[:en]உள்ளாட்சி தேர்தல் அஞ்சி நடுங்கும் அ.தி.மு.க – ஆர்.கே[:]

Advertisements

[:en]

நாட்டின் மிக அடிப்படையான அமைப்பு உள்ளாட்சித்துறை. அடித்தட்டு மக்கள் வரை அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்றால், மக்கள் அதிகாரம் உண்மையில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் உள்ளாட்சி அமைப்புகளின் ஒழுங்கான செயல்பாட்டில்தான் அது உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதமே உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்திருக்க வேண்டும் அதிமுக அரசால், ஆனால்  அவர்களின் தலைமை வெற்றிடம் ஆனதால் ஜெயலலிதா தயவில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பன்னீர், எடப்பாடி அதை நடத்தி முடிக்கவில்லை. காரணம் இரட்லை சின்னம் முடங்கி கிடக்கிறது.  அது இல்லாமல் மக்களை சந்திக்கும் தைரியம் அதிமுக அரசுக்கு இல்லை என்றே தோன்றுகிறது.

பல கட்டங்கள் நீதிமன்றம் வலியுறுத்தியும், உத்தரவிட்டும் உச்சநீதிமன்றம் வரை  வாதாடிக் கொண்டிருக்கிறதே ஒழிய மக்கள் நல அரசாக செயல்பட்டதாக தெரியவில்லை என்பது உள்ளங்கை  நெல்லிக்கனி.  சிற்றுர்கள், நகராட்சி, மாநகராட்சி என்று பணிகள் நடக்காமல் தெருக்களில் குப்பைகள் அள்ளப்படாமல், சாலை வசதிகள் சரி செய்யப்படாமல் என்று அடிப்படை வசதிகள் எதுவும் சரி செய்யச் சொல்ல ஆளில்லாமல் ஸ்தம்பித்துப் போய் உள்ளது. மத்திய அரசில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெற வேண்டிய நிதிகளை பெற முடியாது வளர்ச்சிப் பணிகள் முடிங்கி கிடக்கிறன.

இவர்கள் வாதாடி, வாதாடி காலத்தை கடத்தி இறுதியாக இப்போது உயர்நீதிமன்றம் இம்மாதம் 19ம் தேதிக்குள் தேர்தல் அறிவிப்பை வெளியிட  வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியுள்ளது. ஆனால் அதற்கான வேலைகள் ஜரூராக நடப்பதாக தெரியவில்லை.  உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.  அதன் கருத்தை கேட்டறிந்து நடத்துவோம் என்கிறார்கள் ஆளும் தரப்பு, தமிழக தேர்தல் ஆணையமோ கலந்து ஆலோசித்து நடத்துவோம் என்கிறது.

ஆட்சியோ  இன்றோ, நாளையோ என்று ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே நீட் தேர்வுக்காக, தங்கை அனிதாவின் மரணத்திற்கு  பிறகு மாணவர்கள் வெகுண்டெழுந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். மெஜாரிட்டி இல்லா அரசு,  எடப்பாடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தினகரன் கோஷ்டியும்,  எடப்பாடிக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்று ஸ்டானினும் சொல்லி வருகிறார்கள். இதற்கிடையே அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம் வருகின்றன 7ம் தேதி முதல் இவர்களால் எதையும் ஒழுங்காக செய்ய முடியவில்லை என்று தெரிந்தும் இந்த ஆட்சியை காப்பாற்ற துடிக்கும் பிஜேபி அரசு.  மக்களோ  ஒழுங்கான ஆட்சி தலைமையில்லாது இந்த ஆட்சி என்று ஒழியும் என்று காத்திருக்கின்றனர். இதில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் அதிமுகவின் பலம் என்ன? பலவீனம் என்ன? கட்சியின் நிலை என்ன என்று பல கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.  நடத்துமா உள்ளாட்சித் தேர்தலை இல்லை நீதிமன்றத்தின் உத்தரவை தடுக்க தமிழக அரசு வழி தேடுமா என்பது சில நாட்களில் தெரியவரும். எப்படியோ இந்த அரசு   பாஜகவின் அடிமையாகிப்போய் தன்  சுயத்தை  முற்று  முழுதாக இழந்து வருகிறது என்பது உண்மை.

 [:]

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com