இசை ஞானமும், சேவண்ட் குறைபாடும்

Advertisements

[:en]

பெரும் விபத்து ஒன்று நடந்தால் கூடுதலாக ஒருவரின் வாழ்க்கையே எதிர்மறையாகிவிடும் என்பது உண்மை தானே? ஆனால், Derek Amato என்பவருக்கு நடந்த விபத்தினால் அவரின் வாழ்க்கையில் ஒரு பெரும் அதிசயமே நடந்துவிட்டது. அது என்ன அதிசயம் என்று தெரியுமா? நீச்சல் குளத்தில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்த இவர், தடுமாறிக் கீழே விழுந்து அவரின் தலையில் பலமாக அடிபட்டது. உடனடியாக மருத்துவ மனையில் சிகிச்சை செய்யப்பட்டது. இதில் என்ன ஆச்சரியம் தெரியுமா? இவரின் மூளையில், நாட்கள் போகப் போக பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன. அது என்ன மாற்றம் என்றால், அவரது மூளையில் காணப்படும் நரம்பணுக்கள் அதாவது Neurons புதிதாகச் சீரமைக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட நம்ப முடியாத விளைவு என்ன தெரியுமா? இந்த விபத்து நடைபெறும் வரை ஒரு துளி இசை ஞானமே இல்லாத Derek Amato, ஒரு நொடியிலே பியானோவில் ஒரு இசை மேதை ஆகிவிட்டார்.

இவ்வாறு விபத்தால் மட்டும் இல்லை, வேறு விதமாகவும் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு அதன் விளைவாக ஒரு விடயத்தில் அதிசயமான திறன் ஏற்படும் நிலையை சேவண்ட் குறைபாடு (savant syndrome) என்று அழைப்பார்கள். இந்தக் குறைபாடு உலகில் ஏறத்தாழ 100 பேரில் தான் காணப்படுகிறது. இசைத் திறன் தவிர்த்து வேறு சேவண்ட் குறைபாடு உள்ளவர்கள் கணிதத்தில், ஞாபக சக்தியில், காட்சிக் கலையில் அல்லது பல விதமான வேற்று மொழி பேசுவதில் திறன் உடையவர்களாக இருப்பார்கள். உதாரணத்திற்கு Orlando Serrell என்பவர் இன்றுவரை தனது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற ஒவ்வொரு சிறிய சம்பவத்தையும் நினைவில் வைத்திருக்கிறார். Kim Peek என்பவர் தான் படித்த 12.000 புத்தகங்களில் உள்ள அனைத்துச் சொற்களையும் மற்றும் வாக்கியங்களையும் மனப் பாடம் செய்து வைத்துள்ளார். Richard Wawro என்பவர் எதைப் பார்த்தாலும் அதை உடனடியாக ஒரு சிறிய பிழை கூட விடாமல் வரையக் கூடியவர் ஆவார்.

ஆனால், என்ன தான் இவர்கள் ஒரு விஷயத்தில் உலகில் வாழும் அனைத்து மக்களையும் விடத் திறமைசாலியாக இருந்தாலும், அவர்களுக்கு ஏனைய விடயங்களில் ஒரு குறை இருக்கின்றது. மூளையில் ஏற்பட்ட பாதிப்பினால் இவர்களுள் பெரும்பாலானவர்கள் மனவளர்ச்சிக் குறை உள்ளவர்களாகத் தான் இருப்பார்கள். எனவே, இது கவலைக்கிடமான ஒரு விஷயம் தான்.

நன்றி Dr. Niroshan Thillainathan[:de] 

நன்றி Dr. Niroshan Thillainathan[:]

You may also like...

Leave a Reply