[:en]மெரீனாவில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தால் சட்ட நடவடிக்கை[:]

Advertisements

[:en]

“சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் ஆரம்பம்’ என முகநூல், கட்செவி அஞ்சல் போன்ற சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
சென்னை பெருநகரில் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் போன்றவை காவல் சட்ட விதியின்படி காவல்துறையினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகிறது. இதன்படி குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கூட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்த பல்வேறு அமைப்பினருக்கு காவல்துறையால் அனுமதி அளித்து வருகிறது.
இந்த நிலையில் முகநூல், “வாட்ஸ்-ஆப்’ போன்ற சமூக வலைதளங்களில் “நீட் தேர்வு தடை செய்வது தொடர்பாக, சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் ஆரம்பம்’ என வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மேலும், மெரீனா கடற்கரையில் விதிமுறையை மீறி குழுவாகவோ அல்லது கூட்டங்கள் நடத்தவோ முற்படுவது சட்டவிரோதமாகும்.
எனவே போராட்டம் நடைபெறவுள்ளது என்று அழைப்பு விடுப்பது போன்ற பொய்யான செய்தியை சமூக வலைதளங்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

[:]

You may also like...

Leave a Reply