[:en] செல்லாத ரூ.500, ரூ.1,000- நோட்டு 99% வங்கிக்கு வந்துவிட்டது[:]

Advertisements

[:en]

புதுடெல்லி: செல்லாது என அறிவிக்கப்பட்டதில் ரூ.15.28 லட்சம் கோடி நோட்டு வங்கிக்கு வந்து விட்டன. அதாவது, 99 சதவீத நோட்டு டெபாசிட் செய்யப்பட்டு விட்டது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்க பழைய 500 மற்றும் 1,000 நோட்டு செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ள 50 நாள் அவகாசம் தரப்பட்டது. இதுபோல், வங்கிகளில் ரொக்கமாக 4,500 வரை மாற்றிக்கொள்ளவும் வசதி செய்யப்பட்டது. ஆனால், முறைகேடு புகார்களை தொடர்ந்து இது நிறுத்தப்பட்டது. இதுதவிர, பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட காலக்கட்டத்தில் வெளிநாடு சென்றிருந்த இந்தியர்கள் மார்ச் வரையிலும், வெளிநாடு வாழ் இந்தியர்கள்  ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ள ஜூன்  வரையிலும் அவகாசம் தரப்பட்டது. வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட விவரங்களை ரிசர்வ் வங்கி கணக்கிட்டு வந்தது.  இந்நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட ஆண்டறிக்கையில் செல்லாத நோட்டு டெபாசிட் விவரங்களை குறிப்பிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 15.44 லட்சம் கோடி மதிப்பிலான 500, 1,000 நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டன. இதில் ஜூன் 30 வரை 15.28 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டது.  632.6 கோடி எண்ணிக்கையிலான 1,000 நோட்டு புழக்கத்தில் இருந்தது. இதில்8,900 கோடி மதிப்பிலான 8.9 கோடி 1,000 நோட்டு வங்கிக்கு வரவில்லை. மற்றவை டெபாசிட் செய்யப்பட்டு விட்டன. அதாவது 1.4% 1,000 நோட்டுதான் வங்கிக்கு வரவில்லை. கடந்த மார்ச் 31ம் தேதிப்படி புதிய மற்றும் பழைய 500 நோட்டு 588.2 எண்ணிக்கையில் புழக்கத்தில் இருந்தன. கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதிப்படி 1,570.7 கோடி 500 நோட்டு புழக்கத்தில் இருந்துள்ளன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அச்சிடும் செலவு
பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டவற்றுக்கு பதிலாக புதிய 500, 2,000 நோட்டை ரிசர்வ் வங்கி அச்சிட்டது. இதை தொடர்ந்து ரூபாய் நோட்டு அச்சிடும் செலவு கடந்த ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. 2016-17ல் ரூபாய் நோட்டு அச்சிட 7,965 கோடி செலவாகியுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் இந்த செலவு 3,421 கோடியாக இருந்தது என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

கள்ள நோட்டு
கடந்த நிதியாண்டில் 7,62,072 எண்ணிக்கையிலான கள்ள நோட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. இது இதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 20.4 சதவீதம் அதிகம். 2015-16ல் 6.32 லட்சம் கள்ள நோட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருந்தன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கருப்பு பணத்தை ஒழிக்கும் அதிரடி நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட செல்லாத நோட்டு அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கருப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு பெரும் சிக்கலை உருவாக்கியது. இதற்கு ஏற்ப வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கும் ஏராளமான கெடுபிடிகள் கொண்டுவரப்பட்டன. இவ்வளவு இருந்தும் 99 சதவீத பணம் வங்கிக்கு வந்தது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக வங்கித்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் அவற்றை வங்கியில் டெபாசிட் செய்ய முடியாமல் அவற்றை அழி்த்து விடுவார்கள் என மத்திய அரசு எதிர்பார்த்திருந்தது. ஆனால் ஏறக்குறைய முழு பணமும் வங்கிக்கு வந்தது இத்திட்டம் தோல்வி அடைந்ததாகவே கருத இடமளிக்கிறது என அவர்கள் கூறினர்.

[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com