ஜான்சன் _இவர்தான் இந்தியாவில் முதல் நவோதயா வித்யாலயா பள்ளியின் பிரின்சிபால்

Advertisements

19 -09 -2017 தேதிய குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் திரு ஜான்சன் , அவர்களின் பேட்டி பக்கம் 38- 40 இல் வெளியாகி உள்ளது. திரு ஜான்சன் நாகர்கோயிலை சேர்ந்தவர். இவர்தான் இந்தியாவில் முதன் முதலில் மகாராஷ்டிராவில் அமராவதி என்ற ஊரில் துவங்கப்பட்ட நவோதயா வித்யாலயா பள்ளியின் பிரின்சிபாலாக பணியாற்றியவர். அதனை தொடங்கி வைத்தவர் திரு ராஜீவ் காந்தி அவர்கள். தமிழகத்தில் எதிர்க்கட்சிகளாக இருக்கும் சிலர் நவோதயாவை பற்றி ஏராளம் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுவருகிறார்கள். அந்த பொய்கள் எல்லாம் இவரது பேட்டியால் தவிடு பொடியாகி விட்டன. நவோதயா பள்ளிகளில் நுழைவு தேர்வு தமிழ் உட்பட அந்த அந்த மாநில மக்களின் தாய் மொழியில் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம். நுழைவு தேர்வு கேள்விகள் அந்த அந்த மாநிலத்தின் ஐந்தாம் வகுப்பு பாட நூல்களில் இருந்து தான் கேட்கப்படும். பாண்டிச்சேரியில் கூட இரு நவோதயா வித்யாலயா பள்ளிகள் உள்ளன. அங்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல் ஆகிய பாடங்கள் மட்டுமே கற்பிக்கப்படுகின்றன. ( திமுக அரசோ , திமுக இந்திரா காங்கிரஸ் கூட்டணி அரசோ பாண்டியில் இருந்த போதும், பதவியில் நீண்ட காலம் பதவியில் இருந்த போதும் பாண்டியில் வந்த நவோதயா வித்யாலயாவினை பாண்டியில் இருந்து அப்புறப்படுத்த திமுகவினர் பாண்டியில் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை .) மேலும் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடம் ஆகும். 1 1 , 1 2 ஆகிய வகுப்புக்களில் கூட விரும்பினால் தமிழை ஒரு பாடமாகப் படிக்கலாம். ஆனால் எந்த இடத்திலும் இந்தி ஒரு கட்டாயப்பாடமாக இல்லை. இந்தி பேசும் மாநில மாணவர்கள் அந்த மாநிலங்களில் உள்ள நவோதயா பள்ளிகளில் இந்தியை தங்கள் தாய் மொழி என்பதால் கற்கிறார்கள். எந்தக் கட்டத்திலும் இந்தி என்ற மொழி ஒரு கட்டாயப்பாடமாக இந்தி பேசாத மாநிலங்களில் படிக்கும் நவோதயா பள்ளி மாணவர்களுக்கு கிடையாது. ஆனால் நவோதயா பள்ளிகளில் இந்தி திணிப்பு நடப்பதாக கடந்த 31 ஆண்டுகளாக தமிழக அரசியல்வாதிகள் பொய் சொல்லி வருகிறார்கள். நவோதயா பள்ளியில் படித்த கேரளாவை சேர்ந்த ஒரு மாணவர் பில்கேட்சிடம் வலது கரமாக உள்ளார். மலை ஜாதியினர் மற்றும் பழங்குடியினர் என்ற பிரிவில் வரும் மாணவர்கள் கூட நவோதயாவில் பயின்று ஐ ஏ எஸ் தேர்ச்சி பெற்று மத்திய அரசில் சிறந்த பணி ஆற்றி வருகிறார்கள். இந்தியாவிலேயே சிறந்த போட்டி தேர்வாக கருதப்படும் மதிப்பு மிக்க ஐ ஐ டி மற்றும் ஐ ஐ எம் ( IIT & IIM) ஆகியவற்றுக்கு நடத்தப்படும் நுழைவு தேர்வுகளில் ( JEE & CAT ) எழுபது சதவீத இடங்களை நவோதயா வித்யாலயா மாணவர்கள் தான் கைப்பற்றுகின்றனர். இந்த பள்ளிகளில் 75 சதவீதம் கிராமப்புற மாணவர்களும், 25 சதவீதம் நகர்ப்புற ஏழை மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள். அது தவிர இந்த தேர்விலேயே பெண்களுக்கு என்று 33 சதவீதமும், எஸ் சி / எஸ் டி ஆகியோருக்கு முறையே 15 / 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடுகளும் உண்டு. பாட நூல்கள், உணவு, தங்குமிடம், சீருடை எல்லாமே இலவசம். கல்விக்கட்டணம் பெயரளவுக்குத்தான். அந்த கல்வி கட்டணம் கூட எஸ் சி / எஸ் டி மாணவர்களுக்கு கிடையாது. நீட் தேர்வில் கூட 83 சதவீத இடங்களை நவோதயா வித்யாலயா மாணவர்கள்தான் வென்றுள்ளனர். கேந்திரீய வித்யாலயாக்களில் வசதி உள்ளவர்கள் மற்றும் மத்திய அரசு பணியாளர்களின் குழந்தைகள் மட்டுமே படிக்க இயலும். மேலும் கேந்திரீய வித்யாலயாக்களில் மாவட்ட ஆட்சித்தலைவர், எம் பி, கேந்திரீய வித்யாலயாவின் முதல்வர் ஆகியோருக்கு கோட்டா உண்டு. ஆனால் நவோதயா வித்யாலயா வுக்கு நடைபெறும் நுழைவு தேர்வில் யாருக்கும் எவ்வித கோட்டாவும் இல்லை. முற்றிலும் ஏழை மாணவர்களே பயன் பெறுவார்கள். இத்தகைய நவோதயா வித்யாலயாக்களை தமிழகம் பெறமுடியாதபடி, கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது, 1 9 8 9 ஆம் ஆண்டு தடுத்தார். இப்போது மதுரை உயர்நீதி மன்றக்கிளை போட்டுள்ள உத்தரவால் தமிழகத்துக்கு நல்ல காலம் பிறந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இந்த நவோதயா அமல் பற்றி வழக்கு தொடர்ந்த குமரி மகா சபா அமைப்புக்கும் அதன் பின்னணியில் வழிகாட்டிய திரு ஜான்சன் அவர்களுக்கும் தமிழக ஏழை மக்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டு உள்ளனர். நவோதயாவில் ஏழை மாணவர்களுக்கு மட்டும் தான் அட்மிஷன் என்பதால் தான் தமிழக அரசியல்வாதிகள் இதனை எதிர்க்கிறார்கள்.நன்றி

You may also like...

Leave a Reply