[:en]சுவாமி விவேகானந்தரின் பேரின்பத்திற்கு வழி [:]

Advertisements

[:en] 

 

சுவாமி விவேகானந்தரின் பேரின்பத்திற்கு வழி சொற்பொழிவின் முக்கிய
கருத்துக்கள்

இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று இன்பநுகர்ச்சி,மற்றொன்று பேரின்ப அனுபூதி.
இவை இரண்டும் மக்களை கவர்கிறது. பேரின்ப வழியை தேர்ந்தெடுப்பவன்
ஞானியாகிறான்

ஆசிரியர் தெளிந்த ஞானம் இல்லாதவராக இருந்தால் அவர் நூறுமுறை
உபதேசித்தாலும் சீடனால் ஆன்மாவை அறியமுடியாது

யாரைக்காண மனிதன் பலவகைத் துறவுகளை மேற்கொள்கிறானோ,அவரது
பெயரை சொல்கிறேன்.அதுதான் ஓம். அழிவில்லாத இந்த ஓம்தான் பிரம்மம்

அந்த ஆன்மா பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை.உடல் அழிந்தாலும்
ஆன்மா அழிவதில்லை

சிறியதில் சிறியதாகவும், பெரியதில் பெரியதாகவும், எல்லா உயிர்களுக்கும்
இறைவனாக விளங்கும் அவர், எல்லா உயிர்களின் இதயக்குகையில்
உறைகிறார். பாவம் இல்லாதவன் அவரை காண்கிறான்

வேதங்களை ஓதுவதாலோ கூர்ந்த அறிவாலோ ஆன்மாவை அடையமுடியாது.
ஆன்மா யாரை தேடுகிறதோ அவனே அதை அடைகிறான்[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com