[:en]போராட்டக் களமாகும் தமிழகம், ஆட்சியாளர்களின்  அலட்சியம் – ஆர்.கே.[:]

Advertisements

[:en]

கடந்த இரண்டு மாத காலமாக தமிழகம் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலிலிதா ஒத்துக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் போராடி வருகின்றனர்.

ஆகக் கூடி மாணவர்கள் ஒரு பக்கம் போராட, ஆசிரியர்கள் ஒரு பக்கம் போராடுகிறார்கள். தமிழக அரசு பள்ளிகெல்லாம் இழுத்து மூடப்பட்டுள்ளன. பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் பிரச்னை நீதிமன்றத்தின் கதவை தட்டியுள்ளது.

இதற்கிடையே ஆசிரியர்களுக்கு பணிக்கு வராத நாட்களுக்கு சம்பளம்  இல்லை என்றும். மருத்துவ விடுப்பு தவிர வேரெந்த விடுப்பும் தரக் கூடாது என்றும்,  அதிகாரிகளுக்கு தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

போராடுவது ஜனநாயக உரிமை என்றாலும், ஆசிரியர்கள்,  அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜக்டோ நடத்தும் இந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தனது கடும் கண்டத்தை தெரிவித்துள்ளது.

தங்களை உச்சபட்ட  அதிகாரம் உள்ளவர்களாக அவர்கள்  கருதிக் கொள்ளக்  கூடாது என்று தெரிவித்துள்ளது. போராட்டக்காரர்களை நேரில் ஆஜராக சொல்லியும் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே போராடும் ஜாக்டோ அமைப்பினர், தாங்கள் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவோம் என்கிறார்கள்.

இதுபோக அரசு போக்குவரத்து ஊழியர் நிறைவேறாத தங்கள் கோரிக்கைக்காக ஒருகிணைந்த போக்குவரத்து தொழிற்சங்கங்கள்  வேலைநிறுத்த போராட்டத்திற்கு,  முன்னறிப்பு கொடுத்துள்ளன. இதன் காரணமாக வருகின்ற 24-ம் தேதி தமிழகம் எங்கும் பேருந்துகள் ஒடாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த எடப்பாடி ஆட்சியில் எல்லாம் சாமான்யன் தலையில்தான் விடிய வேண்டுமா என்று மக்கள் கூக்குரல் எழுப்புகின்றனர்.

ஏற்கனவே கல்வி முடக்கம், அரசு அலுவலங்கள் முடக்கம், போக்குவரத்தும் முடங்கினாள் தமிழகத்தில் அரசு இயந்திரம் எதுவும் இயங்கவில்லை என்று அர்த்தமாகிறது.

தமிழக அரசோ, இன்றோ நாளையோ என்று எடப்பாடி அரசு தொங்கிக் கொண்டுள்ளது. எதிர்கட்சிகளும், முதல்வர் எடப்பாடியை எதிர்க்கும் அதிமுக எம்எல்ஏக்களும்,  ஆட்சிக்கு மெஜாரிட்டி இல்லை. இந்த சட்ட  விரோத ஆட்சியை கவர்னர் அனுமதிக்க கூடாது என்று நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

ஆகக் கூடி நீதிமன்றம் இவர்கள் வேண்டாத  பிரச்னையை தினமும் பிரச்னையாக அலசி ஆராய்வதே வேலையாகி போய், சாமன்யனுக்கு வழக்கை முடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

மொத்தத்தில் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். அரசாங்கத்தை நடத்தி வருபவர்களும், அவர்களுக்கு  பின்னணியாக செயல்படுவர்களும்.  இந்த போக்கு ஆரோக்கியமானதல்ல. ஜனநாயகத்தை சீரழிப்பதாக உள்ளது. சாமன்யன் இங்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாது, குழப்பத்தில் ஆழ்ந்துள்ளான்.

இவையெல்லாம் தவறானவர்களை தேர்தெடுப்பதால் நடப்பது என்பதை உணர்ந்து கொண்டால், ஜனநாயகம் தப்பித்தது.  இல்லையேல் ஜனநாயகம் தோற்றதாக கருதி, அந்த இடத்தை வேறு எதாவது ஒரு சக்தி நிரப்பிக் கொள்ளும்.

 [:]

You may also like...

Leave a Reply