அடுப்பங்கரை
இன்டக்சன் அடுப்பு கேஸ் அடுப்பும் உள்ள இன்றைய நவீன அடுபங்கரை. 20 நிமிடத்திற்கு மேல் எந்த சமயமும் இல்லை இன்றைய நவீன உலகில் . நான்ஸ்டிக் பாத்திரங்கள் குக்கர் மைக்ரோ ஓவன் போன்ற மூடிய பாத்திரத்தில் சமைக்கும் உணவு தான் ஆரோக்கிய உணவு என்று இன்றைய அறிவியல் உலகம் சொன்னால் இதைவிட ஆயிரம் மடங்கு உன்னதமான நம் முன்னோர்களின் சமையல் முறையை பற்றி
சிறு விளக்கம் காலை கதிரவன் படும்படி சானம் மொழுகப்பட்ட அடுப்படி அதன் அருகில் எருமுட்டை வேப்பம்பட்டை விறகு சுள்ளி இது எரிவதர்க்கு முன் வரும் புகை மூட்டம் ஒரு கிருமி கொல்லி
அதன் அருகே இருக்கும் அம்மி ஆட்டுக்கல் உலக்கை போன்றவை அந்த காலத்து பெண்கள் gym .ஒரு அடுப்பில் மண்பானை உலை கொதிக்க மறு அடுப்பில் குழம்பு க்கு தேவையான பொருட்கள் தயாராகும் ரசம் கூட்டு பொரியல் என ஒவ்வொன்றாய் தயாராகும் சீராக முழு கவனமும் சமையல் மீதே இருக்கும், அங்கே எண்ணமே அண்ணமாய் மாறும்.
பயன்படுத்தும் எல்லா பொருளும் மண்பாண்டம் .ஆடுப்போ, விறகு அடுப்பு ஏரியும் அளவை சரி செய்ய வேண்டும் காய்கறி வெட்டுவது முதல் குழம்பு கூட்டுவது வரை எல்லாமே கவனம் வேண்டும் உடலும் மனமும் ஒன்று சேர்ந்து செய்யும் தவம் சமையல் .
10 குழந்தைகள் பெற்று வளரும் தைரியமும் வலிமையும் அப்போது அந்த சமையல் தந்தது உண்மை சொல்லுங்கள் பெண்களை இந்த நாகரிகம் வளர்த்தா தேய்த்ததா
_ சித்திரகாரன்