மக்கள் நலன் கருதி அறிவியல் பின்னணியாக கொண்டு நமது முன்னோர்கள் செய்த காரியங்கள் எல்லாம் இன்று, குருட்டுத்தனமாக பின்பற்றப்பட்டு வருகிறது

Advertisements

மக்கள் நலன் கருதி அறிவியல் பின்னணியாக கொண்டு நமது முன்னோர்கள் செய்த காரியங்கள் எல்லாம் இன்று, குருட்டுத்தனமாக பின்பற்றப்பட்டு வருகிறது. கோவில்களில் இருந்து, கும்பாபிஷேகம் வரை அனைத்திலும் ஏதோ ஓர் உள்நோக்கத்துடன் தான் நமது முன்னோர்கள் செய்து வைத்திருக்கிறார்கள். ஊர் நடுவில் இருக்கும் கோவிலின் கலசங்கள் இடி தாங்கியாக பலனளித்து வந்திருக்கிறது. கலசமும் அதனுள் இருக்கும் தானியங்களும் இந்த நலனை அளித்து வந்துள்ளன. இவற்றின் சக்தி 10-12 ஆண்டுகளில் குறைந்துவிடும். அதனால் தான் இந்த இடைப்பட்ட காலம் முடிந்த பிறகு கும்பாபிஷேகம் என்ற பெயரில் அவற்றை மாற்றி வந்துள்ளனர். அதே போல தான் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதும், ஆற்றில் நீர் தங்க வேண்டும் என்றும், நிலத்தடி நீர் ஆதாரம் பெருக வேண்டும் என்பதற்குகாக செய்யும் செயல் தான் இது…. ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணலை கரைத்துக் கொண்டு போய் விடும். அதனால் அவ்விடத்தில் நீா் நிலத்தல் இறங்காமல் ஓடிக் கடலை சென்றைந்து விடும். அதனால் தான் குறிப்பிட்டு ஆடி மாதம் முடிந்து அதற்கு அடித்த மாதமான ஆவணி மாத சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வந்துள்ளனர். களிமண் உள்ள இடத்தில் நீா் கீழே பூமியுள் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர் அதிகரிக்கும். அதனால் தான் விநாயகர் சதுார்த்தியின் போது விநாயகர் சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைத்து வந்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். ஆனால் ஏன் 3 அல்லது 5 நாட்கள் கழித்து ஆற்றில் கரைக்க வேண்டும் ? ஈரமானக் களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு அடித்து செல்லப்படும். சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்து தங்கிவிடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீா் பிரச்சனையைத் தீர்க்கும். இதனால் தான் நமது முன்னோர்கள் விநாயகர் சிலைகளை ஆற்றில் மட்டும் கரைத்து வந்துள்ளார். ஆனால் இன்று ஏன் எதற்கு என்று தெரியாமல் கடலில் வீணாய் கரைத்து வருகின்றனர். மற்றும் இப்போது சாயம், வண்ணங்கள் சேர்த்து உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதால் நீர் தான் மாசுப்படுகிறது. மக்களின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் காரியம், இன்று அந்த மக்களுக்கே தீங்காக அமைகிறது என்பது வருத்தத்திற்குரியது. நீர் நிலைகளை மாசுபடுத்தாத களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்துமாறு நம்ம கடலூர் இயக்கத்தின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com