தமாகக் கிருமிகளை அழித்து நோயைக் குணப்படுத்துதல் என்ற கோட்பாடே கிடையாது. இருப்பினும், அவை பல நோய்களைக் குணப்படுத்துகின்றன.

பாலுறவு நோய்கள், சிறுநீர்ப் பாதை நோய்கள் போன்ற நோய்களால் பாதிக்கப்படவர்களின் சிறுநீரில் நிச்சயமாக நிறைய நுண்ணுயிர்கள் உள்ளன. ஆனால் இந்த நோய்களும் கூட தன சிறுநீரைப் பருகுவதால் குணமடைகின்றன.”

சிறுநீரில் என்னென்ன இருக்கிறது?

டாக்டர் ஃபரோன் எழுதிய “பயோகெமிஸ்ட்ரி : அறிமுகம்” என்ற நூலில் சில ஆராய்ச்சிக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அதன்படி, 100 மில்லி லிட்டர் சிறுநீரில் உள்ள பொருட்களும், அவற்றில் அளவும்:

1. யூரியா நைட்ரஜன் 682.00 மில்லிகிராம்
2. யூரியா 1459.00 மில்லிகிராம்
3. கிரியேட்டினின் நைட்ரஜன் 36.00 மில்லிகிராம்
4. கிரியேட்டினின் 97.20 மில்லிகிராம்
5. யூரிக் அசிட் நைட்ரஜன் 12.30 மில்லிகிராம்
6. யூரிக் அமிலம் 36.90 மில்லிகிராம்
7. அமினோ நைட்ரஜன் 9.70 மில்லிகிராம்
8. அம்மோனியா நைட்ரஜன் 57.00 மில்லிகிராம்
9. சோடியம் ௨௧௨.00 மில்லிகிராம்
10. பொட்டாசியம் 137.00 மில்லிகிராம்
11. கால்சியம் 19.50 மில்லிகிராம்
12. மெக்னீசியம் 11.30 மில்லிகிராம்
13. க்ளோரைடு 314.00
14. மொத்த ஸல் ஃபேட் 91.00 மில்லிகிராம்
15. இனார்கானிக் ஸல் ஃபேட் 83.00 மில்லிகிராம்
16. இனார்கானிக் பாஸ் ஃபேட் 127.00 மில்லிகிராம்
17. N/10 அமிலம் 27.80 மில்லிகிராம்

மேலே கூறியவை தவிர பல என்ஸைம்களும், ஹார்மோன்களும் சிறுநீரில் உள்ளன. அவை:

என்ஸைம்கள் (Enzymes) :

1. அமைலேஸ் (Amylase (diastase)
2. லாக்டிக் டிஹைட்ரோஜினேஸ் (Lactic dehydrogenase – LDH)
3. லூசின் அமினோபெப்டைடேஸ் (Lucine amino-peptidase – LAP)
4. யூரோகைனேஸ் (Urokinase)

ஹார்மோன்ஸ் (Hormones):

1. கேட்டகோல் அமைன்ஸ் (Catachol amines)
2. ஹைட்ராக்ஸி ஸ்டீராய்ட்ஸ் (Hydroxy-steroids)
3. 17-கேடோ ஸ்டீராய்ட்ஸ் (17-Catosteroids)
4. எரித்ரோபாய்டீன் (Erithropoitine)
5. அடினைலேட் சைக்லேஸ் (Adenylate cyclase)
6. ப்ரோஸ்டோக்லாண்டின்ஸ் (Prostoglandins)
7. செக்ஸ் ஹார்மோன்ஸ் (Sex Hormones)

மற்றவை:

1. செம்பு (Copper)
2. யூரோபிளிநோஜென் (Urobilinogen)

டாக்டர் ஏ.எச்.ஃப்ரீ (Dr.A.H.Free) என்பார் 1975-ல் “சிறுநீரை ஆய்வகத்தில் பகுத்ததில் கிடைத்த தகவல்கள்” (“Urialysis in Clinical Laboratory Practice”) என்ற ஆங்கில நூலை வெளியிட்டார். அதில் சிறுநீரைப் பகுத்து ஆராய்ந்ததில் கீழ்க்கண்ட பொருட்கள் இருப்பதாகக் கூறுகிறார். அது மட்டுமல்ல, இதற்கு மேலும் பயனுள்ள இருக்கலாம் என்பது அவர் கருத்து.

பொருளும், அவற்றின் தினசரி அளவு மில்லிகிராமிலும்
(Constituents in Quantity: mg/day)
————————————

அலனைன் (Alanine) 38
அர்ஜினைன் (Arginine) 32
அஸ்கார்பிக் அமிலம் (Ascorbic acid) 30
அல்லன்டாயின் (Allantoin) 12
அமினோ அமிலங்கள் (Amino acids) 2.1 (g/day)
பைகார்பனேட் (Bicarbonate) 140
பயோடின் (Biotin) 35
கால்சியம் (Calcium) 23
கிரியேட்டினின் (Creatinine) 1.4
சிஸ்டைன் (Cystine) 120
டோபமைன் (Dopamine) 0.40
எபினெ ஃ பிரைன் (Epinephrine) 0.01
ஃ பாலிக் அமிலம் (Folic acid) 4
க்ளுகோஸ் (Glucose) 100
க்ளுடமிக் அமிலம் (Glutamic acid) 308
க்ளைசின் (Glycine) 455
இனோசிடால் (Inositol) 14
அயோடின் (Iodine) 0.25
இரும்பு (Iron) 0.5
லைசின் (Lysine) 56
மெக்னீசியம் (Magnesium) 100
மெங்கநீஸ் (Manganese) 0.5
மெதியோனைன் (Methionine) 10
நைட்ரஜன் (Nitrogen) 15
ஆர்னிதைன் (ஒர்நிதினே) 10
பேண்டோதினிக் அமிலம் (Pantothenic acid) 3
ஃ பினைல் அலனைன் (Phenylalanine) 21
ஆர்கானிக் ஃ பாஸ் ஃபரஸ் (Organic Phosphorus) 9
பொட்டாசியம் (Potassium) 2.5
ப்ரோடீன்கள் (மொத்த) (Total Proteins) 5
ரைபோ ஃ ப்லேவின் (Riboflavin) 0.9
ட்ரிப்டோ ஃ பேன் (Tryptophan) 28
டைரோசைன் (Tyrosine) 50
யூரியா (Urea) 24.5
விட்டமின் B6 (Vitamine B6) 100
விட்டமின் B12 (Vitamine B12) 0.043
ஜின்க் (Zinc) 1.4

ஆஸ்திரேலியாவைச் சார்ந்த திருமதி நடாலியா பெரேரா என்பார் தமது “சிவாம்பு சாஸ்திரம்: சிறுநீர் சிகிச்சையால் குணப்படுத்தும் முறை” (ஷிவம்பு சாஸ்திர: ஹீலிங் வித் உரினே தெரபி) என்ற ஆங்கில கட்டுரையில் சிறுநீர் எப்படி செயல்படுகிறது, அதன் நன்மைகள், அதை எப்படிப் பயன்படுத்துவது, சிறுநீர் சிகிச்சையின் பின் உள்ள அறிவியல் போன்ற பல பயனுள்ள கருத்துக்களை எழுதியுள்ளார். இக்கட்டுரை ஜூன்-ஜூலை 2002 நெக்செஸ் இதழில் (Nexus Magazine, Vol.9, No.4) வெளியாகி உள்ளது. கீழ்க்கண்ட இணைய தளத்திலும் இக்கட்டுரை உள்ளது: www.nexusmagazine.com. முழுக் கட்டுரையின் பிரதி இக்கட்டுரையின் இறுதியில் இணைக்கப் பட்டுள்ளது.

சிறுநீர் சிகிச்சை எப்படி செயல்படுகிறது? – ஹோமியோபதி மருத்துவத்துடன் ஒரு ஒப்பு நோக்கு

ஒத்ததை ஒத்தது குணமாக்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் ஹோமியோபதி மருத்துவம். எல்லாவற்றிலுமே எதிர்மறைகள் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலே அமைந்துள்ளன. எனவே எது நோயை உருவாக்குகிறதோ, அதிலேயே அதைக் குணப்படுத்தும் ஆற்றலும் அடங்கியுள்ளது. ஹோமியோபதி மருத்துவத்தில் ஒரு பொருள் ஆரோக்கியமான ஒரு மனிதனிடம் என்னென்ன நோய்க்குறிகளை உண்டாக்குகிறது என்பதை பலருக்கும், பல வயதினருக்கும், இரு பாலாருக்கும் கொடுத்து பரிசோதித்து, அதில் பல பேரிடம் காணப்படும் குறிகள், பல பேர் ஏற்பட்டுள்ளதாகக் கூறும் குறிகள் ஆகியவற்றை அப்பொருளின் குணங்களாகக் கொள்கின்றனர். இதுபோன்று பல பொருட்களின் குறிகள் ஹோமியோபதி குணா சிந்தாமணியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இயற்கையாக நோய்வாய்ப்படும் ஒருவரது குறிகள் எந்தப் பொருளின் குறிகளை ஒத்து இருக்கின்றதோ அப்பொருளை நுன்மமாக்கிக் கொடுக்கையில் அந்த நோய்க்குறிகள் மறைந்து, நோயும் மறைகிறது.

உதாரணமாக, கொய்னா மரப்பட்டையின் சாறு மலேரியா போன்ற நோயின் குறிகளை உண்டாக்குகிறது. எனவே கொய்னா மரப்பட்டையின் சாற்றிலிருந்து தயாரிக்கப்பட்டு நுன்மமாகக் கொடுக்கப்படும் மருந்து, மலேரியா நோயைக் குணப்படுத்துகிறது. கொய்னா மரப்பட்ட்டையிளிருந்து தயாரிக்கப்பட்ட மருந்தே முதல் ஹோமியோபதி மருந்து. அதன் பின் இது போல் ஆயிரக்கணக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் குணாதிசயங்கள் மருத்துவ சிந்தாமணியில் (Homeopathic Materia Medica) பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஹோமியோபதி மருத்துவத்தில் டெசிமல், சென்டெசிமல், மில்லெசிமல் என்ற வீரியங்களில் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக பன்னிரண்டாவது டெசிமல் வீரியத்தில் ஒரு மருந்து கொடுப்பதாகக் கொண்டால், அதில் மருந்து ten to the power of minus six என்ற அளவில் இருக்கிறது என்று பொருள். சாதாரணமாக ஹோமியோபதி மருத்துவர்கள் செண்டேசிமல் வீரிய மருந்துகளையே பயன்படுத்துகின்றனர். குறிப்பாக முப்பது, இருநூறு, ஆயிரம் என்ற வீரியங்களில் கொடுக்கிறார்கள். இதன் பொருள் முப்பதாவது வீரியத்தில் மருந்தின் அளவு Hundred to the power of minus Thirty, இருநூறாவது வீரியத்தில் Hundred to the power of minus Two Hundred, ஆயிரமாவது வீரியத்தில் Hundred to the power of Thousand என்ற அளவுகளிலும் மருந்து இருக்கிறது.

Hundred to the Power of Minus Two Hundred என்றால் ஒன்று போட்டு அதனுடன் நானூறு சைபர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பங்கே மருந்து! தலை சுற்றுகிறதா? அவ்வளவு நுன்மமானவை ஹோமியோ மருந்துகள்.

இந்த நுன்மமான மருந்துகள் எப்படி அற்புதமாகச் செயல்படுகின்றன என்பதை பயன்பெற்ற நோயாளிகள் கூறுவர். இந்த நுன்மமான மருந்துகள் (minuscule or microdoses) எப்படிச் செயல்படுகின்றன என்பதை எந்த அறிவியலாரும் ஆழமான அறிவியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தி உலகிற்கு தெளிவு படுத்த முயலவில்லை என்பது வருந்தற்குரியது.

இருப்பினும் சில மேதைகள் கட்டுரைகளாகவும், செய்திகளாகவும் பதிப்பித்துள்ளவற்றிலிருந்து சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.

பிரிட்டிஷ் ஹோமியோபதி இதழில் டாக்டர் பீட்டர் ஃபிஷர் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து – இது அக்டோபர் 1988 ஹோமியோபதிக் ஹெரிடேஜ் இதழில் மறுபதிப்புச் செய்யப்பட்டது:

1988 ஜூன் முப்பதாம் நாள் நேச்சர் இதழில் (Nature, a more-than 100 year old highly-regarded scientific journal from the House of Macmillan) ஹோமியோபதி மருத்துவம் பற்றிய ஒரு முக்கிய அறிவியல் செய்தி

வெளியானது. இதன் ஆசிரியர்கள் பிரஞ்சு நாட்டின் பிரசித்தி பெற்ற INSERM (French National Institute for Scientific Research in Medicine) என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள். பேராசிரியர் ஜாக் பென்வெனிஸ்தே (Prof.Jacque Benveniste) என்ற உயிரியல் விஞ்ஞானியின் தலைமையில் கனடா, இஸ்ரேல், இத்தாலி நாடுகளைச் சார்ந்த பதின்மூன்று விஞ்ஞானிகள் ஒரு மகத்தான கண்டுபிடிப்பை அறிவித்தனர். ஒரு இரசாயன மூலக்கூறு (Molecule) பலமுறை கரைக்கப்பட்டு அந்த மூலக்கூறே இல்லை எனும் நிலையை அடைந்த பின்னரும், அந்தக் கரைசல் அந்த மூலக்கூறின் குணங்களை ‘நினைவில்’ கொள்கிறது; அந்த ‘நினைவுகள்’ அந்தக் கரைசலில் இருந்து செயல்படுகிறது. வேதியலில் மூலக்கூறு பற்றிய அடிப்படைகளைத் தகர்த்தெறிந்த இக்கட்டுரை மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் வேடிக்கை என்னவென்றால் பேராசிரியர் பென்வெனிஸ்தேயும் அவரது கூட்டாளிகளும் தங்களது கண்டுபிடிப்பை தாங்களே நம்பாமல், அவற்றை தவறு என நிரூபிக்க பலமுறை முயன்றும் முடியாமல், தாங்கள் ஆய்ந்தறிந்த அற்புத உண்மையை நேச்சர் இதழில் பிரசுரித்தனர். ஹோமியோபதி மருத்துவத்தின் மேன்மையை நிரூபிக்கும் இந்தக்கட்டுரையை பலரால் ஜீரணிக்க முடியவில்லை.

நேச்சர் இதழ் கூட இந்தக் கட்டுரையைப் பிரசுரித்துவிட்டு, “நம்பமுடியாததை நம்புவது எப்படி?” என்ற தலைப்பில் அதே இதழிலேயே ஒரு தலையங்கமும் எழுதியது. இந்த ஆய்வில் ஏதோ பொய்யோ, பித்தலாட்டமோ, தவறோ இருக்கலாமென எண்ணி, ஆறு புகழ் பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்களில் இதே ஆராய்ச்சி வேறு அறிவியலாரால் மேற்கொள்ளப்பட்டது. அப்போதும் பென்வெனிஸ்தே கண்டுபிடித்த அதே விடைதான் அவர்களுக்கும் கிடைத்தது.

1988 ஜூலை பன்னிரண்டாம் நாள் டைம்ஸ் ஆஃ ப் இந்தியா நாளேட்டில் வெளியான செய்தியிலிருந்து ஒரு பகுதி:

ஹோமியோபதி மருந்துகள் குணப்படுத்தும் ஆற்றலுடையவை என்பதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை என்று பல விஞ்ஞானிகள் கூறிவந்துள்ளனர். ஆனால் தற்போது பேராசிரியர் பென்வெனிஸ்தே மற்றும் அவரது சக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு பொருட்கள் மூலக்கூறின் அளவிற்குக் கீழே சென்றபோதும் தங்களது குணங்களை ‘நினைவில்’ வைக்கின்றன; அதனால் தான் ஹோமியோபதி மருந்துகளில் மூலப்பொருளின் மூலக்கூறே இல்லாமல் போனபோதும், இந்த ‘நினைவு’ நோயை குணப்படுத்துகிறது என்பதை ஹோமியோபதியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

உயிரியல் ஆராய்ச்சியில் இதுவரை ஒரு நிச்சயமான அடிப்படை என்று கருதப்பட்டுவந்த கருத்து என்னவெனில் ஒவ்வொரு உயிரியல் செயல்பாட்டிற்கும் ஒரு மூலக்கூறு காரணமாகிறது என்பது. ஆனால் பெண்வெநிச்தேயின் கண்டுபிடிப்பு, மூலக்கூறு இல்லாதபோதும், மூலக்கூறின் ‘நினைவு’ செயல்படுகிறது என்பதே. ஆவோகாட்ரோவின் விதிப்படி ten to the power of twentythree என்ற அளவிற்கு மேற்பட்டு கரைக்கும்போது, மூலக்கூறு இல்லாமல் போகிறது. ஆனால் இந்த புதிய கண்டுபிடிப்பு ஆவோகட்ரோவின் அளவைத் தாண்டிய பின்னரும் ஒரு மூலக்கூற்றிற்கு உயிரியல் நினைவு இருக்கக்கூடும் என்பதை முதல் முறையாக கூறியது.

இதுபற்றி கருத்துக்கூறிய நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானி, ஜீன் மாரி லான் என்பார். இந்த கண்டுபிடிப்புகள் கலக்கத்தை ஏற்படுத்துவதாகவும், உயிரியலில் ஒரு மூலக்கூறு இல்லாமல், அதன் குணங்கள் எவ்வாறு எடுத்துச் செல்லப்படும் என்பது தெரியவில்லை என்று கூறினார்.

1988 ஜூலை இருபத்து ஐந்தாம் நாள் நியூஸ்வீக் இதழில் வெளிவந்த கட்டுரையிலிருந்து:

ஃ பிரான்ஸ், இத்தாலி, இஸ்ரேல், மற்றும் கனடாவிலிருந்து அதிர்ச்சி அடையச் செய்யும் அறிவியல் கண்டுபிடிப்புகள் வெளியாகி உள்ளன. தெற்கு பாரிஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நோய் எதிர்ப்பாற்றல் ஆராய்ச்சி விஞ்ஞானி பேராசிரியர் ஜாக் பென்வெனிஸ்தே மேற்கொண்ட ஆய்வு இது. சில வெள்ளையணுக்களின் இரசாயனமும், அவற்றின் உள் வடிவமும், ஒரு ஆண்டிபாடியின் தொடர்பால் மாறுவதைக் கண்டார். ஆனால் அவர் நம்பமுடியாதது எப்போதெனில் அந்த ஆன்டிபாடியின் கரைசலிலிருந்து அதன் மூலக்கூறு முற்றிலுமே மறைந்த போதிலும், ஒரு மூலக்கூறு கூட இல்லாத நிலையிலும், வெள்ளையணுக்களில் அந்த மாற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. இது உண்மையெனின் பொருள் பற்றிய அறிவியல் கருத்துக்கள் முற்றிலுமாக மாறுகின்றன. பென்வெனிஸ்தே யின் கருத்து என்னவெனில் ஒரு முறை தான் கொண்டிருந்த மூலக்கூற்றின் நினைவை தண்ணீர் அது மறையும் வரை கரைத்த பின்னும், நினைவில் கொள்கிறது என்பதாகும். இந்த நினைவுப் பதிப்பு (Phantom Imprint) நீரின் வடிவம் மூலக்கூற்றைச் சுற்றியுள்ள மின்காந்தப பகுதியால் மாறிவிடுகிறது என்பதாகும்.

இது நுன்மமான பொருட்கள் உயிரியல் ரீதியில் செயல்படமுடியும் என்ற ஹோமியோபதி மருத்துவக் கருத்தை மெய்ப்பிக்கின்றன.

ஒவ்வொரு நோய்க்கான மருந்தும் அருகில் உள்ள பகுதியிலேயே கிடைக்கிறது என்பது ஹோமியோபதியைக் கண்டுபிடித்த டாக்டர் ஹானிமன்
அவர்களது கூற்று. நோய் குணமடைதல் என்பது விரைவாக, பக்க விளைவுகளையோ, பின் விளைவுகளையோ, வேறு எந்தச் சிரமங்களையோ உண்டாக்காமல் ஆரோக்கிய நிலைக்குத் திரும்புவது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மருந்தைத் தேர்வது நோய்க்குறிகளின் அடிப்படையில் அல்ல; நோயாளரின் தனித்தன்மையை கருத்தில் கொண்டும், வித்தியாசமான, அபூர்வமான, அசாதாரமான குறிகளின் அடிப்படையிலும் ஆம்.

உயிராற்றல் பிறப்புறுப்புப் பகுதியை மையமாகக்கொண்டு இயங்குவதால், கீழை நாட்டு ஞானிகள் அதை மூலாதாரம் என்றனர். மேலும் உயிராற்றல் மூலாதாரத்தை மையமாகக் கொண்டிருந்தாலும், அது உடல் முழுவதும் ஒரு உயிர் மின்காந்த ஆற்றலாக இயங்குகிறது என்று கருதுகின்றனர். அதுவே நம்முடைய நோய் எதிர்ப்பாற்றலுக்கும் அடிப்படை. பரம்பரை பாதிப்புகளாலும், பரம்பரை நோய்களாலும், மரபணுக்களில் உள்ள பாதிப்புகளாலும், தவறான உணவுப் பழக்கங்களாலும், முரண்பாடான வாழ்க்கை முறைகளாலும், மனித உடலும், மனமும் பாதிக்கப்படுகின்றன. இதன் விளைவாகவே நாம் நோய்க்கு ஆட்படுகிறோம். இந்நோய் சுற்றுச்சூழல் போன்ற பல காரணங்களால் வெவேறு நோயாகப் பரிணமிக்கிறது. சிறுநீற்றின் வழியே இந்த நோய் பாதிப்பிற்கான கூறுகள், நுன்மமான அளவில் வெளியேறுவதாலும், அதனால் அந்த சிருநீற்றைப் பருகி நோயிலிருந்து விடுபடுவது என்பது ஹோமியோபதியின் அடிப்படையை ஒத்ததாகும்.

சமீபத்திய கண்டுபிடிப்புக்கள் ஒருவரது குணம், செயல்பாடு, நோய்க்கு ஆட்படும் தன்மை போன்றவற்றிற்கு ஒருவரது DNA பொறுப்பாகிறது என்று. சுருங்கச் சொன்னால் நமது அடிப்படைப் பண்புகள் அனைத்திற்கும் DNA பொறுப்பாகிறது. எனவே ஒருவரது நோய்க்கு ஆட்படும் தன்மை, நோய் பாதிப்பு இவை அனைத்தும் DNA-வில் பதிவாகிறது. சிறுநீரில் இந்த DNA நுண்ம அளவில் வெளிப்படத்தான் செய்யும். ஹோமியோபதித் தத்துவத்தின்படி இந்த சிறுநீரில் உள்ள நுன்மமான DNA அவரது அடிப்படை பாதிப்புகள் அனைத்திற்கும் மருந்தாகிறது.

ஒரு கேள்வி எழலாம். உடலினுள்ளே இருக்கும்போதே ஏன் ரத்தத்திலுள்ள நுண்ம அளவிலான DNA குணப்படுத்துவதில்லை. சிறுநீர் வெளியே வந்த பின்னரே மருத்துவ குணம் பெறுகிறது என்பதுதான் காரணம்.

அடுத்து, ஹோமியோபதியா அல்லது சிறுநீர் சிகிச்சையா என்ற கேள்வி எழலாம். அதற்கு பதில் என்னவெனில் ஹோமியோபதி தத்துவம் மிக எளிமையானது ஆனால் அதைச் செயல்படுத்துவது மிக, மிகக் கடினம். முழுமையான குணம் பெற, முற்றிலும் பரிபூரணப் பொருத்தமுள்ள மருந்து அவசியம். ஆனால் ஹோமியோபதியில் இந்த மிகப் பொருத்தமான அல்லது Perfect Similimum மருந்தைத் தேர்வது மிகக் கடினம். ஹோமியோபதியின் மேதைகள் கூட இந்த மிகப் பொருத்தமான மருந்தைத் தேர்வதற்கு சிரமப் பட்டிருக்கிறார்கள். இதற்கு அவர்களுக்கு பல வருடங்கள் ஆகியிருக்கின்றன. சிறுநீர் சிகிச்சையில் இந்தச் சிரமங்களெல்லாம் இல்லை.

1999 மே 13-16 தேதிகளில் ஜெர்மனியிலுள்ள கேர்ஸ்பீல்டு நகரில் நடை பெற்ற இரண்டாவது அனைத்துலக சிறுநீர் சிகிச்சை மாநாட்டில் சிறுநீர் சிகிச்சை எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றி பல கருத்துக்கள் கூறப்பட்டன. அவற்றில் சில:

1. ஹார்மோன்களின் மறுகிரகிப்பு
2. என்சைம்களின் மறுகிரகிப்பு
3. யூரியாவின் மறுகிரகிப்பு
4. நோய் எதிர்ப்புத்தன்மை அதிகரிக்கிறது
5. கிருமிகளும், வைரசுகளும் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவு
6. உப்பு சிகிச்சை
7. டையூரெடிக் விளைவு (Diuretic Effect)
8. டிரான்ஸ்முடேஷன் விளைவு (Transmutation)
9. சைக்கலாஜிகல் விளைவு (Psychological Effect)

பல்வேறு மருத்துவ முறைகளில் சிறுநீர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்படுத்தப் படுகிறது. அவற்றில் முக்கியமான சில:

1. அல்லோபதி மருத்துவத்தில்
————————————-

(அ) இருதய அறுவை சிகிச்சையின்போது, ரத்தம் உறைவதைத் தடுக்க யூரோகிநேஸ் (Urokinase) என்ற மருந்து ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. மனித சிறுநீரில் பொதுவாகக் காணப்படும் ஒரு என்சைம் இது. மாரடைப்பிற்குப் பின்பும் கூட இரத்தம் உறைந்து கட்டிபட்டதைக் கரைக்க இந்த ஊசி போடப்படுகிறது. அமெரிக்க நாட்டின் சிக்காகோ நகரிலுள்ள எட்ஜ்வாட்டர் மருத்துவமனையில் டாக்டர் மேசல் (Dr.Mezel, Edgewater Hospital, Chicago, USA) என்பார் மாரடைப்பு நோயாளிகள் அனைவருக்கும் இம்மருந்தினை செலுத்தி அவர்களைக் காத்துள்ளார்.

(ஆ) சிறுநீரில் காணப்படும் எரித்ரோபாயிட்டின் என்ற ஹார்மோன் எலும்பு மஜ்ஜையைத் தூண்டி சிவப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதால் இரத்தச் சோகை நோயாளிகள் சிறுநீர் சிகிச்சையால் சிறந்த பலனடைய முடியும்.

(இ) அன்டி-ஆக்சிடென்டுகள் (antioxidants) ஃ ப்ரீ ராடிக்கல்சுகளை கட்டுப்படுத்தி, திசுக்கள் அழிவதையும், சீக்கிரம் முதுமை அடைவதையும் தடுக்கின்றன என்பது தற்போது அனைவரும் நன்கறிந்த ஒன்று. சிருநீரிலுள்ள யூரிக் அமிலம் ஒரு அன்டி-ஆக்சிடெண்டு என்பதால் சிறுநீர் சிகிச்சை மேற்கொள்வோர் இப்பயனையும் அடைகின்றனர். பாரத முன்னாள் பிரதமர் திரு மொரார்ஜி தேசாய் கிட்டத்தட்ட நூறு வயது வரை வாழ்ந்ததற்கு இதுகூட காரணமாக இருக்கலாம். இந்தக் கோணத்திலும் ஆராய்ச்சி செய்வோர் சிந்திக்கலாம்.

(ஈ) இந்தியாவின் அகமதாபாதிலுள்ள டாக்டர் சலேரியா அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு சுய சிறுநீரை ஊசி மூலம் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதற்கு அவர் கூறும் காரணம் அறுவை சிகிச்சையினால் இருதயம் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்பதற்கே.

(உ) டாக்டர் ஆல்பர்ட் செசன்ட் ஜார்ஜி (Dr Albert Sezent Georgyi) என்ற நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானி புற்றுநோயாளிகளுக்கு மீதைல் கிளைஆக்சால் (Methyl Glyoxyl) என்ற வேதிப்பொருளை சிகிச்சையில் பயன்படுத்தி நிறைய வெற்றி கண்டிருக்கிறார். இந்த வேதிப்பொருள் சிறுநீரில் காணப்படுகிறது.

(ஊ) சில ஆராய்ச்சியாளர்கள் சிறுநீர் தடுப்பு மருந்தாக, ஒரு வாக்சின் போல செயல்பட்டு, ஆன்டிபாடிகளை (antibodies) பெருக்க உதவுகிறது. இந்த ஆன்டிபாடிகள் நோய்க்காரணிகளை அழித்து நோயைத் தடுக்கவும், நோயிலிருந்து குணப்படுத்தவும் உதவுகின்றன என்று கருதுகிறார்கள்.

(எ) விஞ்ஞானிகள் பசுவின் சிறுநீர் செல்கள் மருந்துகளை சிறப்பாகக் கிரகிக்க உதவுவதாகக் கண்டறிந்துள்ளனர். இதனால் மருந்தின் அளவைக் குறைத்துவிடலாம்; பின்விளைவுகளைக் குறைக்கலாம். மேலும் பசு மூத்திரம் நோயை உண்டாக்கும் காரணிகளை அழிக்கவும் உதவுவதாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவில் இதற்கான காப்புரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர். இத்தகவல் ‘கெமிஸ்ட்ரி & இண்டஸ்ட்ரி’ என்ற பிரிட்டிஷ் இதழில் வெளியாகியுள்ளது.

(ஏ) ஆண், பெண் மலட்டுத்தன்மைக்குப் பயன்படும் ஒரு ஹார்மோன், HCG, கருவுற்ற பெண்களின் சிறுநீரிலிருந்து பெறப்படுகிறது. சீன மக்கள் குடியரசைச் சேர்ந்த டேக்பூல் பயோ ஃ பார்மா என்ற நிறுவனம் இம்மருந்தைத் தயாரிக்கிறது. குஜராத்திலுள்ள அம்பர்நாத்தில் செயல்படும் பாரத் சீரம்ஸ் & வாக்சைன்ஸ் லிமிடட் என்ற நிறுவனம் இந்த மருந்தை இந்தியாவில் சந்தைப்படுத்துகிறது.

(ஐ) ஆஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் ஒரு விஞ்ஞானிகள் குழு மனித சிறுநீரில் ஆழமாக ஆராய்ச்சி செய்துள்ளனர். அதிகாலையில் (காலை இரண்டு மணி முதல் ஏழு மணி வரை) வெளிப்படும் சிறுநீரில் மெலடோனின் என்ற வேதிப்பொருள் இருப்பதைக் கண்டுள்ளனர். இதுவும் ஒரு ஆன்டி-ஆக்சிடெண்டு. அவர்கள் கண்டறிந்த இன்னொன்று அந்த அதிகாலைச் சிறுநீரைப் பருகுவோரின் மனம் மிகத் தெளிவாக, துல்லியமாகச் செயல்படுகிறது என்பதாகும். ரிஷிகளும், ஞானிகளும் அதிகாலைச் சிறுநீருக்கு ஏன் முக்கியத்துவம் அளித்தனர் என்பதை இது தெளிவாக்குகிறது. இந்த அதிகாலைப் பொழுதை ஆண்மிகத்தினர் பிரம்ம முஹூர்த்தம் என்கின்றனர். ஆன்மிகப் பயிற்சிகளுக்கு இது மிகச் சிறந்த நேரமாகக் கருதப்படுகிறது. அதிகாலைச் சிறுநீரைப் பருகுவதால் ஆன்மிகப் பாதையில் துரித நடைபோட வாய்ப்பு அதிகரிக்கிறது.

2. சித்த மருத்துவத்தில்
—————————-

(அ) சித்த மருத்துவத்தில் மனிதச் சிறுநீரிலிருந்து அமுரி என்றொரு மருந்து தயாரிக்கப்படுகிறது. இது வாழ்நாளை அதிகரிக்க உதவுவதாகக் கருதப்படுகிறது.

(ஆ) சித்த மருத்துவத்தில் முப்பு என்றொரு மருந்து குறிப்பிடப்படுகிறது. சித்தர்கள் பலர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனிதச் சிருநீரைப்பற்றி குறிப்பிட்டுள்ளனர். நோய்களைக் குணப்படுத்துவதுற்கு மட்டுமின்றி, முதுமையையும், மரணத்தையும் தள்ளிப்போட முப்பு உதவுவதாகக் கூறப்படுகிறது.

(இ) மேலும், சித்த மருத்துவ சிந்தாமணியில் பூச்சிக்கடி, சோகை, வாத நோய்கள் போன்ற பலவற்றிற்கு உகந்ததாக தன சிறுநீரைப் பருகுவது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

3. ஆயுர்வேத மருத்துவத்தில்
————————————-

ஆயுர் வேதத்தில் சுய சிறுநீரைப் பருகுவது பல நோய்களுக்கு உகந்ததாக ‘யோக ரத்னாகர்’, ‘சுஸ்ருத சம்ஹிதை’ போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுநீரின் சிறப்புகள்
————————-

1. மிக எளிமையானது
2. மிக சரியான வீரியத்தையும், மிகச் சரியான மருந்தையும் தேர்ந்தெடுக்கும் சிரமமில்லை (ஹோமியோபதியைப்போல்)
3. இயற்கையோடு இயைந்தது.
4. பின் விளைவுகளோ, பக்க விளைவுகளோ, தீய விளைவுகளோ இல்லை.
5. சிரமம் உண்டாக்காத, வேகமான நிவாரணம்
6. இலவசம்; செலவில்லாதது.
7. டாக்டர்கள் தேவையில்லை
8. என்ன நோய் என்று கண்டறிய வேண்டிய அவசியமில்லை.
9. அறுவை சிகிச்சை பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது.
10. நோய் எதிர்ப்பாற்றல் கூடுகிறது.

1. ஹிந்து ஆன்மிக நூல்களிலிருந்து கிட்டும் ஆதரவு
——————————————————————

(அ) ஹிந்து மத நூல்கள் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களை இறைவன் புரிவதாகக் கூறுகின்றன. மனித பிறப்புறுப்பும் இந்த முத்தொழிலைப் புரிகின்றன. படைத்தலாகிய கருத்தரித்தல், குழந்தை பிறத்தல் இவற்றில் அதன் பங்கு அனைவரும் அறிந்ததே. விந்திலும், சிறுநீரிலும் வெளிப்படும் மின்காந்த ஆற்றல் காக்கும் தொழிலைப் புரிகின்றன. நோய் எதிர்ப்பாற்றலுக்கும் விந்திற்கும் நேரடியான தொடர்பிருக்கிறது. விந்து ஆற்றலை வீனாக்காதவர்களின் எதிர்ப்பாற்றல் மிகச் சிறப்பாக இருக்கும். ‘விந்து விட்டான் நொந்து கேட்டான்’ என்பது பழமொழி. எனவே அதிகமாக இதில் ஈடுபடுபவர்கள் தங்களையே அழித்துக்கொள்கிறார்கள். திருமந்திரத்தில் திருமூலர் இதை உறுதி செய்கிறார்.

(ஆ) ‘தாமார் தந்திரா’ என்ற ஹிந்து ஆன்மிக நூலில், சிவபெருமான் பார்வதி தேவியிடம் சிறுநீரின் சிறப்பைப் பற்றிக் கூறுவதாக நிறையப் பாடல்கள் அமைந்துள்ளன. சிறுநீர் சிகிச்சை இதில் ஷிவாம்பு கல்பம் என்று குறிப்பிடப்படுகிறது.

(இ) ஹிந்துக் கோயில்களில் விளங்கும் சிவலிங்கம் ஆண், பெண் பிறப்புறுப்புகளின் மருவடிவமாகக் கருதப்படுகிறது. சிவலிங்கத்தின் அடிப்பாகம் பெண்ணுறுப்பையும், லிங்கம் (மேற்பகுதி) ஆணுறுப்பையும் குறிக்கிறது. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு அபிஷேக நீர் புண்ணிய தீர்த்தமாக, தூய நீராக, நோய் நீக்கும் ஆற்றலுடையதாகக் கருதப்பட்டு அருந்தப்படுகிறது.

(ஈ) மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘யானை தன் துதிக்கையால் நீரைப்பருகுகிறது. இறைவன் எனக்கு இரு கரங்களைத் தந்துள்ளான். இதன் மகத்துவம் அறியாமல் நான் நிறைய துன்பப் பட்டுவிட்டேன். இதன் மகத்துவம் அறிந்ததும் என் துன்பங்கள் அனைத்தும் பறந்து போயின’. என் கருத்து என்னவெனில் இங்கு மாணிக்கவாசகர் மகத்துவம் என்பது சிறுநீரைப் பருக இரு கரங்களை இறைவன் தந்துள்ளான் என்ற உண்மையைத்தான்.

(எ) திருவள்ளுவர் தமது திருக்குறளில் இவ்வாறு கூறுகிறார்:

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”

இதைச் சாதரணமாக ஏற்கனவே உண்ட உணவு செரித்தபின் உண்ணுவோருக்கு நோய் நொடி வராது; எனவே அவர்களுக்கு மருந்தும் தேவையில்லை என்பதாம். எனது கருத்து: ‘மருந்தென வேண்டாவாம்: மருந்து தேவையில்லை. யாக்கைக்கு: உடல் தான் உண்ட உணவை கிரகித்தபின் வெளியிடும் சிறுநீரை. ‘அருந்தியது: குடித்தது. இது திரவத்தை மட்டுமே குறிக்கும். ‘அற்றது: மீதி. ‘போற்றி: இது ஒரு சிறந்த வார்த்தை. போற்றுதல் என்பது மரியாதையுடன் வழிபடுதலாம். பொதுவாக இவ்வார்த்தை இறைவனை வழிபட மட்டுமே குறிப்பிடப்படுகிறது. எனவே, சிறுநீரை மகத்துவத்தைப் புரிந்துகொண்டு அதைச் சரியான முறையில், போற்றி உண்பவர்க்கு நோய், நொடியில்லை. மருந்தும் தேவையில்லை. சுருகச் சொல்லின் திருவள்ளுவர் நம்மை சிறுநீரை போற்றச் சொல்கிறார்.

2. பார்சி இனத்தவரின் சடங்கிலிருந்து
————————————————

நவஜோத் எனப்படும் ஆண் குழந்தையின் முதல் முடிஎடுப்பின் போதும், திருமணச் சடங்கின் போதும் வெள்ளை எருதின் சிறுநீரைப் பருகுவது வழக்கமாயுள்ளது.

3. பைபிளிலிருந்து
————————

ஜே.டபுள்யூ.ஆர்ம்ஸ்ட்ராங் என்பார் சிறுநீர் சிகிச்சையை உலகெங்கும் பரப்பிப் புகழ் பெற்றவர். அவர் கூறுவது: பைபிளில், புனித வேதாகமத்தில், புதிய ஏற்பாட்டிலும், பழைய ஏற்பாட்டிலும் சிறுநீரைப் பருகுவது பரிந்துரைக்கப் படுகிறது. பழைய ஏற்பாட்டில் அது: ‘DRINK THE WATERS OF THY CISTERN’ என்றும், புதிய ஏற்பாட்டில் (மத்தேயு 6-17) அது: ‘WHEN THOU FASTEST, ANOINT THY HEAD AND WASH YOUR FACE’ என்றும் மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

4. ஜைன ஆன்மிக நூல்களிலிருந்து
————————————–

வியவஹார்சூத்ரா என்ற ஜைன ஆன்மிக நூலில் ஆச்சாரியர் பத்ரபாஹு ஒவ்வொருவரும் விரதம் மேற்கொள்ளும்போதும், சடங்குகளின் போதும் தமது சிறுநீரைப் பருகவேண்டும் என்று 41 மற்றும் 42-வது சுலோகங்களில் கூறியுள்ளார்.

5. புத்த ஆன்மிக நூலிலிருந்து
————————————

திபெத்திய ஞானி மைலாரேப்பா கூறியுள்ளது: திபெத்திய புத்த முனிவர்களும், லாமாக்களும் தம் சிறுநீரைப் பருகுவதால் கடுமையான தவங்களையும், விரதங்களையும் மேற்கொண்டு, நீண்ட நாள் வாழ முடிகிறது (THE Hundred Thousand Songs OF Milarepa, Boulder AND London, 1977).

6. ஆங்கில சிகிச்சைக் குறிப்பு நூலிலிருந்து
—————————————————–

1695-ஆம் ஆண்டு வெளியான ‘Salmon’s English Physician’ என்ற மருத்துவ நூலில் சிறுநீரின் நோய் தடுப்பாற்றல் பற்றியும், குணப்படுத்தும் ஆற்றல் பற்றியும் நிறைய தகவல்கள் தரப்பட்டுள்ளன.

7. பதினெட்டாம் நூற்றாண்டு பல் மருத்துவக் குறிப்புகளிலிருந்து
————————————————–

பதினெட்டாம் நூற்றாண்டில் பல பல் மருத்துவர்கள் பல பற்கோளாறுகளுக்கு சிறுநீரால் பற்களைக் கழுவுவதையும், சிறுநீரால் வாய் கொப்பளிப்பதையும் பரிந்துரை செய்தனர்.

8. ஜிப்சி நாடோடி இனத்தவரும், மாலுமிகளும்
———————————————————-

பல நூற்றாண்டுகளாக ஜிப்சி நாடோடி இனத்தவரும், மாலுமிகளும் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், இளமையைக் காக்கவும், வாழ்நாளை நீட்டிக்கவும், காயங்களை விரைவில் ஆதரவும் சிறுநீரைப் பயன்படுத்தினர். பயணத்தின் ஏற்படும் பல பேராபத்துக்களை அவர்கள் சிறுநீர் சிகிச்சை மூலம் எதிர்கொண்டுள்ளனர்.

9. தமிழ்நாட்டின் பாரம்பரிய பழக்க வழக்கங்களும், நாடோடிக் கதைகளும்
————————————–

(அ) இன்றைக்கும், தமிழ்நாட்டின், கிராமப்புறங்களில், குழந்தைகளை குளிப்பட்டியபின், அவர்களது பிறப்புறுப்பிலிருந்து வழியும் நீரிலிருந்து சில சொத்துக்களை குழந்தையின் வாயில் தருவது வழக்கமாயுள்ளது.

(ஆ) இன்றைக்கும், தமிழ்நாட்டில், சரியாகப் படிக்காத மற்றும் நன்னடத்தையில்லாத குழந்தைகளை நன்றாகப் படிக்கும் நல்ல குழந்தைகளுடன் ஒப்பிட்டு, ‘அவனது மூத்திரத்தைக் குடி. அப்படியாவது புத்தி வருகிறதா பார்க்கலாம்’ என்று பெற்றோர் கடிந்துகொள்வது வழக்கமாயுள்ளது.

(இ) இன்றைக்கும், தமிழ்நாட்டில், கிராமப்புறங்களில், சொறி, படை போன்ற சரும நோய்களுக்கு சாம்பலுடன் சிறுநீரைக் கலந்து பூசிக்கொள்வது வழக்கமாய் உள்ளது.

(ஈ) கடுமையான, குணப்படுத்த முடியாத சரும நோய்களுக்கு குதிரை அல்லது கழுதை மூத்திரத்தைப் பரிந்துரைக்கும் வழக்கம் உள்ளது. தேள் கொட்டியதற்கும், தேனீ கொட்டியதற்கும், பாம்புக்கடி, பூச்சிக்கடி போன்றவற்றிற்கும் சிறுநீரை பூசிக்கொள்ளும் வழக்கம் உள்ளது.

(எ) யாராவது வீட்டில் இறந்த பின்னரும், வீட்டில் துர்ச்செயல்கள் நடந்த பின்னும் பசுவின் மூத்திரத்தைக் கொண்டு புனிதப் படுத்தும் வழக்கம் உள்ளது. ‘புண்ய வாசனம்’ என்ற இச்சடங்குகளில் பசுவின் மூத்திரம் வீடு முழுவதும் தெளிக்கப்படுகிறது.

(ஏ) ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்று தமிழில் ஒரு வழக்கு உண்டு. இதன் பொருள் சிறுநீர் நம் கைக்கு எட்டும்படி இருந்தும் நாம் அதைப் பயன்படுத்துவதில்லை என்ற உட்பொருளிலேயே வழங்குகிறது.

(உ) வேதத்தில் ‘வியாதியும் ஒன்றே, மருந்தும் ஒன்றே’ (‘Roha advaita, aushadha advaita’) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள், மனிதனின் நோய்க்கு ஆட்படும்தன்மையைப் பொருத்தும், அவனுடைய உடலமைப்பில் பலஹீனமான உறுப்பைப் பொருத்தும் நோய் வடிவெடுக்கிறது. உண்மையில் நோய் என்பது ஒன்றே. அதற்கான மருந்தும் ஒன்றே. அதாவது சிறுநீரே.

(ஊ) ஜெர்மானிய தத்துவ ஞானி ஹெகலின் ‘Dialectics OF Nature’ என்ற முரண்பாட்டுத் தத்துவப்படி, ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல எதிர்மறைகள் சேர்ந்தே இருக்கின்றன. அதாவது ஒரு மனிதன் நோய் வாய்ப்படும்போது அவனுக்கேற்ற மருந்தும் அவனிடமே உள்ளது என்பதாகும். வெளியிலிருந்து அவனுக்கு எந்த மருந்தும் தேவையில்லை.

(ஐ) அறிவியல் தத்துவத்தின் அடிப்படையின்றி சக்திவாய்ந்த மருந்துகளை உட்கொள்ளுவதால் நோய்க் குறிகள் மறைகின்றதே தவிர, நோய் மறைவதில்லை. மாறாக, நோய் எதிர்ப்பாற்றல் நலிவுறுகின்றது. அவன் மேலும் பல நோய்களுக்கு ஆளாகிறான்.

(ஒ) ‘இருக்கும் இடத்தைவிட்டு, இல்லாத இடம்தேடி, எங்கெங்கோ அலைகின்றார் ஞாத்தங்கமே, அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே’ என்று தமிழில் ஒரு பாடல் உண்டு. அதன் உட்பொருள்: அனைவருக்கும் தன்னைக் குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் அவர்களுக்குள்ளேயே இருக்கிறது. இதையறியாமல், இங்குமங்கும் வீணே அலைந்து திரிகின்றார்கள்.

(ஓ) தமிழில் ‘கைக்கும் வாய்க்கும் எட்டுது’ என்றொரு வழக்கு உண்டு. மேலோட்டமாகப் பார்த்தல் வருவாய்க்கும், சிலவிற்கும் சரியாக இருக்கிறது என்ற பொருள் வரும். ஆனால் அதன் உட்பொருள், கைக்கெட்டும் சிறுநீரைப் பருகி, நான் ஆரோக்கிய வாழ்க்கை வாழ்கிறேன் என்பதாகும்.

(ஔ) ‘கையால் ஆகாதவன்’ என்று கூற்றும் வழக்கம் உண்டு. அதன் பொருள், தன் கைகளைப் பயன்படுத்தத் தெரியாதவன் என்பதாகும். உட்பொருளோ, தன் சிறுநீரைப் பருகி பயன் பெறத் தெரியாதவன் என்பதாகும்.

(அ-2) ‘கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்தான்’ என்பார்கள். இதன் உட்பொருள்: ஒவ்வொருவருக்கும் தன்னைக் காத்துக் கொள்ள இயற்கை சிறுநீர் சிகிச்சை என்ற வழியைக் காட்டியுள்ளது. ஆனால் அதைப் புரிந்துகொள்ளாமல் வீணே அலைகிறான்.

(ஆ-2) மருத்துவர் இல்லாதபோது, வீட்டிலேயே மருந்தைத் தயார் செய்து கொள்ளும் வழக்கம் உள்ளது. இம்மருந்திற்கு ‘கை மருந்து’ என்று பெயர். கை மருந்து என்ற சொற்றொடர் கையினால் சிறுநீரைப் பருகி குணம் பெறுதல் என்ற வழக்கில் இருந்து வந்திருக்க வேண்டும்.

(இ-2) சமஸ்கிருதத்தில் சிறுநீருக்கு, மூத்திரம் என்று பெயர். தமிழிலும் இவ்வார்த்தை வழக்கில் உள்ளது. இது மூ + ஸ்திரம் என்ற இரு வார்த்தைகளிலிருந்து வந்தது. மூ என்றால் உயிராற்றல்; ஸ்திரம் என்றால் நிலையை இருப்பது. மூத்திரம் உயிராற்றலை நிலைபெறச் செய்வதால் சிறுநீருக்கு அப்பெயர் வந்தது.

(ஈ-2) ‘மூப்பு, பிணி, சாக்காடு’ என்ற சொற்றொடர் தமிழில் சேர்ந்தே வழங்குகிறது. மூப்பு என்றால் முதுமை. பிணி என்றால் தீராத நோய். சாக்காடு என்றால் அற்பாயுளில் மடிதல் என்பது. இதை மூன்றையும் குணமாக்கும் ஆற்றல் முப்பு என்ற சித்த மருந்திற்கு உள்ளது. ஆனால் முப்பு என்றால் என்னவென்பது இன்றைய சித்த மருத்துவர்களுக்குத் தெரிவதில்லை. அது சிறுநீர்தான்.

(உ-1) மிகினும் குறையினும் நோய் செய்யும் என்பார் திருவள்ளுவர். கூடினாலும், குறைந்தாலும் நோய் வரும். எனவே இரண்டிற்கும் இடைப்பட்ட நடுநிலையே நல்லது. உடலின் நடுப் பகுதியில் உள்ள பிறப்புறுப்பிலிருந்து சிறுநீர் வருவதை இங்கே மனதில் கொள்ளலாம்.

(ஊ-2) ஆங்கில ‘மெடிசின்’ என்ற வார்த்தை ‘மீடியம்’ என்ற வார்த்தையிலிருந்து வந்தது.

(எ-2) பொருளிற்கு மூன்று நிலைகள்: திட, திரவ, வாயு நிலைகளாம் அவை. மனிதர்களுக்கு உடலின் நடுப்பகுதியிலிருந்து கிடைக்கும் திரவம் சிறுநீர்.

(ஏ-௨) மருந்து என்ற தமிழ் வார்த்தை, மறு + உந்து என்ற இரண்டு வார்த்தைகளின் கூட்டில் வருவது. மறு உந்து என்றால் இன்னொரு ஆற்றல். உடலில் இயங்கும் ஆற்றல் பழுது படும்போது, அதை இன்னொரு ஆற்றல் கொண்டு சரிசெய்வது என்று கொள்ளலாம். உயிராற்றல் பிறப்புறுப்பின் வழியே வெளிப்படுத்தும் இன்னொரு ஆற்றல்தான் அந்த ஆற்றல்.

(ஐ-2) கைலாயம் என்பது தீயவற்றை அழித்துக் காக்கும் சிவபெருமான் உறையும் இடம். கை லாயம் என்ற வார்த்தைகளுக்கு கைகள் இயல்பாக உறையும் இடம் என்றும் பொருள் கொள்ளலாம். அந்த இடம் பிறப்புறுப்புத்தான்.

(ஒ-௨) சான்றோர்களின் ஆதரவு :

கிட்டத்தட்ட நூறாண்டுகள் வாழ்ந்த முன்னாள் பிரதமர் சிறுநீர் சிகிச்சையைப் பின்பற்றியவர், அதை முழுமையாக ஆதரித்தவர்.

குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் ஜீவராஜ் மேத்தா சிறுநீர் சிகிச்சையை முற்றிலுமாக ஆதரித்தவர்.

(ஓ-௨) வேறு சில சான்றுகள்:

பல ஆண்டுகளுக்கு முன் புனேயில் பூகம்பம் ஏற்பட்டபோது பத்து நாட்களாக இடிபாடுகளில் சிக்கி மீள முடியாமல் இருந்தனர். காற்றையும், சிறுநீரையும் மட்டுமே பருகி அவர்கள் உயிர் வாழ்ந்தனர் என்பது செய்தித்தாள்களில் வெளியான் உண்மை. அது மட்டுமல்ல, மீட்கப்பட்ட போது அவர்கள் ஆரோக்கியமாக இருந்தனர்.

சமீபத்தில் தைவானில் நடந்த பூகம்பத்திலும் இதுபோன்று ஒருவர் காற்றையும், சிறுநீரையும் மட்டுமே பருகி மீட்கப்படும் வரை ஐந்து நாட்கள் உயிரோடு இருந்தார்.

கடலில் நிராதரவாகச் சிக்கிக் கொள்ளும் மீனவர்கள் உண்ணவோ, பருகவோ ஏதுமில்லாதபோது சிறுநீரை மட்டுமே பருகி உயிர் வாழ்ந்திருக்கின்றனர். இது உலகின் பல பகுதிகளில் நிகழ்ந்திருக்கிறது.

செய்தித்தாளில் வெளியான செய்தி இது. சில ஆண்டுகளுக்கு முன் ஜப்பானிய விமான நிலையத்தில் தைவான் பயணி ஒருவர் சந்தேகத்தின் பெயரில் நிறுத்தி வைக்கப்பட்டார். அவரது பாச்போர்ட்டின்படி அவரது வயது அறுபத்து ஐந்து. ஆனால் பார்ப்பதற்கு அவர் முப்பத்து ஐந்து போல் இருந்தார். அதுதான் பிரச்சினை. இறுதியில் அந்த சந்தேகம் தவறு, அவர் சரியான மனிதர்ஹான் என்று தெளிவானது. அவரது இளமையின் ரஹசியம் பற்றிக் கேட்கப்பட்டபோது, அவர் கூறியது சிறுநீர் சிகிச்சைதான்.[:]

You may also like...

3 Responses

  1. apancicky says:

    kamagra for sale in us

  2. apancicky says:

    kamagra 100 without prescription

  3. apancicky says:

    accutane 30 mg sales

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com