[:en]மாட்டிறைச்சி — ஆபாய அரசியல் — ஆர்.கே.[:]

Advertisements

[:en]

மாடு புனிதமானது. சரி. மாட்டை வளர்த்து பராமரிக்கும் மனிதன்?…. மாடா? மனிதனா எது முக்கியம் என்ற விவாதம் இன்று நாடு முழுமைக்குமாக மாறி நிற்கிறது.

இதில் என்ன அரசியல்?  இந்தியா இந்துக்களின் நாடு என்று ஆளும் பா.ஜ.க நம்புகிறது. ஒற்றை தேசம். ஒற்றை மொழி, ஒற்றை மதம் எ ன்பதை நோக்கிய பயணத்தில் மாடு அந்த லட்சியங்களை அடைய ஒரு வழியாக இருக்கிறது. எதனால்?

70 சதவீதம் இந்துக்கள் வாழும் நாடு இந்தியா. இந்துக்கள் புனிதமாக கருதும் மாட்டை நாம் பாதுகாக்கிறோம் என்றால் நம்மை பாதுகாப்பவர்களும் இவர்களை என்ற எண்ணம் மக்களின் அடி ஆழத்தில் இருக்கும் என்று பாரதிய ஜனதா நம்புகிறது. நம்பட்டும் அது அவர்கள் உரிமை. ஆனால் 70 சதவீத இந்துக்களும் பாஜக நம்புவதைத்தான் நம்புகிறார்கள் என்று அக்கட்சி நம்புவதுதான் வேடிக்கை.

இந்துக்கள் பசுக்களின் மேல் உள்ள மரியாதையை தங்கள் வாக்கு வங்கியாக மாற்றலாம் என்ற பாஜக அரசியல் கணக்கு எப்படி சரியாகும் என்பது ஒரு கேள்வியாக உள்ளது. இந்துக்கள் பசுக்களை மதிக்கிறார்கள். வணங்குகிறார். போற்றுகிறார்கள் அதில் மாற்று கருத்து இல்லை. அதற்காக பசுவை பாதுகாக்க அதை துன்புறுத்தும் மனிதனை கொல்ல துணியும் அளவுக்கு இந்துக்கள் மாறவில்லை. அதை ஆதரிக்கப் போவதும் இல்லை. இதே பசு பாதுகாப்புப் சட்டம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும் இருந்தது. ஆனால் இப்போது நாட்டில் நடக்கும் பசுவுக்கான வன்முறை, பலிகள் ஒரு போதும் நடக்கவில்லை. ஆனால் பாஜக ஆட்சியில் பிரதமர் பசு வன்முறையை கண்டித்து பேசி முடிப்பதற்குள் ஒரு பசு பாதுகாப்புக்காக வன்முறை நாட்டில் அரங்கேறி முடிகிறது. இது எதைக் காட்டுகிறது. பாஜக பிரதமர் சொல்வதை அதன் கட்சிக்காரர்கள் கேட்பதில்லையா? இல்லை நான் தொட்டிலை ஆட்டுகிறேன். நீ பிள்ளையை கிள்ளி விடு என்பதா?

கடுமையான நடவடிக்கைகள் இருந்தால் இத்தகைய போக்கு நாட்டில் நடைபெற போவதில்லை. கால்நடைகள் விற்பனை ஒழுங்கு என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட சட்டத்தால் பொது ஒழுங்கு கெட்டுப் போகும் நிலையை பாஜக ஆதரிக்கிறதா?

பசுவை பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஏன் ஒவ்வொருவரும் அதை பாதுகாக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் நீங்கள் எடுக்கும் வழிமுறை 70 சதவீத இந்துக்களே முகம் சுளிக்கும் அளவுக்கு இருக்கிறது. இதனால் நீங்கள் சாதிக்கப்போவதை காட்டில், இழக்கப்போவதுதான் அதிகமாக இருக்க போகிறது.

இதுவரை பசு பாதுகாப்பு என்ற பெயரில் ஏற்பட்ட வன்முறையில் 20 மனித உயிர்கள் பலி கொள்ளப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக சிறுபான்மை சமூகத்தினர். இது இவர்கள்  மனதிலும், பொது அமைதியை விரும்பும் இந்துக்கள் மனதிலும் ஆளும் பாஜக மீது அதிருப்தியைத்தான் ஏற்படுத்தி இருக்கிறது. வளர்சி என்ற ஒற்றை இலக்கோடு ஆட்சியை பிடித்த பிரதமர் நரேந்திர மோடி, பசுவால் ஆட்சியை இழக்க போகிறாரா? என்ற கேள்வி எழுகிறது.

காலம் காலமாக அன்பையும், அஹிம்சையையும் போதித்தவர்கள் இந்து மத வழி வந்த பெரியோர்கள், சான்றோர்கள். அதன் தாக்கம் ஆழமானது என்பதை ஆளும் பாஜக புரிந்து கொள்ள வேண்டும். ஒட்டு அரசியலை மையமாக வைத்து நடத்தப்படும் இந்திய அரசியலில் மக்கள் வாக்கால் தண்டிக்கும் நிலைக்கு பாஜக தள்ளப்படும் நிலை ஏற்படும். ஏன் என்றால் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் பாரத தேசம் உலகுக்கு உணர்திய மகத்தான செய்தி. இதை மாற்ற எந்த சக்தியாலும் இயலாது. இதை மாற்ற நினைத்தால் அதன் எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டிய வரும். ஆட்சியை இழக்கும் ஆபாயத்தைத்தான் சந்திக்க வேண்டி வரும். பாஜக இதே சற்று சிந்தித்து பசு பாதுகாவலர்களை  அடக்கி வைப்பது நல்லது.

 [:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com