[:en]விதி மீறும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை [:]

Advertisements

[:en]

மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் “மதுரையில் விதிமுறைகளை மீறி பல ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இதனால் விபத்துகள் அதிகப்படியாக ஏற்படுகிறது . எனவே விதிமீறல்களில் ஈடுபடும்ஆட்டோ ஓட்டுநர்கள்  மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வாதங்களைக் கேட்ட பின், விதிமீறலில் ஈடுபடும் ஆட்டோக்கள் மீது உரிமம் ரத்து செய்தல் உள்ளிட்ட பல கடும் நடவடிக்கைகளை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 2017 ஜூன் மாதம் வரை விதிமீறலில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யவும் மண்டல போக்குவரத்து அலுவலர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

[:]

You may also like...

Leave a Reply