​யோசிக்க வைக்கும் சிறு கதை !!

Advertisements

? ஒரு இருட்டு அறை… அந்த அறையில் நான்கு மெழுகுவர்த்திகள் பிரகாசமாக எரிந்து கொண்டு இருந்தன. 
? அவை ஒன்றோடு ஒன்று பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியாக இருந்தன.
? அப்போது அந்த அறையின் ஜன்னல் பகுதியின் வழியாக காற்று வீசியது. மெழுகுவர்த்திகள் பயந்து விட்டன.
? காற்றை கண்டதும் அமைதி என்ற முதல் மெழுகுவர்த்தியானது பயத்துடன், 
? ஐயோ ! காற்று வீசுகிறது… நான் அணைந்து விட போகிறேன் என்று சோகமாக கூறியது.
? அதன் மீது காற்று பட்டதும் மெழுகுவர்த்தி அணைந்துவிட்டது…!! 
? அடுத்து இரண்டாவதாக அன்பு என்ற மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்த்து நிற்க முடியாது என்று பலவீனமாக கூறியது.
? கூறியவுடன் அணைந்து விட்டது…!!
? இந்த இரண்டு மெழுகுவர்த்தியும் அணைந்ததை பார்த்ததும் மூன்றாவதாக அறிவு என்ற மெழுகுவர்த்தியும் பயந்து விட்டது.
? என்னாலும் காற்றை எதிர்க்க முடியாது என்று கூறியவுடன் அணைந்து விட்டது…!!
? இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சிறிது நேரம் காற்றுடன் போராடியது.
? அந்த போராட்டம் சில நிமிடங்கள் தான்…. பின் அது பிரகாசமாக எரிய ஆரம்பித்தது.
? அப்பொழுது அந்த அறைக்குள் ஒரு சிறுவன் நுழைந்தான். மூன்று மெழுகுவர்த்திகள் அணைந்து இருப்பதை பார்த்து, 
? அடடா…! மூன்று மெழுகுவர்த்திகள் அணைந்து விட்டதே என்று வருத்தத்துடன் கூறினான்.
? அப்பொழுது அணையாமல் எரிந்து கொண்டு இருந்த மெழுகுவர்த்தி அச்சிறுவனிடம்,
? கவலைப்படாதே… நான் இருக்கிறேன். என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துக்கொள், என்று கூறியது.
? உடனே அந்த சிறுவன்,
? உன் பெயர் என்ன? என்று நான்காவது மெழுகுவர்த்தியிடம் கேட்டான்.
? அதற்கு அந்த மெழுகுவர்த்தி, ‘என் பெயர் நம்பிக்கை” என்று கூறியது.
? அதற்கு அந்த சிறுவன் மெழுகுவர்த்தியிடம், நீ எப்படி அணையாமல் இருக்கிறாய் என்று இப்பொழுது தான் தெரிகிறது எனக் கூறினான்…
? வாழ்க்கையும் அவ்வளவு தான். நாம் எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கக்கூடாது.
? நம்பிக்கை இருந்தால் எதிலும் போராடி வெற்றி பெறலாம் என்பதை இந்த மெழுகுவர்த்தி அழகாக கூறியுள்ளது…!!!!

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com